உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பழங்குடியின வாலிபர்களுக்கு ட்ரோன் புகைப்பட பயிற்சி

பழங்குடியின வாலிபர்களுக்கு ட்ரோன் புகைப்பட பயிற்சி

பழங்குடியினர் நலன்

l பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும், ஆசிரம பள்ளிகளின் பெயர், மகரிஷி வால்மீகி ஆதிவாசி புடகட்டு குடியிருப்பு பள்ளி என்று பெயர் மாற்றப்படும். 1 முதல் 5ம் வகுப்பு வரை இயங்கும் பள்ளிகளில், புதிதாக ஆறாம் வகுப்பு துவங்கப்படும். 1 முதல் 7ம் வகுப்பு வரை செயல்பட்டு வரும் பள்ளிகளில், புதிதாக 8ம் வகுப்பு துவங்கப்படும். l ஏழு மாவட்ட தலைநகரங்களில் பழங்குடியின மாணவர்களுக்காக 14 விடுதிகள் கட்டப்படும். இதில் ஏழு விடுதிகள் மாணவர்களுக்கும், ஏழு விடுதிகள் மாணவியருக்கும் ஒதுக்கப்படும்l இந்திய அறிவியல் கழகம், சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில், செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் வகுப்புகளில், ஆறு முதல் 12 மாத வகுப்புகளில் படிக்கும் 200 இன்ஜினியரிங் மாணவர்களுக்கு, தலா 15,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்l பழங்குடியின சமூக இளம் தலைமுறையினர் 5,000 பேருக்கு ட்ரோன் மூலம் புகைப்படம், வீடியோக்கள் எடுக்க பயிற்சி அளிக்கப்படும்.l கோரகா, ஜெனுகுருபா, யரவா, காடுகுருபா, சோலிகா, சித்தி, மலைகுடி, ஹலசரு உட்பட 23 நாடோடிகள் சமூகத்தின் வளர்ச்சிக்காக, இரண்டு புதிய திட்டங்கள் அமல்படுத்தப்படும். நாடோடி மக்கள் குழந்தைகளுக்கு, ஏகலைவா மாடல் குடியிருப்பு பள்ளியில் 20 இடங்கள் ஒதுக்கப்படும். இதற்கு நுழைவுத்தேர்வு கிடையாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை