உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ‛அயோத்தி சென்று பக்தர்களுக்கு இடைஞ்சல் செய்யாதீர்கள் : மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் உத்தரவு!

‛அயோத்தி சென்று பக்தர்களுக்கு இடைஞ்சல் செய்யாதீர்கள் : மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் உத்தரவு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ‛ மத்திய அமைச்சர்கள் தற்போது அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று பக்தர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்த வேண்டாம்' என பிரதமர் மோடி அறிவுரை வழங்கி உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.உ.பி., மாநிலம் அயோத்தி ராமர் கோவிலில் ஜன.,22ல் பிராண பிரதிஷ்டை முடிந்த நிலையில், நேற்று முதல் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆயிரகணக்கான பக்தர்கள் திரண்டதால் அயோத்தி நகரமே திணறியது.இந்நிலையில், மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று(ஜன.,24) நடந்தது. இக்கூட்டத்தில் பிரதமர் பேசும்போது, தற்போது அமைச்சர்கள் யாரும் அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்ல வேண்டாம். அங்கு, கூட்டம் அதிகளவில் உள்ளது. மத்திய அமைச்சர்கள் செல்லும் போது பக்தர்கள் தரிசனம் தடைபடும். இதனால், மத்திய அமைச்சர்கள் மார்ச் மாதத்திற்கு பிறகு ராமர் கோவிலுக்கு செல்லலாம் என அறிவுரை வழங்கினார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ