உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பள்ளிக்கூடம் போக பிடிக்கலையாம்; சின்னப்பையன் சேட்டையை பாத்தீங்களா!

பள்ளிக்கூடம் போக பிடிக்கலையாம்; சின்னப்பையன் சேட்டையை பாத்தீங்களா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் தனியார் பள்ளி ஒன்றுக்கு, இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. விசாரணையில், 14 வயது சிறுவன் தினமும் பள்ளிக்கு செல்வது பிடிக்காமல் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. டில்லியின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு, இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. பள்ளியில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினர். சந்தேகத்திற்கிடமான எந்த பொருளும் சிக்கவில்லை. இதனால் புரளி என உறுதியானது.

வெடிகுண்டு மிரட்டல்

போலீசார் நடத்திய விசாரணையில், 14 வயது சிறுவன் பள்ளிக்குச் செல்லும் மனநிலையில் இல்லாததால் பல பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்தது தெரியவந்தது. தீவிரமாக விசாரணை நடத்தி வரும் டில்லி போலீசார், 'சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்' என உறுதியளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

RAMAKRISHNAN NATESAN
ஆக 03, 2024 14:15

சின்னப்புள்ள பேரைப்போடாமே மொக்க டைட்டில் மட்டும் கொடுப்போம் .....


Senthoora
ஆக 03, 2024 15:02

எதுக்கு பெயர் வேணும். சிறுவன் எதிர்காலம் கருதப்பட்டுள்ளது. பெயரை சொன்னால் அவன் மூர்க்கன், சங்கி, திராவிடன், திமுக அல்லக்கை இப்படி எல்லாம் எழுத்தமுடியவில்லையே என்று கவலை.


RAMAKRISHNAN NATESAN
ஆக 03, 2024 14:14

பையன் பேரை குறிப்பிடாமே தமாசு டைட்டில் போடுவோம்ல ????


Anantharaman Srinivasan
ஆக 03, 2024 13:16

வருங்கால அரசியலுக்கு ஏற்றவன்.


Ramesh Sargam
ஆக 03, 2024 12:51

அந்த சின்னப்பையனின் பெற்றோர்களை முதலில் பிடித்து கடுமையாக தண்டிக்கவேண்டும். பிள்ளைகளை வளர்க்கத்தெரியாதவர்கள் ஏன் பிள்ளைகளை பெற்றுக்கொள்ளவேண்டும்.


பிரேம்ஜி
ஆக 03, 2024 14:16

நல்ல கேள்வி!


Senthoora
ஆக 03, 2024 14:58

மேல்நாடாக இருந்திருந்தால் இந்தநேரம் பெற்றோர் ஜெயிலில் இருக்கணும், சிறுவன் சிறுவர் காப்பகத்தில் இருக்கணும், பிஞ்சிலே முத்திவிட்டது.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை