உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தொண்டருக்கு பளார் விட்ட கர்நாடக துணை முதல்வர்

தொண்டருக்கு பளார் விட்ட கர்நாடக துணை முதல்வர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரூ: காங்கிரஸ் தொண்டர் கன்னத்தில் கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் அறைந்த வீடியோவும், படமும் சமூகவலை தளங்களில் வைரல் ஆகி வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ek0kj1kd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

தோளில் கை வைக்காதய்யா !

ஹவாரியில் உள்ள சவானூர் டவுண் பகுதியில் மாநில துணை முதல்வர் சிவக்குமார் பிரசாரத்திற்கு வந்தார். இவரை பலரும் டிகே, டிகே , டிகேஎஸ் ( டி.கே.சிவக்குமார்)என குரல் எழுப்பி வரவேற்றனர். அப்போது முனிசிபல் கவுன்சிலர் அலாவுதீன் மணியார், துணை முதல்வரின் தோளில் கையை வைத்து அழுத்தினார். இதில் ஆத்திரமுற்ற அவர் அலாவுதீன் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதனால் இந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.தொடர்ந்து ஒருவருக்கொருவர் 'ஸாரி ' தெரிவித்து கொண்டனர். இந்த வீடியோவை பா.ஜ., சமூகவலை தளங்களில் பரவ விட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ram pollachi
மே 06, 2024 17:16

தலைவன் அடித்தாலும் உதைத்தாலும் தொண்டனுக்கு வலிக்காது. எப்படியும் நான் தான் துணியை துவைத்து தருவேன் அதுவரை ஓய மாட்டேன்...


theruvasagan
மே 06, 2024 16:49

கொஞ்ச நாள் முன்னாடி தமிழ்நாடு. நேற்றைக்கு தெலங்கானா. இன்றைக்கு கர்நாடகம். மக்கா. அரசியல் வியாதிகளுக்கு கை நீளம் என்னும் பழமொழியை இப்பவாவது நம்புங்க.


ஆரூர் ரங்
மே 06, 2024 15:37

பணத் திமிர்.அதிகாரத் திமிர்.


Anantharaman Srinivasan
மே 06, 2024 14:26

கவுன்சிலர் சிவகுமார் தோளில் கை வைத்து துணைமுதல்வருக்கு நான் நெருக்கம் என காட்ட நினைத்தார் சிவகுமார் அவன் கன்னதில் கை வைத்து நான் மந்திரி நீ வெறும் கவுன்சிலர் என செய்கையில் சொல்லிவிட்டார்


Ramesh Sargam
மே 06, 2024 12:58

கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணைமுதல்வர் சிவகுமார், இருவரும் அதிக கோபக்காரர்கள் ஒரு முனிசிபல் கவுன்சிலருக்கே இந்த நிலைமை என்றால், பொதுமக்களை இவர் காலால் உதைத்திருப்பார் பதவியில் இருப்பவர்களுக்கு பொறுமை மிக மிக அவசியம்


அருண் பிரகாஷ் மதுரை
மே 06, 2024 11:53

அவர் தோள் மேல் கை வைத்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். ஆனால் துணை முதல்வர் அவரது கன்னத்தில் கை வைத்து வீடியோவிற்கு போஸ் கொடுக்க வைத்து விட்டார்.


Parameswar Bommisetty
மே 06, 2024 11:25

மிகவும் கீழ்த்தரமான செயல் இவர் அரசியல்வாதியா ?


Ramanujadasan
மே 06, 2024 11:22

திராவிட மாடல் கர்நாடகாவுக்கு பரவி விட்டது இங்கேயும் திமுக அமைச்சர்கள் அடிக்கிறார்கள் அங்கேயும் காங்கிரஸ் அமைச்சர்கள் அடிக்கிறார்கள் - இரு வகைகளிலும்


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ