உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆம் ஆத்மி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

ஆம் ஆத்மி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை ஆளும் ஆம்ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது.70 தொகுதிகளைக் கொண்ட டில்லி சட்டசபைக்கு வரும் ஜனவரி மாதம் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிகிறது. இந்தத் தேர்தலில் லோக்சபா தேர்தலைப் போல அல்லாமல், சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக ஆம்ஆத்மி தெரிவித்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8ytkpl25&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஊழல் வழக்கில் கைதாகி, முதல்வர் பதவியை கெஜ்ரிவால் இழந்துள்ள நிலையில், ஆம்ஆத்மி சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால், தலைநகருக்கான தேர்தல் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. தேர்தலுக்கு ஆயத்தமாகி வரும் ஆம்ஆத்மி கட்சி, ஏற்கனவே 3 கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடப்பட்டு விட்டது. இந்த நிலையில், 4வது மற்றும் கடைசி வேட்பாளர் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 38 வேட்பாளர்கள் கொண்ட இந்தப் பட்டியலில் ஆம்ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் புதுடில்லி தொகுதியிலும், முதல்வர் அதிஷி கல்காஜி தொகுதியிலும், சவுரவ் பரத்வாஜ் கைலாஷ் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். பா.ஜ.,வில் இருந்து விலகி இன்று மனைவியுடன் ஆம்ஆத்மியில் சேர்ந்த ரமேஷ் பெல்வான், கஸ்தூர்பா நகர் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

பேசும் தமிழன்
டிச 16, 2024 11:30

டில்லி மக்கள்.... ஒன்று பிஜெபி கட்சிக்கு ஓட்டு போடுங்கள் அல்லது கான் கிராஸ் கட்சிக்கு ஓட்டு போட்டு விடலாம்.... தப்பி தவறி ஆம் ஆத்மி கட்சிக்கு ஓட்டு போட்டால்.... இவர்கள் கான் கிராஸ் கட்சிக்கு தான் பல்லக்கு தூக்க போகிறார்கள்.....எதற்க்கு காதை சுற்றி மூக்கை தொட்டு கொண்டு ????


Rajan
டிச 15, 2024 20:37

ஆம் ஆத்மி இறுதி தேர்தல்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை