உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அனைத்து துறைகளிலும் வளர்ச்சி மோடியால் மட்டும் முடியும்: அமித்ஷா பேச்சு

அனைத்து துறைகளிலும் வளர்ச்சி மோடியால் மட்டும் முடியும்: அமித்ஷா பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹைதராபாத்: 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மேடக் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் ரகுநந்தன் ராவை ஆதரித்து தேர்தல் பேரணியில், அமித் ஷா பேசியதாவது: சமீபத்தில் தான் தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் கட்சி தெலுங்கானாவை டில்லியின் ஏ.டி.எம்., ஆக்கியுள்ளது. காலேஷ்வரம் திட்டம் அல்லது நில மோசடி தொடர்பாக பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சிக்கு எதிராக காங்கிரஸ் விசாரணை மேற்கொள்ளவில்லை.

ஊழலற்ற ஆட்சி

நீங்கள் ஓட்டளித்து, மோடி 3வது முறையாக பிரதமர் ஆகிய பிறகு, ஊழலில் இருந்து தெலுங்கானாவை விடுவிப்பார். தெலுங்கானாவில் ஊழலற்ற ஆட்சியை வழங்குவதும், அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வதும் பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும். இந்த முறை தெலுங்கானா மக்கள் பிரதமர் மோடியின் பக்கம் உள்ளனர்.

4 சதவீத இடஒதுக்கீடு

எல்லா இடங்களிலும் பா.ஜ., வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய தெலுங்கானா மக்கள் முடிவு செய்துள்ளனர். ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் 4 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம். அதனை எஸ்.சி, எஸ்.டி., பி.சி., உள்ளிட்ட பிரிவினருக்கு பகிர்ந்து அளிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

venugopal s
ஏப் 25, 2024 19:24

இப்படிச் சொல்லிச் சொல்லி தான் பத்து வருடங்களாக மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறீர்கள்!


Senthoora
ஏப் 25, 2024 21:05

அவர் என்ன சொல்லுறார்னா, அனைத்து ஊழல்களையும் சட்டரீதியாக்கி வளர்ச்சிஅடைத்திருக்கிறேன்


என்றும் இந்தியன்
ஏப் 25, 2024 17:40

அப்போ காங்கிரஸ் வளர்ச்சி அடையமாட்டேன் என்கிறதே


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை