உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லோக்சபாவில் மோடி, ராகுல் நேரடியாக மோதல்

லோக்சபாவில் மோடி, ராகுல் நேரடியாக மோதல்

''தங்களை ஹிந்து என கூறிக்கொள்பவர்கள் 24 மணி நேரமும் வன்முறையை, வெறுப்பை துாண்டி விடுகின்றனர்,'' என, லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பேசியதை அடுத்து பெரும் அமளி ஏற்பட்டது. ''ஹிந்துக்களை வன்முறையாளர்கள் என்பதா?'' என்று பிரதமர் மோடி சீற, மோடி -- ராகுல் இடையே நேரடி மோதல் வெடித்தது. ஜனாதிபதி உரை மீதான நேற்றைய விவாதத்தை முடித்து வைக்கும் வாய்ப்பு, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ராகுலுக்கு கிடைத்தது. ''அரசியல் சாசனம் வாழ்க,'' என்ற கோஷத்துடன் பேச்சை துவக்கினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0ykqi8cx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0''எதிர்க்கட்சியினரை குறி வைத்து தாக்குவதை அரசு வழக்கமாக கொண்டிருக்கிறது. என் மீதே 20 வழக்குகள் போட்டுள்ளனர்.''இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது, பதவி பறிக்கப்பட்டது, வீடு பறிக்கப்பட்டது, 55 மணி நேரம் விசாரணை நடத்தினர், அத்தனையும் தாண்டி இங்கே வந்திருக்கிறோம். அதற்கான சக்தி எங்கிருந்து கிடைக்கிறது தெரியுமா?'' இவ்வாறு கேட்ட ராகுல், சிவபெருமான் படத்தை உயர்த்திக் காட்டினார்.சபாநாயகர் பிர்லா: சபையில் பதாகைகளை காட்ட விதிகள் அனுமதிக்கவில்லை. ராகுல்: சிவபெருமான் படத்தை காட்டுவதற்கு கூட அனுமதியில்லையா? சிவன் கையிலிருக்கும் திரிசூலம் வன்முறைக்கானது அல்ல, அஹிம்சைக்கானது.ஹிந்து மதம் அமைதியை மட்டுமே போதிக்கிறது. ஆனால், தங்களை ஹிந்து என எப்போதும் கூறிக்கொள்பவர்கள் வன்முறையையும், வெறுப்பையும் துாண்டிவிடுவதை முழுநேர வேலையாக செய்கின்றனர். பிரதமர் மோடி: ஒட்டுமொத்த ஹிந்துக்களையும் வன்முறையாளர்கள் என்று கூறுவதை ஏற்க முடியாது.ராகுல்: நான் உங்களை பற்றி தான் பேசுகிறேன். உங்கள் கட்சியான பா.ஜ.,வை பற்றி பேசுகிறேன். ஆர்.எஸ்.எஸ்., பற்றி பேசுகிறேன். உங்களை ஒட்டுமொத்த ஹிந்து சமூகமாக காட்டிக் கொள்ள தேவையில்லை. அமைச்சர் அமித் ஷா: கோடானு கோடி மக்கள் தங்களை ஹிந்து என பெருமையுடன் சொல்லிக் கொள்கின்றனர். அவர்களை வன்முறையாளர்கள் என சொன்னதற்காக ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும். அவசரநிலை பிரகடனம் செய்தவர்கள், சீக்கீயர்களை கொன்று குவித்தவர்கள் கட்சிக்கு அஹிம்சை பற்றி பேச அருகதை கிடையாது.ராகுல்: ஹிந்து மதம் மட்டுமல்ல; எல்லா மதங்களும் அஹிம்சையை தான் போதிக்கின்றன. வன்முறையை துாண்டும் நீங்கள் ஹிந்துக்களே அல்ல. ராகுல் இவ்வாறு சொன்னதும் எதிர்க்கட்சிகள் வரிசையில் ஆரவாரமும், ஆளும் கட்சி வரிசையில் எதிர்ப்புக் குரல்களும் எழுந்தன. ராகுல் மீண்டும் பேச துவங்கியதும், மைக் 'ஆப்' ஆனது.சபாநாயகரிடம் முறையிட்டு இணைப்பை கேட்டுப் பெற்று பேச்சை தொடர்ந்தார். ''அயோத்தியில் இருந்தே ஆரம்பிக்கிறேன்,'' என கூறிவிட்டு, அருகில் அமர்ந்திருந்த அயோத்தி நகரம் அடங்கிய பைசாபாத் தொகுதியின் சமாஜ்வாதி உறுப்பினருக்கு வணக்கம் கூறி, கைகுலுக்கினார். எதிர்க்கட்சியினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். ராகுல்: உங்கள் தவறுகளுக்காக அயோத்தி ராமரே பாடம் கற்பித்து விட்டார். ராமருக்கு கோவில் திறந்த நீங்கள், அந்த மண்ணின் மக்களைக்கூட அழைக்கவில்லை. அம்பானியும், அதானியும்தான் விருந்தினராக வந்தனர். நகரத்தை காட்சிப்படுத்த ஏழை மக்களின் நிலங்களை பறித்தனர். தொழில்களை தடுத்தனர். தடுக்க முடியாமல் தவித்த மக்கள், தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை தவற விடாமல் உங்களை தண்டித்து விட்டனர். அதனால் தான் வாரணாசியில் மோடியே தப்பித்தோம், பிழைத்தோம் என்றுதான் வெற்றி பெற முடிந்தது. ஆனாலும், பகவானும் மக்களும் புகட்டிய பாடத்தை நீங்கள் கற்ருக் கொண்டதாக தெரியவில்லை.காலையில் அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு நான் வணக்கம் சொன்னபோது புன்னகையுடன் பதில் வணக்கம் சொன்னார். பிரதமருக்கு வணக்கம் சொன்னபோது முகத்தை, 'உர்' என வைத்துக் கொண்டார். என்னிடம் மோடி ஏன் எப்போதும் சீரியசாக இருக்கிறார் என தெரியவில்லை.பிரதமர் மோடி: எதிர்க்கட்சி தலைவரை மிகவும் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றுதான் அரசியல் சாசனமே சொல்கிறது. அதை பின்பற்றுகிறேன். மோடி சீரியசாக சொல்கிறாரா கிண்டலா என்பது தெரியாததால் இரு தரப்பிலும் சத்தமே எழவில்லை. ஆனால் சபாநாயகர் தலையிட்டார்.சபாநாயகர்: ஜனாதிபதி உரை மீது பேச சொன்னால் ராமர் பற்றி பேசுகிறீர்களே... ராகுல்: அமைச்சர் அனுராக் தாக்கூர் மட்டும் அயோத்தி பற்றி பேச அனுமதித்தீர்கள் தானே...இதையடுத்து ராகுல், ராணுவம் பக்கம் பேச்சை திருப்பினார்.ராகுல்: அக்னி வீர் திட்டத்தில் தேர்வானவர்களை, ராணுவ வீரர்கள் என கூறமுடியாத நிலை உள்ளது. ஆறு மாதங்கள் பயிற்சி தந்து அவர்களை பயன்படுத்திவிட்டு துாக்கி எறிகிறீர்கள். அவர்கள் உயிரிழந்தால் ஓய்வூதியம் கிடைக்காது. உதவியும் கிடையாது. அமைச்சர் ராஜ்நாத் சிங்: எதிர்க்கட்சி தலைவர் பொய் தகவல் சொல்கிறார். அக்னி வீர் திட்டத்தில் தேர்வான வீரர் உயிரிழந்தால் அவரது குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் தரப்படும்.ராகுல்: வெறுப்பு பேச்சாலும், பிரசாரத்தாலும் மணிப்பூரில் உள்நாட்டு போரை ஏற்படுத்தினீர்கள். இத்தனை காலமாக இவ்வளவு வன்முறை, உயிரிழப்புகள் நிகழ்ந்தும் பிரதமர் ஏன் மணிப்பூர் செல்லவில்லை. அது இந்தியாவுக்குள் இல்லையா. அவர்கள் நம் மக்கள் இல்லையா. மணிப்பூர் மக்களை தன் மக்களாக பிரதமர் கருதவில்லையா? கருத வாய்ப்பு இல்லை தான். ஏனென்றால், நமது பிரதமர் உயிரியல் ரீதியாக பிறக்காதவர். கடவுளுடன் நேரடித் தொடர்பில் இருப்பவர். அதிரடியாக அவர் எடுக்கும் நடவடிக்கைகள் எல்லாம் கடவுளிடம் இருந்து நேராக வந்த கட்டளைகளாக இருக்கலாம். அப்படி ஒரு கட்டளை வந்து தான் இரவு எட்டு மணிக்கு பண மதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்டார் போலும்.சபாநாயகர்: பிரதமர் மரியாதைக்கு உரியவர். அவருக்கு மரியாதை கொடுங்கள், ராகுல். ராகுல்: நிச்சயமாக மரியாதை அளிக்கிறேன், சார். ஆனால், இப்போது நான் சொன்னது நானாக சொல்லவில்லை. 'இயற்கை முறையில் பிறக்கவில்லை, இறைவனால் அனுப்பப்பட்டவன்' என, நான் கூறவில்லை. பிரதமர் தான் கூறினார். அதை நான் ஞாபக படுத்தினேன், அவ்வளவு தான். மும்பை விமான நிலையத்தை அதானிக்கும், மும்பை துறைமுகத்தை அம்பானிக்கும் தர வேண்டும் என்று பிரதமருக்கு கடவுள் தான் கட்டளையிட்டு இருக்க வேண்டும். நீட் தேர்வை வணிக தேர்வாக மாற்றிவிட்டீர்கள். பணம் இல்லையென்றால் அதிக மதிப்பெண் பெற முடியாது. இந்த தேர்வால் பணக்கார மாணவர்கள் மட்டுமே பலன் அடைகின்றனர். ஏழைகளுக்கு எந்த பயனும் இல்லை. மாணவர்களுக்கு நம்பிக்கை தர, இது குறித்து சபையில் விவாதிக்க வேண்டும்.சபாநாயகர்: ஜனாதிபதி உரை மீதான விவாதத்தில் வேறு விஷயம் விவாதிக்க வழியில்லை.ராகுல்: அப்படி என்றால் இந்த விவாதம் முடிந்த பின்னர் ஒரு நாள் அதற்காக ஒதுக்கித்தர உறுதி தாருங்கள்.சபாநாயகர்: உங்கள் பேச்சை முடியுங்கள். நிறைய நேரம் எடுத்துக் கொண்டீர்கள்.ராகுல்: இந்த சபையின் நடுவர் சபாநாயகர். அவர் கூறுவது தான் இறுதி வார்த்தை. அவர் கூறுவது தான் நம் ஜனநாயகத்தின் அடிப்படையை வரையறுக்கிறது. ஆனால், அந்த இருக்கையில் இரண்டு பேர் அமர்ந்துள்ளதாக தெரிகிறது. ஒருவர் சபாநாயகர். மற்றொருவர் ஓம் பிர்லா.நீங்கள் பொறுப்பேற்றவுடன் வாழ்த்த வந்தேன். நிமிர்ந்து நின்றபடி என்னுடன் கைகுலுக்கினீர்கள். ஆனால் மோடி கைகுலுக்கும் போது உடலை வளைத்து வணங்கி நின்றீர்கள். அது சரியா?இதை கேட்டதும் சபையில் அதிர்ச்சி தெரிந்தது. அமித் ஷா ஆவேசமானார்.அமித் ஷா: சபாநாயகர் மீதே குற்றச்சாட்டு வைப்பதா..? சபாநாயகர்: நம்மைவிட வயதில் மூத்தவர்களை வணங்கவும், முடிந்தால் பாதம் தொட்டு மரியாதை செலுத்தவும் பயிற்றுவிக்கப்பட்டவன் நான்.ராகுல்: சபாநாயகரை விட பெரியவர் இந்த சபையில் யாருமில்லை. அவர் யாருக்கும் தலை வணங்க கூடாது என்பது என் நிலைப்பாடு. உங்கள் எண்ணத்தை நான் மதிக்கிறேன். அதற்காக உங்களை வணங்குகிறேன். அரசுடன் ஒத்துழைக்க எதிர்க்கட்சியினர் தயாராக உள்ளோம். அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.இவ்வாறு ராகுல் பேசினார். அவரது பேச்சில் இடம் பெற்ற ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் பதிலளித்து, பிரதமர் மோடி இன்று மாலை, 4:00 மணிக்கு உரையாற்றுகிறார்.

அமைச்சர்கள் குறுக்கீடு

ராகுல் பேசும்போது சபை கொந்தளிப்புடனேயே காணப்பட்டது. பிரதமர் இருமுறை குறுக்கிட்டுப் பேசினார். உள்துறை அமைச்சர் நான்கு முறை குறுக்கிட்டார். ராணுவ அமைச்சர் ராஜ்நாத், பார்லிமென்ட் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான், சுற்றுச்சூழல் அமைச்சர் பூபீந்தர் சிங் யாதவ் ஆகியோரும் குறுக்கிட்டனர். - நமது டில்லி நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 52 )

enkeyem
ஜூலை 02, 2024 21:04

உமக்கு தமிழே தகராறு. இந்த லட்சணத்தில் மோடியை உதவாக்கரை பப்புவை தூக்கிப்பிடித்து கருத்து வேறு?


M.S.Jayagopal
ஜூலை 02, 2024 19:18

ராகுல் காந்தி கூடிய விரைவில் அவரது கூட்டணி கட்சிகளின் தலைவர்களாலேயே அவமானப்படுத்தப்படுவார்.


Jesu Raj
ஜூலை 02, 2024 17:40

நீங்க சின்ன பாட்டுக்கு இன்னொரு பாட்டு அவரு சொன்னதுல அர்த்தம் இருக்குமனிதனுக்கு அவ்வை சொன்னது அதில் அர்த்தம் உள்ளது


Vasanth
ஜூலை 02, 2024 13:51

இவர் ஏன் நாடாளுமன்றம் வந்து அழுகிறார், பப்பூ பொருத்தமான பெயர் என்றே தோன்றுகிறது


Indian
ஜூலை 02, 2024 14:03

பலமாக உள்ளது


john
ஜூலை 02, 2024 15:53

கேள்வி கேட்டால் பயமாக உள்ளதா?


Senthoora
ஜூலை 02, 2024 16:12

அமித்ஷாவும், பிரதமரும்.


சொல்லின் செல்வன்
ஜூலை 02, 2024 13:29

ராகுல் சரியாக சொல்லியிருக்கிறார். தேர்தல் பிரசாரத்திற்கு இந்தியா முழுவதும் பயணம் செய்த மோடி, இன்னும் மணிப்பூர் பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை. இந்த கேள்விக்கு மோடி நேரடியாக இன்னும் பதில் அளிக்கவில்லை.


Mettai* Tamil
ஜூலை 02, 2024 16:37

கள்ளக்குறிச்சிக்கு ஏன் போகவில்லை.....


r ravichandran
ஜூலை 02, 2024 13:17

தேர்தல் முடிந்து விட்டது, இந்தி கூட்டணி தோல்வி அடைந்து விட்டது என்று யாராவது ராகுல் காந்திக்கு எடுத்து சொல்ல வேண்டும். இன்னும் தேர்தல் மேடையில் பிரச்சாரம் செய்வது போல பேசி கொண்டு இருக்கிறார்.


john
ஜூலை 02, 2024 15:54

சரியாக பேசுகிறார்


S. Narayanan
ஜூலை 02, 2024 12:18

காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளால் நாட்டுக்கு நல்லது எதுவும் நடக்க போவது இல்லை. கோர்ட் சிபிஐ நடவடிக்கை இல்லாமல் தப்பிக்க என்ன செய்யலாம் என்று ஆர்ப்பாட்டம் செய்தே ஐந்து ஆண்டுகள் கழித்து விடுவர்.


Ravi.S
ஜூலை 02, 2024 10:39

பார்லிமென்ட் நடத்துவதை மோடி ஸ்டாலினிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்


தேவதாஸ் புனே
ஜூலை 02, 2024 09:55

ராகுலின் பேச்சுக்கு பாஜக முக்கியத்துவம் தராமல் இருக்கவேண்டும் என நினைக்கிறேன். இந்துக்கள் எப்போது தான் தங்களை தாங்களே அறிவார்களோ.....


john
ஜூலை 02, 2024 15:55

அரசியலில் மதம் எதற்கு?


Shekar
ஜூலை 02, 2024 09:45

நேற்றைய விவாதத்தில், நம் ராகுல் உதிர்த்த ஒரு ஸ்டேட்மென்ட், பிரதமர் என்னைப்பார்த்தால் புன்னகைப்பதில்லை வணக்கம் சொல்வதில்லை என்கிறார். இவர் முதிர்ச்சி பெறுவாரா?,


ஆரூர் ரங்
ஜூலை 02, 2024 11:04

புன்னகைத்தால் உடனே கண்ணடித்து கட்டிப் பிடிக்க வருவார். வேண்டாத வம்பு.


மேலும் செய்திகள்







புதிய வீடியோ