உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தீயா வேலை செய்யணும் குமாரு... கட்சியினருக்கு அமித் ஷா அட்வைஸ்!

தீயா வேலை செய்யணும் குமாரு... கட்சியினருக்கு அமித் ஷா அட்வைஸ்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாக்பூர்; மகாராஷ்டிராவில் பா.ஜ., அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க ஒவ்வொரு தொண்டரும் பணியாற்ற வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தி உள்ளார்.

தேர்தல்

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளுக்குமான சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. அதற்கான தேதிகளை தேர்தல் ஆணையம் வெகு விரைவில் அறிவிக்க இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே பா.ஜ., காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பிரசாரத்தையும், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தையும் நடத்தி வருகின்றன.

ஆலோசனை

அந்த வகையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, விதர்பா பகுதியில் கட்சி முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் துணை முதல்வர் தேவந்திர பட்னவிஸ், பா.ஜ., தலைவர் சந்திரசேகர் பவன்குலே ஆகியோரும் கலந்து கொண்டனர்.

திட்டங்கள்

கூட்டம் குறித்து அமித் ஷா தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது; கட்சியின் முக்கிய நிர்வாகிகள், பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினேன். மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்கும், மக்கள் நலன்களுக்கும் ஏராளமான திட்டங்களை அரசு நிறைவேற்றி உள்ளது.

கடமை

எதிர்க்கட்சிகளின் கூட்டணியான மகா விகாஸ் அகாடி கூட்டணியை வீழ்த்தி மாநிலத்தை காப்பாற்ற வேண்டும். இது நம் ஒவ்வொரு தொண்டரின் கடமையாகும். இவ்வாறு அமித் ஷா அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். விதர்பாவை தொடர்ந்து, சத்ரபதி சாம்பாஜி நகரிலும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

hari
செப் 25, 2024 10:19

ஒரு 200 ரூபாய்க்கு எப்படி கதறுறன் பாருங்க இந்த வேலன்.....


Indian
செப் 25, 2024 09:31

என்ன தீயா வேலை செய்தாலும் , ஒரு கவுன்சிலர் பதவி கூட கிடைக்க போவதில்லை .


VENKATASUBRAMANIAN
செப் 25, 2024 08:18

இதேபோல் தமிழ்நாட்டிலும் செய்ய சொல்லுங்கள். சும்மா டிவிக்கும் பத்திரிக்கையாளர் களுக்கும் பேட்டி கொடுத்தால் மட்டும் போதாது. தொண்டர் மூலம் மக்களிடம் சென்று விளக்க வேண்டும். திமுக விடம் கற்றுக்கொள்ளுங்கள்.பொய்யை எப்படி உண்மையாக்குவார்கள். பாஜக உண்மையை சொல்ல பயப்படுகிறது. இதுதான் இன்றைய நிலைமை


Velan Iyengaar
செப் 25, 2024 08:47

ஆமாம் ... தமிழகத்தில் உலகமகா பணக்கார தேர்தல் பத்திர மெகா ஊழல் கட்சியின் உண்மையான கொள்கையை ..குறிக்கோளை சொல்லி பிரச்சாரம் செய்ய பயப்படுகிறது ... அது உண்மை தான் .....தைரியம் இருந்தா அதை எல்லாம் சொல்லி பிரச்சாரம் செய்யுங்களேன்


Velan Iyengaar
செப் 25, 2024 08:01

சிம்பிளா நெறய வீடியோ ஆடியோ வெளியிடனும் என்று சொல்லிட்டு போக வேண்டியது தானே ??? அது தானே இந்த கட்சி தீய வேலை செய்யிறா மாதிரி காட்டிக்க செய்யும் குலத்தொழில் ???


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை