உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அக்., மாதத்தில் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்தது

அக்., மாதத்தில் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்தது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட பதற்றம் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டதால் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்தது. ரஷ்யா, ஈராக், சவுதி அரேபியா, யுஏஇ மற்றும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்வது குறைந்தது தெரியவந்துள்ளது.இது தொடர்பாக கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பான தகவல்கள் மூலம் கிடைக்க பெற்ற விவரம்: அக்., மாதம் 43.5 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெய் தினமும் இந்தியா இறக்குமதி செய்துள்ளது.இதில் 40 சதவீதம் 17.3 லட்சம் பேரல்கள் தினமும் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. இது முந்தைய மாதத்தை காட்டிலும் 9.2 சதவீதம் குறைவு ஆகும்.அதேபோல் ஈராக்கில் இருந்து 3.3 சதவீதம் குறைந்து 8.4 லட்சம் பேரல்கள் சவுதி அரேபியாவில் இருந்து 10.9 சதவீதம் குறைந்து 6.5 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெய் தினமும் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது.இது தொடர்பாக ஆய்வை நடத்தியவர்கள் கூறுகையில், ஈரான் -இஸ்ரேல் இடையிலான மோதல் மற்றும் தாங்கள் எதிர்பார்த்த விலை கிடைக்கும் போது கொள்முதல் செய்யலாம் என எண்ணெய் சுத்திகரிப்பு உரிமையாளர்கள் முடிவு செய்ததால் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்தது. குளிர்காலத்தின் தேவைக்காக கச்சா எண்ணெயை வாங்க அவர்கள் முடிவு செய்துள்ளதால், வரும் நாட்களில் இறக்குமதி மீண்டும் அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

பாமரன்
நவ 03, 2024 13:42

இந்த துறைக்கு மற்றும் விமான போக்குவரத்து துறைக்கும் அமிச்சர்ங்க எதுக்கு இருக்காங்க... என்ன செய்யறாங்கன்னு யாராவது பகோடாஸ் சொன்னால் நல்லாயிருக்கும்...எங்கூரு அஞ்சாநஞ்சு அமிச்சரா இருந்து சாப்பிட்ட மிக்சர் கூட கம்மியா தான் இருக்கும் போல...இதுகளை கம்பேர் பண்றப்போ....


சாமிநாதன்,மதகுபட்டி
நவ 03, 2024 14:17

பக்கோடா விக்கிற பாமரப் பயபுள்ளைக்கு இம்பூட்டு அறிவா?


Rpalnivelu
நவ 03, 2024 13:19

200 ரூவா டபுள் தடவை வாங்கிட்டியா? கொடுத்த காசுக்கு மேல கூவினத்துக்கு கை மேல் பலன். ஜமாய்


பாமரன்
நவ 03, 2024 13:39

பழனிவேலு... நீர் தானே பெரிய ஜி இந்தியாவின் தேசத்தந்தை அப்பிடின்னு அறிவிக்க சொன்னது...


Apposthalan samlin
நவ 03, 2024 12:14

கச்சா எண்ணெய் விலை குறையும் பொழுது குறைக்க வேண்டும் கூட்டும் பொழுது கூட்ட வேண்டும் இப்படி தான் பிஜேபி சொன்னது ஆனால் விலை கூடு பொழுது கூடுவது குறையும் பொழுது குறைப்பது இல்லை. vote போட ஹிந்துக்களுக்கு செய்கிற துரோகம் .பிஜேபி அரசு பெட்ரோல் டீசல் காஸ் இல் கொள்ளை லாபம் அம்பானிக்கு ஆக பார்க்கிறது. gst விலை குறையும் என்று ஏமாத்தினத்தை போல் உள்ளது .


செல்வராஜ்,கடமலைக்குண்டு
நவ 03, 2024 14:21

அப்பத்துக்கு மதம் மாறிய உனக்கு இந்துக்களை பற்றி அப்படி என்ன கவலை?


N Sasikumar Yadhav
நவ 03, 2024 22:34

விலை குறையாமல் இருந்ததால்தான் ஊழல்மிகு இத்தாலிய கான்கிராஸ் அடகு வைத்த சொத்துக்களை மோடிஜி தலைமையிலான மத்தியரசு மீட்டது இதை பொறுக்காமல் புலம்புகிறது ஒரு கும்பல்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை