உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சோமாலிய கடற்கொள்ளையர்கள் 35 பேரை கைது செய்தது இந்திய கடற்படை

சோமாலிய கடற்கொள்ளையர்கள் 35 பேரை கைது செய்தது இந்திய கடற்படை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அரபிக்கடலில் ரோந்துப்பணியில் ஈடுபட்ட இந்திய கடற்படை, சோமாலிய கடற்கொள்ளையர்கள் 35 பேரை கைது செய்தது. மத்திய கிழக்கு நாடான ஏமனில் உள்ள ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள், செங்கடல் பகுதியில் ஹமாஸ் குழுவுக்கு ஆதரவாக இஸ்ரேலுக்கு செல்லும் கப்பல்களை தாக்கி வருகின்றனர். அதேசமயம், சோமாலிய கடற்கொள்ளையர்களும் அவ்வழியாக செல்லும் கப்பல்களை கடத்துவதை வழக்கமாக செய்து வருகின்றனர். இது கடல்சார் வணிகத்தை மேற்கொள்ளும் நாடுகளுக்கு கவலையளித்து வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=f91kweuz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த டிசம்பரில், அந்த வழியாக சென்ற மால்டா நாட்டு எம்.வி.ரூயென் என்ற சரக்கு கப்பலை கடத்திய கடற்கொள்ளையர்கள், அதில் இருந்த மாலுமிகளை விடுவித்துவிட்டு, அந்த கப்பலை கடத்தலுக்கு பயன்படுத்தி வருகின்றனர். சோமாலியா கடற்பகுதியில் வரும் கப்பல்களை, இந்த கப்பலை வைத்து மடக்கி கடத்தல், பணம் பறித்தல் போன்ற சமூக விரோத செயல்களில் கொள்ளையர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.சோமாலியாவின் செங்கடல் பகுதியில் நேற்று சென்றிருந்த கொள்ளையர்களின் ரூயென் கப்பல், இந்திய கடற்படையின் போர்க்கப்பலால் தடுத்து நிறுத்தப்பட்டது. அதேசமயம், வானில் பறந்த கடற்படை ஹெலிகாப்டர் வாயிலாக கடற்கொள்ளையர்களுக்கு எச்சரிக்கையும் விடப்பட்டது.இந்நிலையில், அரபிக்கடலில் ரோந்துப்பணியில் ஈடுபட்ட இந்திய கடற்படை, சோமாலிய கடற்கொள்ளையர்கள் 35 பேரை கைது செய்தது. அவர்களிடம் பிணைக்கைதிகளாக சிக்கியிருந்த கப்பல் ஊழியர்கள் 17 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Ramesh Sargam
மார் 17, 2024 22:33

தமிழக கொள்ளையர்களையும் பிடிப்பீர்களா? அதிகாரம் இருந்தால் கட்டாயம் பிடிப்பார்கள். ஆனால்.....


J.V. Iyer
மார் 17, 2024 20:17

அப்படியே தமிழகத்திற்கும் வந்து கொள்ளையர்களை பிடியுங்கள். நல்லா இருக்கும்.


Palanisamy Sekar
மார் 17, 2024 16:10

கடல்ல கொள்ளையடிப்பவர்களை பிடிக்க கடற்படை இருப்பது போல..நாட்டில் அரசியல் வியாதிகளின் கொள்ளையடிப்பதை பிடிக்க இந்திய தரைப்படையை உருவாக்கினால் என்ன? போலீசும் சரி கோர்ட்டும் சரி இந்த கொள்ளையர்களை பிடிக்கவும் முடியல..பிடித்தாலும் கோர்ட் தண்டித்தலும் உச்சநீதிமன்றம் மூலம் வெளியே வந்துடறாங்களே..


sridhar
மார் 17, 2024 15:09

மொத்த உலகமும் மோடியின் இந்தியாவை தான் நோக்கி இருக்கிறது. உலகத்தின் பிரதம மந்திரி.


Dharmavaan
மார் 17, 2024 15:00

மாலடா நாட்டின் பதில் என்ன உதவி பல நாட்டின் பாதுகாப்பு உலக தலைவர் மோடி


Dharmavaan
மார் 17, 2024 14:58

modi


BALAJI Ramanathan
மார் 17, 2024 16:04

Well done Indian Navy.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை