ஸ்ரீசத்ய சாய் உயர்கல்வி நிறுவனத்தின் 43வது பட்டமளிப்பு விழா: கோலாகலமாக நடந்தது
''பண்பு, தனி மனிதர்களை உருவாக்குவதில் கல்வி முக்கிய கருவியாக பங்காற்றுகிறது,'' என வி.ஐ.டி., பல்கலைக்கழக துணை வேந்தரான பேராசிரியர் டாக்டர் பஞ்சநாத சேதுராமன் தெரிவித்தார்.ஆந்திர மாநிலம் புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில், இன்று எஸ்.எஸ்.எஸ்.ஐ.எச்.எல்., எனும் ஸ்ரீசத்ய சாய் உயர்கல்வி நிறுவனத்தின், 43வது பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவில், கல்வியாளரும், வி.ஐ.டி., பல்கலைக்கழகத்தின் துணை வேந்தருமான பேராசிரியர் டாக்டர் பஞ்சநாத சேதுராமன், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.உயர்கல்வியில் முன்மாதிரியான தலைமைத்துவத்துக்கும், புதுமையாக கற்பித்தலுக்கும், அர்ப்பணிப்புக்கும் பெயர் பெற்ற சேதுராமன், என்.சி.பி., எனும் தேசிய கல்வி கொள்கை - 2020ஐ, அனைத்து கல்வி நிறுவனங்களிலும் செயல்படுத்துவதில் முக்கிய பங்களிப்பை அளித்துள்ளார். பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் ஆசியுடன், பட்டமளிப்பு விழா ஊர்வலத்துடன் துவங்கியது. இதை தொடர்ந்து, பல்கலைக்கழகத்தின் சாதனைகள், கல்வி, ஆராய்ச்சி, சேவைகள் ஆகியவை அடங்கிய ஆண்டறிக்கையை துணைவேந்தர் வாசித்தார்.கல்விக்கு முக்கியமான பத்து 'சி'க்கள் தேவை
* ஆர்வம் (கியூரியாசிட்டி) - தொடர்ச்சியான கற்றல், ஆய்வுக்கான ஒரு தீப்பொறி.* நம்பிக்கை (கான்பிடன்ஸ்) - தன்னை நம்புதல், சுவாமியின் போதனைகளில் வேரூன்றியது.* ஒருங்கிணைப்பு (கன்வெர்ஜென்ஸ்) - அறிவு, மதிப்புகளை சரியான இணக்கத்துடன் ஒன்றிணைத்தல்* ஒத்துழைப்பு (கொலாபிரேஷன்) - சுவாமியை வழிகாட்டியாக கொண்டு, தங்கள் பயணத்தை தொடருவோருக்கு நன்றி செலுத்துவது,* மாற்றம் (சேஞ்ச்) - மாற்றத்தை ஒன்றே மாறாதது* அர்ப்பணிப்பு (கமிட்மென்ட்) - நேர்மை, அர்ப்பணிப்புடன் சிறந்து விளங்குதல்* தொடர்பு (கம்யூனிகேஷன்) - அறிவையும், மதிப்பையும் திறம்பட பகிர்தல்* வழிப்பாதை ( கன்டியூட்) - சுவாமிகளின் அறிவுரையை பின் பற்றுதல்* பாத்திரம் (கேரக்டர்) - வாழ்க்கையின் நோக்கமே அடித்தளம்