உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அயோத்தியில் தீபாவளி கொண்டாட்டம்; 28 லட்சம் தீபங்கள் ஏற்றி கின்னஸ் சாதனை

அயோத்தியில் தீபாவளி கொண்டாட்டம்; 28 லட்சம் தீபங்கள் ஏற்றி கின்னஸ் சாதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அயோத்தி: அயோத்தி ராமர் கோவிலில் நடந்து வரும் கோலாகலமான தீபாவளிக் கொண்டாட்டம், பக்தர்கள் மத்தியில் பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த ஆண்டின் ஜனவரி மாதம் அயோத்தி ராமர் கோவில் திறக்கப்பட்ட போது, மிக பிரமாண்ட விழா நடத்தப்பட்டது. அதுமட்டுமில்லாமல், கோவிலில் 25 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டது. இந்த நிலையில், அயோத்தி ராமர் கோவில் திறப்பிற்குப் பிறகு, முதல் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தீபோத்ஸவம், லேசர் லைட் கண்காட்சி மற்றும் கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், சரயு நதிக்கரை முழுவதும், லட்சக்கணக்கில் தீப விளக்கேற்றும் தீபோத்ஸவம் நடந்து வருகிறது. கடந்த முறை நிகழ்த்தப்பட்ட கின்னஸ் சாதனையை முறியடிக்கும் முயற்சியாக, இன்று மாலை முதலே 55 நதியின் படித்துறைகளில் 28 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக, 10வது படித்துறைகளில் 80 ஆயிரம் விளக்குகளைப் பயன்படுத்தி, ஸ்வஸ்திக் சின்னம் போன்ற வடிவமைப்பு உருவாக்கப்பட்டது. அதேபோல, அம்மாநில கால்நடைத்துறையின் சார்பில் தயார் செய்யப்பட்ட, மாசுபாட்டை ஏற்படுத்தாத 1,50,000 லட்சம் கவ் தீபங்களும் ஒளிரவிடப்படுகின்றன. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். அதேபோல, மாநில தகவல் தொழில்நுட்பத்துறையின் சார்பில் லேசர் ஒளி ஒலி நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. இது பக்தர்கள் மற்றும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதுமட்டுமில்லாமல், உத்தரபிரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த கலைஞர்களால் ராம் லீலா நாடகம் நடத்தப்பட்டது. மியான்மர், நேபாளம், தாய்லாந்து, மலேசியா, கம்போடியா, இந்தோனேசியா ஆகிய 6 நாடுகளின் கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

N.Purushothaman
அக் 31, 2024 05:12

ஜெய் ஸ்ரீ ராம் ...சனாதன பக்தர்கள் அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள் ....அனைவரின் வாழ்க்கையிலும் இருள் அகன்று ஒளி வீச எல்லாம் வல்லவன் அருள் புரிய பிரார்த்தனைகள்...


தமிழ்வேள்
அக் 30, 2024 22:08

ஜய ஸ்ரீ ராம்...ஜய ஜய ஸ்ரீ பாரத மாதா..


Ramesh Sargam
அக் 30, 2024 20:56

அனைத்து ஹிந்துக்களும் எப்பொழுதும் ஒற்றுமையுடன் இருந்து தீபாவளி மற்றும் இனிவரப்போகும் ஹிந்து பண்டிகைகளை குதூகலத்துடன் கொண்டாடுவோம். இன்றைய காலகட்டத்தில் ஹிந்துக்களின் ஒற்றுமை மிக மிக அவசியம். அனைவருக்கும் மகிழ்ச்சி நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.


கிஜன்
அக் 30, 2024 20:31

தீபாவளி வாழ்த்துக்கள் .....டுடே ...ராமர் ரிடர்ன்ட் பிரம் வனவாசம் .... ஜெய் ஜெகன்நாத் ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை