உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறந்த துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் இருப்பார்: பிரதமர் மோடி

சிறந்த துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் இருப்பார்: பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தேஜ கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணன், சிறந்த துணை ஜனாதிபதியாக இருப்பார் என்று மக்கள் நம்புகிறார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.துணை ஜனாதிபதி தேர்தல் நாளை( செப்.,09) நடைபெற உள்ளது. இதில் எப்படி செயல்படுவது என்பது குறித்து பாஜ எம்பிக்களுக்கு பயிற்சி நடந்தது. இன்று தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தேஜ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், முன்னாள் பிரதமர் தேவகவுடா, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்துக்கு பிறகு பிரதமர் மோடி வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: டில்லியில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்றேன். இதில் தேஜ கூட்டணி குடும்பத்தினர் அனைவரும் பங்கேற்றனர். துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சி.பி. ராதா கிருஷ்ணன் அனைவரிடமும் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளார். அவர் சிறந்த துணை ஜனாதிபதியாக இருப்பார் என்றும், தனது அறிவு மற்றும் நுண்ணறிவால் துணை ஜனாதிபதி பதவியை வளப்படுத்துவார் என்றும் மக்கள் நம்புகிறார்கள். இவவாறு அவர் கூறியுள்ளார்.https://x.com/narendramodi/status/1965077542584422593 இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாக வெளியான தகவலில் கூறப்பட்டு உள்ளதாவது: உள்நாட்டு பொருட்களை ஊக்குவிக்க தேசிய ஜனநாயக எம்பிக்கள், 'சுதேசி மேளா'விற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ஜிஎஸ்டி மறுசீரமைப்பு தொடர்பாக வர்த்தகர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும். மத்திய அரசு எடுத்த ஜிஎஸ்டி குறைப்பு மூலம் ஒரு அலை உருவாகி உள்ளது. இதனை கூட்டங்கள் நடத்தி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். மேட் இன் இந்தியா தயாரிப்பை ஊக்கப்படுத்த எம்பிக்கள் தங்களது தொகுதிகளில் சிறப்பு கண்காட்சியை நடத்த வேண்டும். துணை ஜனாதிபதி தேர்தலில் எம்பிக்கள் அனைவரும் தங்களது ஓட்டை சரியான முறையில் பதிவு செய்துள்ளதை உறுதிப்படுத்த வேண்டும். ஒரு ஓட்டும் வீணாகக்கூடாது. இவ்வாறு பிரதமர் மோடி பேசியதாக அந்த தகவலில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

V Venkatachalam
செப் 09, 2025 16:15

திரு சி பி இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..தங்களுக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. தாங்கள் அறியாததல்ல. கான்+கிராஸ் காரனுங்களும் அவன்களுடன் சேர்ந்து கும்மியடிப்பவன்களும் சபையை நடத்தவிடாமல் எத்தனை இடையூறுகள் செய்ய முடியுமோ அத்தனை கள்ளத்தனமும் செய்வான்கள். இவனெல்லாம் இடையூறு செய்கிறானோ அவன்களை குண்டுகட்டாக தூக்கி வெளியில் வீசுங்கள். அவன்களின் சம்பளம் படி மற்றபடி அவன்களுக்கு வழங்கும் ஃப்ரீ சமாச்சாரம் பென்சன் உட் பட அத்தனையும் கட் பண்ணுங்கள். இதை முதல் கூட்டத்திலேயே பண்ணுங்கள். பிளீஸ். நாடே ஒழுங்காயிடும்.


Tamilan
செப் 09, 2025 08:58

நாட்டை பாராததாயின் மடியை அந்நியர்களுக்கு தாரை வார்த்து நாட்டில் உற்பத்தியாவதில் அந்நியராகள்தான் நேரடியாகவோ மறைமுகமாகவோ பெரும் பங்கு வகிக்கின்றனர். இது பார்த்தாயா வித்தியாசமே தெரியாமல் மாற்றிவிட்டார்கள்


pmsamy
செப் 09, 2025 06:52

எந்த துணை ஜனாதிபதியாக இருந்தாலும் வாலை சுருட்டிக்கொண்டு ஜனநாயக வழியில் வேலை செய்ய வேண்டும்


அப்பாவி
செப் 09, 2025 05:40

தங்கர் வந்த போதும்.இதே பல்லவிதான் பாடினாங்க..


Kasimani Baskaran
செப் 09, 2025 04:09

இதே போல பஜக வினர் ஒவ்வொருவராக வேறு பதவிகளுக்கு அனுப்பி விட்டு அதன் பின்னர் தமிழக பாஜகவை வளர்க்கலாம் என்று மோடி நினைக்கிறாரோ என்ற சந்தேகம் எனக்கு உண்டு.


Ramesh Sargam
செப் 09, 2025 00:20

திரு ராதாகிருஷ்ணன், சிறந்த துணை ஜனாதிபதியியாக இருப்பார். முந்திய துணை ஜனாதிபதி திரு ஜெகதீப் தங்கார் மாதிரி பதவி முடிவதற்கு முன்பே உடல் நலம் சரியில்லை என்று பொய்க்காரணம் காட்டி பதவியிலிருந்து கட்டாயம் விலகமாட்டார் .


சமீபத்திய செய்தி