உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசு வீட்டை காலி செய்ய அனுப்பிய நோட்டீசை எதிர்த்த மனு தள்ளுபடி

அரசு வீட்டை காலி செய்ய அனுப்பிய நோட்டீசை எதிர்த்த மனு தள்ளுபடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: லோக்சபாவில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொய்த்ரா அரசு பங்களாவை உடனடியாக காலி செய்ய அரசு எஸ்டேட் இயக்குநரகம் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து டில்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது.மேற்கு வங்க திரிணமுல் காங்கிரசை சேர்ந்தவர், மஹுவா மொய்த்ரா. கிருஷ்ணா நகர் லோக்சபா தொகுதியின் எம்.பி.,யாக இருந்தார். இவர், பார்லிமென்டில் அதானி குழுமத்தையும், பிரதமர் மோடியையும் தொடர்புபடுத்தி கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது.இது குறித்து, பார்லி., ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரித்து, தகுதி நீக்கம் செய்ய பரிந்துரைத்ததை அடுத்து மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்வதாக லோக்சபா செயலர் அறிவித்தார். இந்நிலையில் புதுடில்லியில் அரசு வீட்டை காலிசெய்ய கோரி கடந்த ஆண்டு டிசம்பரில் லோக்சபா செயலகம் நோட்டீஸ் அனுப்பியது. தொடர்ந்து மஹுவா மொய்த்ராவுக்கு அரசு எஸ்டேட் இயக்குநரகம் கடந்த 7,மற்றும்12 ம் தேதிகளில் இரண்டு நோட்டீஸ்கள் அனுப்பியது. நோட்டீசை ரத்து செய்ய கோரி டில்லி ஐகேர்ட்டில் மஹூவா மொய்த்ரா தாக்கல் செய்தார். மனுவில் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் அரசு வீட்டை காலி செய்ய அவகாசம் கோரினார். மனுவை விசாரித்த நீதிபதி சுப்ரமணியன் பிரசாத், மஹூவா மொய்த்ரா கோரிக்கையை ஏற்க மறுத்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Sathyam
ஜன 19, 2024 12:29

mahua MOOTHRA you will never get JUSTICE BUT JAUNDICE confirmed. I curse citizens of Waste/Worst to continuously choosing evil Leftists and this Jihad lady party, well let them deserve this curse till they improve or change. Please do not have any sympathy or any allopathy on the 3rd rate violent hooligan citizens of Waste/Worst Bengal Tatas struggled to set up factory in WB. No industries would prefer investment in North East. What changed in last 9 years is this confidence to businesses provided by govt I am very Happy for people of Assam and curse and do not have even small of pity on them. .Let them suffer heavily and cry or crimp out of jealous and start get out of Waste/Worst Bengal till it becomes part of Bangladesh as per Mamata Begum's long plan


Sathyam
ஜன 19, 2024 12:27

இந்த மகா கேடுகெட்ட லேடி ரௌடிய விட மோசமான குணம் ஒரு அடியாள் மாதிரி இது வெளிநாட்டுக்கு போயி அங்கே பார்ட்டில தண்ணி தம் அடிக்றடாது எல்ல ஒழுக்க கேட்ட வெளியையும் பண்ணறதும் இல்லமே தன்னோட மின்னஞ்சல் விவரத்தை குடுத்திருக்கு அதுக்கு ஆதாரம் இருக்கு , இதே தனியார் நிறுவனமான உடனே டிஸ்மிஸ் மட்டும் இல்லை சம்பளம் பாக்கி பீ எப் க்ராடூயட்டி ஒண்ணுமே வராது , சொல்லப்போனா டெர்மினேஷன் லெட்டர் தான் குடுப்பாங்க, அதுவும் வேற வெளில எங்கேயும் வேலை தேடமுடியாது. இது என்னடான்னா ரொம்ப தான் ஆட்டம் துள்ளல் எல்லாம் பின்னாலே இந்த ராக்ஷசி ஜிஹாதி ரவுடி பேகம் மமதா இருக்க அது தான் தைர்யம் , சீக்ரம் ஆடு பாலி ரொம்ப நாள் தள்ளி போகாது


Raa
ஜன 19, 2024 11:39

வெட்கமாக இல்லை? தொரத்திவிடும் நிலைக்கா வரவேண்டும்? தானாக காலி பண்ணவேண்டும் என்ற இங்கீதம் இல்லை?


duruvasar
ஜன 19, 2024 09:54

இவங்க வடகிழக்கு மாகாணங்களின் சொர்ணா அக்கா போல் செயல்படுகிறார். பயங்கர கெத்து காட்டராங்களே


ramani
ஜன 19, 2024 06:22

திரிநாமுல் காங்கிரஸில் சட்டத்திற்குட்பட்டு நடப்பவர்கள் யாரும் இல்லை போலிருக்கிறது. யதா ராஜா ததா ப்ரஜா


sankaranarayanan
ஜன 19, 2024 01:19

மஹூவா மொய்த்ரா கோரிக்கையை ஏற்க மறுத்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் என்பது ஒரு நல்ல செய்திதான் ஆனால் கணம் கோர்ட்டார்கள் அவர்கள் அவர்களுக்கு தகுந்த பேணலடி அபராததுடன் தீர்ப்பை சொல்லி செய்திருந்தால் இனி இதுபோன்ற உத்தமர் போல நடக்கும் அரசியல்வாதிகள் இனி நீதி மன்றம் அணுக மாட்டார்களா நீதி அரசர்களின் நிறத்தையும் வீணாகாமாட்டார்கள் அந்த நாரதற்றத்தில் அது எவ்வளவோ வழக்குகளை முடித்திருக்க முடியும் i


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை