உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜனாதிபதி மாளிகையில் முக்கிய அரங்க பெயர் மாற்றம்

ஜனாதிபதி மாளிகையில் முக்கிய அரங்க பெயர் மாற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் முக்கிய அரங்க பெயர் கள் மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக ராஷ்ட்டிரபதி பவன் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:மக்கள் ஏதுவாக அணுகும் வகையில் ஜனாதிபதி மாளிகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரப்படுகிறது. பாரம்பரிய மிக்க , இந்திய கலாசாரங்களை பறைசாற்றும் விதமாக ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ளது. ஜனாதிபதி கேட்டு கொண்டதன் பேரில் இங்குள்ள முக்கிய தர்பார் ஹால் இனி ஞானதந்திரா மண்டபம் என்றும், அசோக் ஹால் அசோக் மண்டபம் என்றும் அழைக்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. தர்பார் ஹால் என்பது தேசிய அளவிலான விருதுகள் வழங்கும் விழா நடக்கும் பகுதி ஆகும். பேச்சு வழக்கிற்கு ஏதுவாக இது அமையும் என்றும் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

sankaranarayanan
ஜூலை 25, 2024 21:10

முதலில் ஆளுபவர்கள் அனைவரும் தமிழில் பெயர்மாற்றம் செய்யட்டும் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் அடுத்தவர்களை பெயர்மாற்றம் சொல்ல


sundarsvpr
ஜூலை 25, 2024 17:28

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறியதை மக்கள் சட்டை செயாததுபோல் பெயர் மாற்றம் எந்த தாக்கத்தையும் உண்டாகாது. ஸ்டாலின் அவர்களை முதல்வர் , முதன்மை அமைச்சர் மூத்த அமைச்சர் தலைமை அமைச்சர் என்று அழைத்தாலும் திரும்பி பார்ப்பார். புரிதல்தான் முக்கியம்.


Ramesh Sargam
ஜூலை 25, 2024 16:59

தமிழ் நாட்டில் இந்த மாளிகை இருந்திருந்தால், அண்ணா பெயர், பெரியார் பெயர், கருணாநிதி பெயர் வைக்கச்சொல்லி போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.


Vijay D Ratnam
ஜூலை 25, 2024 16:44

ஹைதராபாத் என்ற பெயரை மாற்றி அதன் பழைய பெயரான பாக்யநகர் என்று சூட்டவேண்டும்.


அப்புசாமி
ஜூலை 25, 2024 16:17

அந்நிய அடையாளங்களை இங்கே அகற்றி, பிரிட்டிஷ்காரனுடன் தொப்புள்கொடி உறவுன்னு பெருமைப்படுவோம்.


பாரதி
ஜூலை 25, 2024 15:26

அப்படியா... இங்கு உள்ள வெள்ளையனின் புத்திரர்களுக்கு இனி வயிற்றைக் கலக்கி பேதி போகுமே.... தமிழன்னையை கற்பழிக்க வந்த ஆங்கில மொழியில் பெயர் வைத்தால் தானே அவர்களுக்கு நிம்மதியாக தூக்கம் வரும்...


ஆரூர் ரங்
ஜூலை 25, 2024 15:26

முகலாய ஆக்கிரமிப்பாளர்களது பெயர்கள் எல்லாவற்றையும் அகற்றுங்கள்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை