உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாட்டுக் கொழுப்பு விவகாரம்: சந்திரபாபு சொல்வது பொய்; சத்தியம் செய்கிறார் ஜெகன்மோகன்!

மாட்டுக் கொழுப்பு விவகாரம்: சந்திரபாபு சொல்வது பொய்; சத்தியம் செய்கிறார் ஜெகன்மோகன்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விஜயவாடா: '' தனது ஆட்சியில் ஏற்பட்ட தோல்விகளை மறைக்கவே முதல்வர் சந்திரபாபு நாயுடு, லட்டுவில் மாமிச கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டது என்று கட்டுக்கதையை கட்டவிழ்த்துவிட்டுள்ளார்,'' என முன்னாள் முதல்வரும், ஓய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார்.

திசைதிருப்பல்

இது தொடர்பாக நிருபர்களிடம் கூறியதாவது: சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வந்தது முதல் விவசாயிகள் பலரும் வீதிக்கு வந்துள்ளனர். ⁠தர்மத்துக்கு எதிரான செயல்பாடுகள் தற்போதைய ஆட்சியில் அதிகரித்துள்ளது. ⁠பொய் வழக்குகளை போடுவதையே முதன்மையானதாக கொண்டுள்ளார் சந்திரபாபு நாயுடு. அவரின் குற்றச்சாட்டை மறுக்கிறேன்; அவர் அனைத்து விசயங்களையும் திசை திருப்புகிறார். ⁠ஆந்திராவில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதை திசை திருப்பவே எங்கள் மீது குற்றச்சாட்டு.

மோசமான அரசியல்

மோசமான பிரசாரங்களில் ஈடுபட்டு ஆட்சிக்கு வந்தார். அனைத்து துறைகளும் மோசமாக செயல்படுகின்றன. நிர்வாக திறன் இல்லாததால் செயற்கையாக உருவாக்கப்பட்ட வெள்ளம் வந்தது. இதனால், பலர் உயிரிழந்தனர். எனது ஆட்சியில் வீடு தேடி வந்த ரேசன் பொருட்களை தற்போது நிறுத்திவிட்டனர். சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாக குறைபாட்டை மறைக்க திசைதிருப்பும் முயற்சியில் அவர் ஈடுபடுகிறார். மோசமான அரசியலுக்கு கடவுளின் பெயரால் அரசியல் செய்கிறார். கடவுளை கூட அரசியலுக்கு இழுத்து வந்து திசைதிருப்பும் வல்லமை பெற்றவர் அவர். அவர் கூறும் அனைத்துமே கட்டுக்கதை. எனது ஆட்சிகாலத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. மக்களை திசைதிருப்பவே கட்டுக்கதைகளை கட்டவிழ்த்துவிடுகிறார். இப்படியெல்லாம் பொய் சொல்வது தர்மமா?

கட்டுக்கதை

ஒவ்வொரு 6 மாதமும் நெய் வாங்குவதற்கு ஆன்லைனில் டெண்டர் விடுவது வழக்கம். இதில், தரம் பார்த்து வாங்குவதில் நாங்கள் எதையும் மாற்றவில்லை. லட்டுக்கான நெய் விநியோகத்தில் வழக்கமாக பின்பற்றப்படும் நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது. ஒவ்வொரு டேங்கரில் வரும் நெய்யும் என்ஏபிஎல் சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும். சான்றிதழ் பெற்றாலும் 3 வித சோதனையில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே உரிய பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படும். இத்தனை சோதனைக்கு பிறகும் அனுமதிக்கப்படும் நெய்யில் கலப்படம் என்பது கட்டுக்கதை இல்லையா

மவுனம் ஏன்

தேவஸ்தானத்தில் முந்தைய சந்திரபாபு ஆட்சி காலத்தில் 15 முறை தரமற்ற நெய் நிராகரிக்கப்பட்டது. எனது ஆட்சிக்காலத்தில் 18 முறை நிராகரிக்கப்பட்டது.அவர் தனது கற்பனையை இறக்கை கட்டி பறக்க விடலாமா? ஜூலை 12ல் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட தினத்தில் சந்திரபாபு தான் முதல்வராக இருந்தார். பரிசோதனை செய்த இத்தனை நாட்கள் அவர் மவுனம் காத்தது ஏன்? இவ்வாறு ஜெகன்மோகன் ரெட்டி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

ஆரூர் ரங்
செப் 21, 2024 14:11

இந்தப் பிரச்னைகளை தவிர்க்கவே ஒரு படத்தில் விவேக்குக்கு லட்டுக்கு பதில் ஜிலேபி பிரசாதமாக கொடுத்தாங்க. ஒரு வேளை ஜிலேபி க்கு மாறியிருந்தாலும் கலப்படம் இருந்திருக்குமோ?


Nandakumar Naidu.
செப் 21, 2024 01:45

எந்த காலத்தில் தவறு செய்தவன், தன் தவறை ஒப்புக்கொண்டுள்ளனர்? இவன் ஒரு ஹிந்து விரோதி, செய்திருப்பான். அப்படி செய்திருந்தால் இவனுக்கு கடவுள் வெங்கடேச பெருமாள் மிகவும் பயங்கரமான ஒரு தண்டனையை கொடுப்பார்.


venugopal s
செப் 20, 2024 22:43

பேசாமல் சி பி ஐ யிடம் இந்தப் பிரச்சினையை ஒப்படைத்து விடலாம்!


Yaro Oruvan
செப் 20, 2024 20:55

ஏசப்பா ...என்னப்பா இது. சத்தியம் எல்லாம் உங்க பரலோகத்துல கெடயாதே ??? அப்புறம் எப்படி உள்ளூர்ல காசுக்கு மாறடிக்கிற ஏமாத்து மதமாரி கும்பல் திருவிழாங்கிறான் .. தேர் விடுரான் .. கொடி கட்டுறான் .. பல்லக்கு விடுறான்.. காவடி அக்கினி சட்டி எடுத்து அலகு குத்தி ஏசப்பாவை வேண்டுறான் காப்பி கேட் கும்பல்.. இவன் என்னடான்னா சத்தியம்ங்கறான் பொது மன்னிப்பு கொடுத்திருங்க ஏசப்பா.


Ramesh Sargam
செப் 20, 2024 20:31

அரசியல் என்றாலே சாக்கடை என்று எல்லோருக்கும் தெரியும். இப்பொழுது அந்த அரசியல் சாக்கடை மிக மிக மோசமாக துர்நாற்றம் அடிக்க ஆரம்பித்துவிட்டது. பகவான் வெங்கடேஸ்வரனுக்கு படைக்கப்படும் லட்டில் கலப்படமா.....? நீங்கள் உருப்படுவீர்களா...


நிக்கோல்தாம்சன்
செப் 20, 2024 19:53

மிக மோசமான நம்பிக்கை துரோகம் ஜெகன் ரெட்டி , மக்களின் நம்பிக்கையை எவ்வளவு கீழ்த்தரமான யோசனை மூலம் சிதைத்துள்ளீர்கள். இது மிகவும் கேவலம்


J.V. Iyer
செப் 20, 2024 18:36

முன்னாள் முதல்வர் ஜெகன் யார்யாரை கோவில் தர்மகர்த்தா கமிட்டியில் போட்டிருக்கிறார் என்று தெரிந்தால் இவர் வண்டவாளம் தெரியும். கைப்புண்ணிற்கு ஏன் கண்ணாடி?


Lion Drsekar
செப் 20, 2024 18:31

ஐந்து நிமிடத்தில் உண்மையை முதல்வர் நாட்டுக்கு வெளிக்காட்டலாமே, எவ்வளவு மீன் எண்ணெய் , மாட்டுக்கொழுப்பு எங்கிருந்து வாங்கப்பட்டது என்ற விபரங்களை ஒரு நொடியில் வெளிச்சத்துக்கு கொண்டுவரலாம் . வந்தே மாதரம்


KayD
செப் 20, 2024 18:22

திருப்பதி லட்டு வச்சி அந்த ஊரில் அரசியல் கூடிய விரைவில் பழனி பஞ்சாமிர்த்த்ம ஒரு அரசியல் எதிர் பார்க்கலாம் போல. பஞ்சாமிர்தம் செய்யும் ஆட்கள் வேற வேற மத ஆட்கள் இருக்காங்க இல்லை அது போதாதா game aa start panna .. God Venky and God Palani சும்மா தான் இருப்பாங்க இவுங்கள் வேடிக்கை பார்த்து சிரிச்சிட்டு ஒரு திருவிளையாடல் மாதிரி .... பழனி முருகா திருப்பதி வெங்கடேசா இந்த கோடிகளை காப்பாற்றும்


Sudha
செப் 20, 2024 18:09

நாயுடு பொய் சொன்ன பட்சத்தில் இதுவே ஹிந்துக்கள் அனுபவித்த மிகப்பெரிய அவமானம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை