உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / துஷ்பிரயோக அரசியலை விரும்பவில்லை: சொல்கிறார் கெஜ்ரிவால்

துஷ்பிரயோக அரசியலை விரும்பவில்லை: சொல்கிறார் கெஜ்ரிவால்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''நான் தனிப்பட்ட விமர்சனங்களில் ஈடுபட விரும்பவில்லை. துஷ்பிரயோக அரசியல் செய்ய மாட்டேன்,'' என ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.டில்லியில் புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை பிரதமர் மோடி திறந்து வைத்து பேசுகையில், ஆம் ஆத்மி அரசை விமர்சித்து பேசியிருந்தார்.இதற்கு பதிலளித்து கெஜ்ரிவால் பேசியதாவது: பிரதமரின் 43 நிமிட பேச்சில் 39 நிமிடங்கள் மட்டும் டில்லி மக்களையும், அவர்களின் ஆதரவுடன் தேர்வு செய்யப்பட்ட அரசையும் விமர்சித்து உள்ளார். 2015 ல் டில்லி மக்கள் இரண்டு அரசை தேர்வு செய்தனர். மத்தியில் பா.ஜ., தலைமையிலான அரசையும், டில்லிக்கு ஆம் ஆத்மி தலைமையிலான அரசையும் தேர்ந்தெடுத்தனர். 10 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், ஆம் ஆத்மி அரசு செய்த பணிகள் குறித்து கேட்டால், அதற்கு பதிலளிக்க 2 -3 மணிநேரங்கள் போதாது.நான் தனிப்பட்ட விமர்சனங்களில் ஈடுபட விரும்பவில்லை. துஷ்பிரயோக அரசியல் செய்யவில்லை. 10 ஆண்டுகளில் அவர்கள் பணியாற்றி இருந்தால், தற்போது அவர்கள் டில்லி மக்களை விமர்சித்து இருக்க மாட்டார்கள். வேலை செய்து இருந்தால் அவர்கள் விமர்சிக்க மாட்டார்கள். வேலை செய்யாதவர்கள் மட்டுமே அடுத்தவர்களை விமர்சித்து தேர்தலை சந்திப்பார்கள். இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

jayvee
ஜன 04, 2025 18:43

நிஜத்தில் ஒரு அந்நியன்


Balasubramanian
ஜன 04, 2025 08:37

ஸ்வாதி மாலிவால் என்கிற உங்கள் கட்சியை சேர்ந்த பெண் அதுவும் உங்களால் நியமனம் செய்ய பட்ட ராஜ்ய சபா உறுப்பினர் உங்கள் வீட்டில் அதுவும் நீங்கள் இருக்கையில் உங்கள் காரியதரியால் தாக்கப் பட்ட சம்பவம் அதில் ஏதும் அதிகார துஷ் பிரயோகம் இல்லையா?


Ramanujan
ஜன 04, 2025 05:12

பொய், பொய், உடம்பு முழுக்க பொய்.


திகழ் ஓவியன், Ajax, Ontario
ஜன 03, 2025 21:17

அப்போ மதுபான முறைகேடு, பங்களா புதுப்பித்தல் எந்த முறைகேட்டில் வரும்?


r ravichandran
ஜன 03, 2025 21:09

இந்த முறை ஊழல் மன்னன் மண்ணை கவ்வுவார் என்று எதிர் பார்க்கிறேன்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை