உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஈ.டி. அட்டாக் விவகாரம் முற்றுகிறது: மம்தா கட்சி நிர்வாகியை கைது செய்ய கவர்னர் ஆர்டர்

ஈ.டி. அட்டாக் விவகாரம் முற்றுகிறது: மம்தா கட்சி நிர்வாகியை கைது செய்ய கவர்னர் ஆர்டர்

கோல்கட்டா:மேற்கு வங்கத்தில், விசாரணைக்கு சென்ற ஈ.டி., எனப்படும் அமலாக்கத் துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கில், முக்கிய நபராக கருதப்படும், ஆளும் திரிணமுல் காங்., நிர்வாகி ஷாஜஹான் ஷேக்கை, உடனடியாக கைது செய்யும்படி, போலீசாருக்கு அம்மாநில கவர்னர் சி.வி.ஆனந்த போஸ் உத்தரவிட்டுள்ளார்.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது.

ரேஷன் முறைகேடு

இங்கு நடந்த ரேஷன் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த, வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் சந்தேஷ்காலி என்ற இடத்தில் உள்ள, ஆளுங்கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஷாஜஹான் ஷேக் வீட்டுக்கு, சமீபத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சென்றனர்.அப்போது, அவர்கள் வந்த வாகனங்கள் மீது மர்ம கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் காயமடைந்த மூன்று அதிகாரிகள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தத் தாக்குதலை, ஷாஜஹான் ஷேக் ஆதரவாளர்கள் நடத்தியிருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது. இச்சம்பவத்துக்கு பின், ஷாஜஹான் ஷேக் தலைமறைவு ஆகிவிட்டார். அவருக்கு எதிராக, 'லுக் அவுட்' எனப்படும் தேடப்படும் நபர் என்பதற்கான நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், கவர்னர் சி.வி.ஆனந்த போஸ் ஒப்புதலுடன், கவர்னர் மாளிகை நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:அமலாக்கத் துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கில், முக்கிய நபராக கருதப்படும் திரிணமுல் காங்., நிர்வாகி ஷாஜஹான் ஷேக்கிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், காவல் துறை அதிகாரிகள் ஆதரவு அளிப்பதாக புகார் வந்துள்ளது.

ஆதாரம்

அவர் எங்கிருக்கிறார் என்பதை கண்டறிந்து, உடனடியாக அவரை, மாநில டி.ஜி.பி., கைது செய்ய வேண்டும். ஷாஜஹான் ஷேக் எல்லையை தாண்டி சென்றிருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது. பயங்கரவாதிகளுடன் அவருக்குள்ள தொடர்பு குறித்து உடனடியாக விசாரிக்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதற்கு பதிலளித்த திரிணமுல் காங்., செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் கூறுகையில், ''எந்த அடிப்படையில் கவர்னர் இவ்வாறு கருத்து தெரிவிக்கிறார் என்பது தெரியவில்லை. உறுதி யான அறிக்கையோ, ஆதாரமோ இல்லாமல் அவர் எப்படி இப்படி குற்றம் சாட்ட முடியும்?'' என்றார்.மேற்கு வங்க பா.ஜ., தலைவர் சுகந்தா மஜும்தார் கூறுகையில், ''கவர்னர் கருத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். ஷாஜஹான் கைது செய்யப்பட்டால், ஊழல் மற்றும் பயங்கரவாதத்தில் ஈடுபட்டவர்களும் சிக்குவர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Kumar
ஜன 08, 2024 18:09

உச்ச நீதிமன்றம் எத்தனை கொட்டு தலையில் வைத்தாலும் , எந்த ஆளுநரும் திருந்துவதாக தெரியவில்லை.


duruvasar
ஜன 08, 2024 16:05

அங்கு சென்றால் கையும் களவுமாக பிடிக்கலாம். இதே மாதிரி அதிகாரிகளை தாக்கியவர் இன்றுவரை தலைமறைவாகவே இருக்கிறார்.


Sridhar
ஜன 08, 2024 13:22

உண்மயாலுமே துணிவிருந்தா ஜனாதிபதி ஆட்சியை உடனே அமல் படுத்தியிருக்கவேண்டும். மேற்குவங்கம் மிகவும் சீர்கெட்டிருக்கிறது. உடனே மீட்டெடுக்கவேண்டும்.


Sathyam
ஜன 08, 2024 11:08

லாலுவுக்கு ஜாமீன் வழங்கியது யார்


Sathyam
ஜன 08, 2024 11:07

தயவு செய்து உச்ச நீதிமன்றம்/மற்ற நீதிமன்றங்களை வீணாக்காதீர்கள்/மோசமான வங்காளம், கேரளா, பீகார், முந்தைய ராஜஸ்தான் ஜே&கே டிஎன் தேவதைகளால் ஆளப்பட்டது, அவர்களுக்கு ஏற்றபடி முழு தேன் பால் பாய்கிறது, எனவே அவர்கள் இலவச கச்சேரி அல்லது பரதநாட்டியத்தை அனுபவிக்கட்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட court fixers agents


GMM
ஜன 08, 2024 08:04

தன் அதிகாரம் புரிந்த சிறந்த கவர்னர். நீதி, நிர்வாக, சட்ட ஒழுங்கு கவர்னர் பொறுப்பு. அமலாக்க துறை அதிகாரியை தாக்கியவர் கைது. அரசு ஊழியர்கள் பயம் இன்றி பணிபுரிவர். DGP க்கு உத்தரவு. கைது செய்ய தயங்கினால், மேல் நடவடிக்கை. தலைமை செயலாளரை அழைத்து கண்டிக்க வேண்டும். வழக்கறிஞர்கள் குறுக்கீடுக்கு கவர்னர் அஞ்ச வேண்டாம். நியாயம் தான் சட்டம். அரசியல் விமர்சனம் இருக்கும். தடுக்க முடியாது. துணிவே துணை.


Ramesh Sargam
ஜன 08, 2024 07:06

இப்படி வொவொருவராக கைது செய்வதற்கு பதில், மேற்குவங்க ஆட்சியையே கலைத்துவிடலாம். குடியரசுத்தலைவர் ஆட்சி அமுல்படுத்தலாம். கைது, போலீஸ் விசாரணை, நீதிமன்ற வழக்கு, வாய்தா, வாய்தா... இதெல்லாம் வேண்டாம்.


thangam
ஜன 08, 2024 06:05

மர்ம கும்பல்...இல்ல மார்க்க கும்பல்


Kasimani Baskaran
ஜன 08, 2024 05:38

திராவிட அலிபாபா கோஷ்டி போலத்தான் அங்கும்... சுளுக்கெடுத்து விடுவார்கள் என்பது தெரியாமல் விளையாண்டார்கள்.


NicoleThomson
ஜன 08, 2024 05:27

ஷாஜஹானும் , மர்மகும்பலும் என்று ஒரு படமே எடுக்கலாம்


மேலும் செய்திகள்











புதிய வீடியோ