உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிளேடால் கழுத்து அறுத்து முதியவர் இறப்பு

பிளேடால் கழுத்து அறுத்து முதியவர் இறப்பு

பாலக்காடு; பாலக்காடு அருகே, முதியவர் பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டு இறந்தார்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் திருமிற்றைக்கோடு இரும்பகச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் அச்சுதன் 62. இவருக்கு மனநிலை பாதிப்பு உள்ளது.இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு அஸ்வதி, ரம்யா, ஐஸ்வர்யா, ஆதிரா ஆகிய பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், நேற்று காலை படுக்கையறையில் அச்சுதன், பிளேடால் கழுத்தறுத்து கொண்டு கிடப்பதை குடும்பத்தினர் கண்டனர். உடன் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் இறந்து விட்டதாக பரிசோதனை செய்த டாக்டர்கள் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த பட்டாம்பி போலீசார், அவரது உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக பட்டாம்பி தாலுகா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி