உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பண மோசடி வழக்கு; ஆம்ஆத்மி எம்.பி., வீட்டில் அமலாக்கத்துறை சல்லடை

பண மோசடி வழக்கு; ஆம்ஆத்மி எம்.பி., வீட்டில் அமலாக்கத்துறை சல்லடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: பணமோசடி வழக்கு தொடர்பாக, பஞ்சாபில் ஆம்ஆத்மி எம்.பி., சஞ்சீவ் அரோராவின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.பஞ்சாபில், பணமோசடி வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி., சஞ்சீவ் அரோராவின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஜலந்தர் மாவட்டத்தில் சஞ்சீவ் அரோராவின் தொடர்புடைய பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. பின்னர் நிருபர்கள் சந்திப்பில், சஞ்சீவ் அரோரா கூறியதாவது: நான் சட்டத்தை மதிக்கும் குடிமகன். அமலாக்கத்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு ஒத்துழைப்பேன். அவர்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிப்பேன் என்று அவர் கூறினார்.இதற்கிடையில், ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், டில்லி முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி., சஞ்சீவ் அரோரா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், கெஜ்ரிவால் வீடு, என் வீடு, சஞ்சய் சிங் வீடு, சத்யேந்திர ஜெயின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. மோடியின் விசாரணை அமைப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக போலி வழக்குகளை போடுவதில் ஈடுபட்டனர். எம்.பி., மீதான சோதனைகள் கட்சியை உடைக்கும் முயற்சி' என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

அப்பாவி
அக் 07, 2024 17:03

என்னது? ஒண்ணும்.கிடைக்கலியா? பழைய கம்பியூட்டர், பென் டிரைவ் நு அள்ளிட்டுப் போவீங்களே... பழைய கரண்ட் பில், மளிகைக் கடை பில்லெல்லாம் முக்கிய ஆவணங்களாச்சே...


Sridhar
அக் 07, 2024 12:48

படிச்சவனுங்க, க்ரிப்டோ ல புகுந்து கட்டுமரம் 2.0 ரேஞ்சுல செயல்படுவானுங்களோ? எந்த திருடன் கொள்ளையடிச்ச பணத்தை வீட்டுக்குள்ளயே வச்சிக்கிட்டு பிடிபடுவான்? குறைந்தபட்சம் பிணவறையிலாவது மறச்சுவைக்க மாட்டானா? எவ்வளவு வாட்டி இத சொல்லியும் இந்த படிச்ச திருடனுங்க சோதனை போட்டீங்களே பணம் கிடைச்சுதான்னு கேக்கறானுங்க. மக்களின் புத்திசாலித்தனத்துமேல இவனுகளுக்கு அவ்வளவு நம்பிக்கை


S.Bala
அக் 07, 2024 12:26

இந்தியாவின் பெரிய அரசியல் கட்சித்தலைவரெல்லாம் ஊழல் செய்துவிட்டு உச்சநீதிமன்றத்தி பிணை பெற்று யோக்கிய சிகாமணி போல் பேசுவார்கள். பணம் இருப்பவருக்கு அமலாக்கத்துறை , வருமான வரித்துறை இதெல்லாம் ஒன்றுமேயில்லை . அதில் ஒன்று சிசோடிய சிசோடியா , கெஜ்ரிவால், போன்றவர்கள். ஊழலை எதிர்த்து கட்சி ஆரம்பித்து ,ஊழல் செய்து சிறை சென்ற யோக்கிய சிகாமணிகளைதான் தலைவராக கொண்டாடுகிறோம். வாழ்க பணநாயகம் .


Ramesh Sargam
அக் 07, 2024 11:59

இந்த ஆம் ஆத்மி கட்சி ஆரம்பித்ததிலிருந்து ஒரு நல்ல செய்தியும் இதுநாள் வரை வரவில்லை. இனியும் வராது என்று நினைக்கிறேன். என்ன கொள்கைக்காக ஆரம்பித்தார்களோ, அதை விட்டு விட்டு, மற்ற எல்லா தகாத செயல்களையும் இந்த கட்சி செய்திகொண்டிருக்கிறது. கட்சியில் உள்ள யாராவது ஒரு தலைவர் மீது தினம் தினம் குற்றம் செய்த செய்தி வருகிறது. தேறுமா இந்த கட்சி? தேறவே தேறாது...


Lion Drsekar
அக் 07, 2024 11:39

எதற்க்காக இதுபோன்ற செய்திகள் , இன்று சல்லடை, நாளை நீதிமன்றத்தில் ஆஜர், பிறகு சிறை, நாட்கள் கடக்கும் விடுதலை, விசாரணை தொடரும், இவரது பதவியும் தொடரும், ஆண்டுகள் மறையும் தேர்தல் வந்தால் கூட்டு, குழம்பு .. இதற்க்கு விடிவே இல்லாயா. சரித்திரத்தில் யாராவது ஒருவர் தண்டனை பெற்று வாழ்நாள் முழுவதும் மீண்டும் பதவிக்கே வரமுடியாது என்று கூற முடியுமா,


SANKAR
அக் 07, 2024 12:15

yes.. Laloo.. I remember..never came to chair again


முக்கிய வீடியோ