உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாலை 6 மணி! பக்தர்களுக்கு புது அறிவிப்பை வெளியிட்ட திருப்பதி தேவஸ்தானம்

மாலை 6 மணி! பக்தர்களுக்கு புது அறிவிப்பை வெளியிட்ட திருப்பதி தேவஸ்தானம்

திருப்பதி; பக்தர்கள் அனைவரும் இன்று(செப்.23) மாலை 6 மணிக்கு வீடுகளில் விளக்கேற்றி மந்திரத்தை உச்சரிக்குமாறு திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.திருப்பதி கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்தின் எதிரொலியாக கோயிலை சுத்தப்படுத்தும் விதமாக இன்று மகாசாந்தி யோகம் நடத்தப்பட்டது. 8 அர்ச்சகர்கள், 3 ஆகம விதிகள்படி தலைமை அர்ச்சகர்கள் மூலம் பூஜைகள் செய்யப்பட்டு பிரசாதம் தயாராகும் அறை சுத்தப்படுத்தப்பட்டது. சமையலறை புனிதமாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந் நிலையில், இன்று மாலை 6 மணிக்கு பக்தர்கள் விளக்கேற்ற வேண்டும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இது குறித்து தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறப்பட்டு உள்ளதாவது; பக்தர்கள் இன்று மாலை 6 மணிக்கு விளக்குகளை ஏற்றி, ஓம் நமோ நாராயணா, ஓம் நமோ பகவதே வாசுதேவாய, ஓம் நமோ ஸ்ரீவெங்கடேசாய என தொடங்கும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் அந்த பதிவில் மந்திரத்தையும் ஒலி வடிவில் வெளியிட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

vasudevan.a Devan
செப் 25, 2024 11:02

srinivasan treats all people in one. but ttd is not. it welcomes paid darsan and keep free darsan in cage. is it agama vidhi ?. please allow paid darsan and tourist in one or two days weekly. in other days only aloow free darsan . dont keep some people in cage and some aloow some people to darsan. it is not agama. it is a sin .


Suhana space research organization
செப் 24, 2024 22:21

எல்லாம் அவன் செயல்


Guna Gkrv
செப் 24, 2024 07:08

இதில் பல சதிகள் இருக்கு எப்படி இப்படி நடக்கும் திட்டமிட்டு செயல் படுத்தி இருக்கிறார்கள் பாவம் ஜெகன்


Kasimani Baskaran
செப் 24, 2024 05:47

சோதனை முடிவுகளை வெளியிடுவதற்கு முன்னராகவே சம்பந்தப்பட்ட நிறுவனங்களை சீல் வைத்து மாதிரிகளை, ஆவணங்களை சேகரித்து இருந்தால் பரவாயில்லை - ஆனால் இவர்கள் அணைத்து செய்திகளையும் வெளியிட்டு அதன் பின்னர் சோதனை என்று மேற்கொண்டால் எப்படி உண்மை வெளிவரும்? குதிரை வெளியே தப்பி ஓடிய பின்னர் லாயத்தை பூட்டுவதால் ஒரு பயனும் இல்லை. திருப்பதி தேவஸ்தானத்தில் பல லட்சம் பசுக்கள் உண்டு - அந்தப்பாலில் இருந்து அருமையான பசு நெய் தயாரித்து அதை கோவில் பணிகள் அனைத்துக்கும் உபயோகிக்கலாம் - அதை விட்டு விட்டு ஏன் டெண்டர் விட்டு - அதன் பின் குத்துது, குடையுது என்று ஒப்பாரி வைக்க வேண்டும்? கோவில் கொள்ளையர்களின் கூடாரமாகிவிட்டது.


தமிழ்நாட்டுபற்றாளன்
செப் 23, 2024 23:36

ஜெகன்மோகன் ரெட்டியை, அரசியல் ரீதியாக எவ்வளவு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் விமர்சனம் செய்து சந்திரபாபுநாயுடு குறைகூறட்டும். ஆனால் மத உணர்வுகளை தூண்டி அதன்மூலம் அரசியல் லாபம்பெற முயன்றால் அந்த ஏழுமலையான் கூட சந்திரபாபு நாயுவை மன்னிக்கமாட்டார். ஒரு முதல்வராக இருந்தவர், திருப்பதி கோயிலின் பெருமையை அறிந்தவர், அம்மண்ணில் பிறந்து வளர்ந்தவர், கோயில் லட்டு தயாரிக்க கலப்பட நெய் வழங்க ஆணையிட்டுப்பாரா? அத்தவறுக்கு துணை போயிருப்பாரா? இந்து மக்களாகிய நம்மை பகடைக்காயாக வைத்து இந்த அரசியல் வாதிகளின் ஆடும் ஆட்டத்துக்கு நாம் இரையாகி விடக்கூடாது.


தமிழன்
செப் 23, 2024 21:05

மந்திரம் சொன்னால் தோஷம் போயிடுமா? என்று கேட்டு கொண்டு ஒரு கூட்டம் வரும் பாருங்க


தமிழ்நாட்டுபற்றாளன்
செப் 23, 2024 23:36

ஆமாம் அப்படியே உனக்கும் பரிகாரம் செய்து ....


Swamimalai Siva
செப் 23, 2024 20:35

ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணாய


Sriniv
செப் 23, 2024 18:56

ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணாய


D.Ambujavalli
செப் 23, 2024 18:44

பரிகாரம், புண்ணியாக வாசனம் எல்லாம் இருக்கட்டும் இந்த விவகாரத்தில் சமபந்தப்பட்டு இருக்கும் சப்ளையர், இந்த ஒப்பந்தத்தை தரம் நிர்ணயம் செய்து அனுமதித்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? இனியம் லட்டு வாங்க பக்தர்கள் முன்வருவார்களா? ஒரு முறை திரிந்த பின் பாலாய் மீண்டு உபயோகிக்க முடியுமா?


SRINIVASAN V
செப் 23, 2024 18:21

ஓம் நமோ நாராயணா ???


முக்கிய வீடியோ