மேலும் செய்திகள்
பேட்டரி சேமிப்பு மையங்களுக்கு அமெரிக்காவில் மக்கள் எதிர்ப்பு
59 minutes ago
மருத்துவமனையில் பரூக் அப்துல்லா அனுமதி
1 hour(s) ago
பெங்களூரு: ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதற்காக, முன்னாள் பிரதமர் தேவகவுடா தம்பதி, மகன், பேரன் அயோத்தி சென்றனர்.அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடப்பதை ஒட்டி, நாடு முழுதும் மூத்த அரசியல் தலைவர்கள், மடாதிபதிகள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் உட்பட முக்கியஸ்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.அவர்கள் அயோத்திக்கு படையெடுத்துள்ளனர். கர்நாடகாவில் இருந்து, நேற்று முன்தினமும், நேற்றும் பல்வேறு மடாதிபதிகள் அயோத்திக்கு சென்றனர். ம.ஜ.த., தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா - சென்னம்மா தம்பதி, மகன் குமாரசாமி, பேரன் நிகில் பெங்களூரில் இருந்து நேற்று தனி விமானத்தில் அயோத்தி சென்றனர்.அயோத்தியில் இறங்கிய உடன், ராமர் கோவில் நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்து, அவர்களை அழைத்து சென்றனர். இன்று நடக்க உள்ள கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கின்றனர்.வி.வி.ஐ.பி.,கள் அமரும் இடத்தில், இவர்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பின், பெங்களூரு திரும்ப உள்ளனர்.
59 minutes ago
1 hour(s) ago