உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மோந்தா புயல் எதிரொலி; இன்று 43 ரயில்கள், விமானங்கள் ரத்து

மோந்தா புயல் எதிரொலி; இன்று 43 ரயில்கள், விமானங்கள் ரத்து

புதுடில்லி: மோந்தா புயல் எதிரொலியாக ஆந்திராவில் இன்று (அக்டோபர் 28) 43 ரயில்கள் மற்றும் விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.தென்கிழக்கு வங்கக்கடலில் மோந்தா புயல் உருவாகி உள்ளது. ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே, காக்கி நாடாவுக்கு அருகே தீவிர புயலாக இன்று (அக்டோபர் 28) மாலை அல்லது இரவில் கரையை கடக்க வாய்ப்புள்ளது.தற்போது மோந்தா புயல் ஆந்திரப் பிரதேச கடற்கரையை நெருங்கி வருகிறது. இதனால், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று அக்டோபர் 28ம் தேதி விசாகப்பட்டினம் வழியாகச் செல்ல திட்டமிடப்பட்டிருந்த 43 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.விசாகப்பட்டினம் விமான நிலையத்திலிருந்து செல்லும் அனைத்து இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அனைத்து இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களும் தரையிறக்கப்பட்டன.இன்று (அக்டோபர் 28) விஜயவாடா விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதன் விபரம் பின்வருமாறு:* IX 2819 விசாகப்பட்டினம்- விஜயவாடா* IX-2862 விஜயவாடா- ஹைதராபாத்* TX-2875 பெங்களூரு- விஜயவாடா* TX-2876 விஜயவாடா- பெங்களூரு* IX-976 ஷார்ஜா-விஜயவாடா* IX-975 விஜயவாடா-ஷார்ஜா* IX2743 ஹைதராபாத்-விஜயவாடா* T X-2743 விஜயவாடா-விஜாகாடா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

rajesh
அக் 27, 2025 23:43

முன்னெச்சரிக்கை நடவடிக்கை கட்டாயம் எடுக்க வேண்டும்


rajesh
அக் 27, 2025 22:57

முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை