உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீதிபதிகளுக்கு நெருக்கடி: சந்திரசூட் வெளிப்படை

நீதிபதிகளுக்கு நெருக்கடி: சந்திரசூட் வெளிப்படை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, தனியார் அமைப்பை சேர்ந்தவர்களும் நீதித்துறைக்கு நெருக்கடி கொடுக்கின்றனர்,'' என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியுள்ளார்.டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: சில தனியார் அமைப்புகள் செய்தி மீடியா மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் நீதிபதிகளுக்கு நெருக்கடியை உணரும் சூழ்நிலையை உருவாக்குகின்றனர்.இன்றைய சுதந்திரமான காலகட்டத்தில் ஒருவர் விமர்சனத்திற்கு உள்ளாகிறார் அல்லது சமூக வலைதளங்களில் 'டுரோல் ' செய்யப்படுகிறார்.அரசின் எண்ணத்திற்கு எதிராக தீர்ப்பு வழங்குவதை வைத்து மட்டும் நீதித்துறையின் சுதந்திரத்தை பார்க்கக்கூடாது. நிர்வாக ரீதியில் சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் தலைமை நீதிபதிகள் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும். நீதித்துறை மற்றும் நிர்வாகத்துறை பிரச்னைக்கு தீர்வு காண அரசுடன் ஆலோசனை நடத்துவது முக்கியம். நீதிபதிகளை தேர்வு செய்வதில் சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் - மத்திய அரசுக்கு இடையிலான மோதலில் எனது கழுத்து பல முறை தலைப்பு செய்தியாக மாறியது. இதில் நேர்மையுடனேயே செயல்பட்டு உள்ளேன். அனைத்து பிரச்னைகளும் பேசி தீர்க்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

10 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு

சந்திரசூட் மேலும் பேசியதாவது: ஒவ்வொரு ஆண்டும் வழக்குகளில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது நீதிமன்றங்களுக்கு சவால் ஆனதாகவே இருந்து வருகிறது. 2020 ஜன.,1 அன்றைய நிலவரப்படி 79,528 வழக்குகள் நிலுவையில் இருந்தது. 2022 ஜன.,1ல் 93,011 வழக்குகள் நிலுவையில் இருந்தன. 2024நவ.,1 நிலவரப்படி 82,885 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 10 ஆயிரம் வழக்குகள் குறைந்துள்ளன. இவ்வாறு சந்திரசூட் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

என்றும் இந்தியன்
நவ 10, 2024 18:45

நீதிபதிகளுக்கு நெருக்கடி பெட்டி கொடுத்து : சந்திர சூட் வெளிப்படை. பெரிய பெட்டியா சின்ன பெட்டியா எதற்கு தீர்ப்பு எழுதுவது என்று தெரியாமல் நெருக்கடி என்று எல்லோரும் உள் அர்த்தம் அறிந்து கொள்ள வேண்டும்


அப்பாவி
நவ 10, 2024 18:09

ரிடையராச்சு. ஏதாவது பதவி கிடைக்கலேன்னா விமர்சனங்ஜள் தொடரும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 10, 2024 15:49

காயப்படுத்தி இருந்தால் மன்னித்து விடுங்கள்: தலைமை நீதிபதி உருக்கம் .... கைதேர்ந்த தில்லாலங்கடி அரசியல்வாதி ....


Jay
நவ 10, 2024 14:44

நீதித்துறை மர்மங்களுக்கு என்றும் காரணம் தெரியப்போவதில்லை. தண்டனை பெற்ற பொன்முடிக்கு பதவி செய்து வைக்க வேண்டும் என்று உத்தரவு, தனது தம்பி ஆஜராகாமலேயே இழுத்து அடித்து ஜாமீன் பெற்றவர் செபா, கணக்கு பிழையில் ஜே விடுவிப்பு, தவறு செய்தார் என்று நிரூபிக்கப்பட்ட பின்பும் ஜெயின் சொத்து பறிமுதல் செய்யாதது, 2ஜி வழக்கில் பணம் எங்கிருந்து யார் மூலமாக எப்படி சென்றது என்று ஆதாரப்பூர்வமாக தெரிந்த பிறகும் எந்த தண்டனையும் கிடைக்காதது, மாட்டு தீவனம் ஊழல் வழக்கில் தண்டனை மேல் தண்டனை வந்து பிறகும் முழு நேர அரசியலில் இருக்கும் லாலு, டெக்கான் வழக்கில் அப்பட்டமாக ஊழல் நடந்த பிறகும் எந்த தீர்ப்பும் வராதது. இரண்டு வருடங்களுக்கு மேல் தண்டனை பெற்ற பப்பு இரண்டு தொகுதிகளில் இன்று வெற்றி பெறுவது..... இந்த மர்மங்களுக்கு எல்லாம் என்றும் தீர்வு, காரணம் தெரியப்போவதில்லை. சட்டம் தண்டனை கொடுப்பதெல்லாம் பாமரனுக்கு மட்டும்தான்....


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 10, 2024 15:51

சுருங்கக்கூறின் தேசத்தின் எதிரிகளைக் காப்பாற்றியவர் .....


Dharmavaan
நவ 10, 2024 18:58

எல்லா தீர்ப்புகளும் திமுக சாதகம் மாநில ஆதரவு அதுவே பிரிவினை வாத ஆதரவு


rajan
நவ 10, 2024 14:19

மோடி மற்றும் பிஜேபி ஆர்எஸ்எஸ் கொள்கைபடி ஆர்எஸ்எஸ் சங்கிகளை இந்தியாவிலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நீதிபதிகளாக பொம்மை ஜனாதிபதி உத்தரவிடவேண்டும் இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கும் பொறுப்பை சங்கிகள் செய்ய வேண்டும் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்கள், தொண்டர்கள் அனைவரையும் தேச விரோதி என்று விசாரணை இல்லாமல் தீர்ப்பளிக்கவேண்டும் அனைத்து எதிர்க்கட்சியினர் சொத்துக்களை புல்டோசர் கொண்டு தரை மட்டமாக்க வேண்டும்


karupanasamy
நவ 10, 2024 13:32

காண்கிறாசா, கம்மீஸானு கன்பூசுல இருக்கான்.


Dharmavaan
நவ 10, 2024 12:35

சொல்வது எல்லாம் பொய .வரம்பு மீறிய பேச்சு.மோடிக்கு துணிவில்லை கட்டுப்படுத்த


Smba
நவ 10, 2024 12:12

தமிழக விடியலில் அதிகம்


GMM
நவ 10, 2024 12:01

நீதிபதிக்கு நெருக்கடி என்ற மாய வாத வழிகாட்டி கொலிஜியம் முறை. கொலிஜியம் பின்பும் நெருக்கடி என்றால், கொலிஜியம் தேவையில்லை. அயோத்தியில் கோவில் இடிப்புக்கு நிர்வாக நடவடிக்கை எடுக்க ஆதாரம் போதும். நீதிமன்ற தீர்ப்பு சட்ட ஒழுங்கிற்கு உதவியது. ஜெயா டிக்கெட் இல்லாமல் சென்னை வரவில்லை. ஆட்சிக்கு முன் செல்வ செழிப்பு. வாரிசு இல்லை. ஒரு பைசா தேவையில்லை. ஊழல் புரிந்த நிழல் உலக திராவிடர் யார்? வாதத்தின் அடிப்படையில் தீர்ப்பு. சட்ட, நியாய அடிப்படையில் அல்ல என்று எளிதில் புரியும் . ? மாநில நிர்வாகத்தை அரசு என்கிறீர்கள். சாசன பொருளை திரித்து விளக்கம் தந்து ஏற்க கட்டாய படுத்தி விட்டீர்கள். மாநிலம் பாராளுமன்ற சட்டத்தை ஏற்கலாம், மறுக்கலாம் என்கிறீர். பொது சிவில் சட்டம், ஒரே தேர்தல், குடியுரிமை , அனைத்திற்கும் மன்றம் முட்டுக்கட்டை. நீதிபதி தேர்வு , நீதிமன்ற சீர்த்திருத்தம் அவசியம்.


Dharmavaan
நவ 10, 2024 12:39

இவர் ஒரு பிரிவினைவாதி இடதுசாரி ஆதரவாளர். நாட்டை துண்டாட மத்திய அரசை நீர்த்து போக செய்ய சதி...தண்டிக்கப்பட வேண்டியவர் நீதி பதி.கேவலம்


Narasimhan
நவ 10, 2024 11:52

நிரபராதிக்கு தண்டனை கொடுப்பது. மக்கள் கண் முன்னே கொள்ளையடிப்பவன், கொலை செய்பவனுக்கு ஜாமீன் கொடுப்பது. வெளங்கிடும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை