உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மோடி தன்னை பரமாத்மா எனக்கூற காரணம் என்ன தெரியுமா?: ராகுல் புது விளக்கம்

மோடி தன்னை பரமாத்மா எனக்கூற காரணம் என்ன தெரியுமா?: ராகுல் புது விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: ''தேர்தல் முடிவுக்கு பின்னர் அமலாக்கத்துறை, மோடியிடம் அதானி பற்றி கேள்வி எழுப்பினால், எனக்கு தெரியாது நான் பரமாத்மா மூலமாக வந்தவன் எனக் கூறி நழுவுவதற்காகவே, அவர் தன்னை பரமாத்மா என கூறியதாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.பீஹாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: பிரதமர் மோடி தன்னை பரமாத்மா என குறிப்பிடுவதற்கான காரணம் என்ன தெரியுமா? தேர்தல் முடிவுக்கு பின்னர் அமலாக்கத்துறை, மோடியிடம் அதானி பற்றி கேள்வி எழுப்பினால், எனக்கு தெரியாது, நான் பரமாத்மா மூலமாக வந்தவன் எனக்கூறி நழுவி விடுவார். நீண்ட நெடிய பேச்சுகளையும், நாட்டை பிளவுப்படுத்துவதையும் பிரதமர் மோடி நிறுத்திக்கொள்ள வேண்டும். மோடி அவர்களே, இளைஞர்களுக்கு எத்தனை வேலைவாய்ப்புகளை உருவாக்கினீர்கள் என்பதை பீஹார் மக்களுக்கு முதலில் சொல்லுங்கள். மோடி 22, 25 பேர்களை ராஜா மற்றும் மகாராஜாவாக ஆக்கியுள்ளார். அவர்களுக்கு அதானி, அம்பானி என வெவ்வேறான பெயர்கள் உள்ளன. அந்த ராஜாக்களுக்காகவே 24 மணிநேரமும் உழைக்கிறார். இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தபிறகு, அக்னிபாத் திட்டத்தை நீக்குவோம். ஒவ்வொரு பெண்களின் வங்கி கணக்கிலும் மாதம் ரூ.8,500 டெபாசிட் செய்வோம். மூடப்பட்ட நிறுவனங்களை மீண்டும் திறப்போம், 30 லட்சம் காலி பணியிடங்களை நிரப்புவோம். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

shakti
ஜூன் 03, 2024 17:26

அக்னிவீர் திட்டத்தை அக்னிபத் திட்டம் என்று சொல்லும்போதே தெரியலையா ???


G.Kirubakaran
மே 30, 2024 10:02

வெட்டி பேச்சு. அர்த்தமில்லாமல் பேச்சு. வீண் பேச்சு போன்றவைக்கு தலைவன் எங்கள் ராகுல்.


Dhandapani
மே 30, 2024 07:47

மோடிஜியும் பத்து வருடத்திற்குமுன் வெளிநாட்டில் உள்ள கருப்புப் பணத்தை கொண்டுவந்து ஒவொரு இந்தியக்குடிமகனின் வங்கிக் கணக்கில் பதினைந்து லட்சம் டெபாசிட் செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்து பிரதமராக வந்தார். இதுவரை அது வெறும் வாக்குறுதியாகவே உள்ளது, இப்போ ராகுல்ஜி மாதம் 8500 டெபாசிட் கதைவிடுகிறார், உங்கள் கப்ஸாவை நாங்கள் நம்பத் தயாராகவில்லை, எதுநடைமுறைக்கு உகந்தது, எதை அரசால் மக்களுக்கு செய்ய சாத்தியமோ அதைச்சொல்லி வாக்குகேளுங்கள் ராகுல்ஜி


spr
மே 28, 2024 06:58

"என் தாய் உயிருடன் இருந்தவரையில், இயல்பான உயிரியல் ரீதியாக அவளுக்குத்தான் நான் பிறந்ததாக நம்பினேன். அவள் மறைந்த பின், நான் அனுபவித்ததனைத்தையும் எண்ணிப் பார்க்கையில், நான் இறைவனால் அனுப்பப்பட்டதாக நம்ப வைக்கப்பட்டேன். என்னுடைய ஆற்றல் எனது இந்த உயிரின உடலிலிருந்து உருவானதல்ல. ஆனால் அது இறைவனால் எனக்களிக்கப்பட்ட வரம். எனக்குள்ளிருக்கும் திறமைகள், அகத்தூண்டுதல், உத்வேகம், மற்றும் ஒரு குறிப்பிட்டதொரு நோக்கத்திற்கான நல்ல எண்ணங்கள் அனைத்தும் இறைவனால் எனக்களிக்கப்பட்டதாகவே நான் கருதுகிறேன். நான் ஒரு கருவியே அன்றி வேறெதுவுமில்லாதவன். -. அதனாலேயே எப்பொழுது நான் எதைச் செய்தாலும், அதனைச் செய்ய இறைவன் என்னை வழிநடத்துகிறார்


TAMIZ JOSH
மே 27, 2024 21:56

சரியான பேச்சு ,விரைவில் மோடி& கோ வீட்டிற்கு செல்ல போகிறார்கள்


Sathyanarayanan Sathyasekaren
மே 27, 2024 23:19

அட அறிவாளி, ஒருமணிநேரம் பேசிய இன்டெர்வியூவில் அவரது தாயை பற்றிய கேள்வியில் மனம் கலங்கி சொன்ன பதிலை புரிந்து கொள்ள தெரியாத ஜென்மங்கள்


SP
மே 27, 2024 20:22

பிரதமர் எதை சொன்னாலும்,அதை தவறாக புரிந்து கொண்டோ,அல்லது வேண்டுமென்றோதொடர்ந்து பொய்சொல்வதையே வழக்கமாக வைத்திருக்கிறார்கள் எதிர்கட்சிகள்.


Raa
மே 27, 2024 19:39

கூட்டத்தில் ஒருவர்: எப்ப பப்பு பேசு முடிப்ப? எப்ப எங்களுக்கு பப்பு போடுவாய்? ரொம்ப பசிக்குதே. உன் பேச்சைவேறு கேட்கவேண்டும் என்று தலைவிதி.


பேசும் தமிழன்
மே 27, 2024 18:13

மோடி அவர்கள் நாட்டின் 140 கோடி மக்களுக்காக உழைத்து கொண்டு இருக்கிறார் ..... ஆனால் ஊழல் பேர்வழிகள் இண்டி கூட்டணி என்ற பெயரில் .....நாட்டை கொள்ளை அடிக்க நேரம் பார்த்து கொண்டு இருக்கிறார்கள் ..... நாட்டு மக்கள் கொள்ளை அடிக்க நினைப்பவர்களுக்கு ..... இண்டி கூட்டணி ஆட்களுக்கு தேர்தலில் சரியான பாடம் புகட்டுவார்கள்.


Anwar
மே 27, 2024 20:29

நாட்டையே நாசம் பண்ணிட்டே இனி கொள்ளை அடிக்க என்ன இருக்கு..மக்கள் கோவணம் வேணுமா? சீனா காரன் 4000 கி .மீ ஆட்டையே போட்டுட்டான் .அதே கேக்க துப்பு இல்லை


என்றும் இந்தியன்
மே 27, 2024 17:32

சலிப்பில்லாமல் உழைக்கின்றீர்களே அதன் ரகசியம் என்ன என்று கேட்டபோது நான் பரமாத்மாவால் உருவாக்கப்பட்டவன் என்று சொன்னார்.


என்றும் இந்தியன்
மே 27, 2024 17:27

"இளைஞர்களுக்கு எத்தனை வேலைவாய்ப்புகளை உருவாக்கினீர்கள்" இது வரை எனக்கு வேலை கிடைக்கவில்லை எல்லாம் உங்களால் தான் என்று மனம் தளர்ந்து பேசுகின்றார் என்று அர்த்தம் எடுத்துகொள்ளுங்கள்


மேலும் செய்திகள்







புதிய வீடியோ