உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஷோபா மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

ஷோபா மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

புதுடில்லி: பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் தமிழர்கள் குறித்து மத்திய அமைச்சர் ஷோபா பேசியது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.கர்நாடகாவில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் ஷோபா, ‛ தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வந்து எங்கள் கர்நாடகா ஹோட்டலில், வெடிகுண்டுகளை வைக்கின்றனர். எங்கள் மாநிலம் மீது தாக்குதல் நடத்துகின்றனர். அவர்கள் மீது கர்நாடக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை‛ என்றார்.இவரின் சர்ச்சை பேச்சுக்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு எழுந்தது. முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். அவர் மீது தேர்தல் ஆணையத்தில் தி.மு.க., சார்பில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து ஷோபா தனது பேச்சுக்கு மன்னிப்பு தெரிவித்தார். இது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஷோபா மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடகா தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

நரேந்திர பாரதி
மார் 21, 2024 03:41

"பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் தமிழர்கள் குறித்து மத்திய அமைச்சர் ஷோபா பேசியது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது."...அப்படி பாத்தா, திருட்டு திராவிடியா பசங்க பேசுனா பேச்சுக்கு, எவனும் தேர்தலில் நிக்க முடியாது


abdulrahim
மார் 21, 2024 09:35

அப்போ நடவடிக்கை எடுங்க ....


DARMHAR/ D.M.Reddy
மார் 21, 2024 03:27

நுணலும் தனது வாயால் கெடும் என்ற சொலவடையை இவர் மறந்து விட்டா போலும்


Mohan
மார் 20, 2024 23:26

ஏனய்யா அலி, ஸ்ரீநிவ்,செந்தமிழ் கார்த்திக், வேலன் ஐயங்கார், (விடியலின் டிஜிடல் டீம்) மத்திய அமைச்சர்தேர்தல் அலவுன்ஸ் பண்ணதால சும்மா தமிழ்நாட்டுக்காரன்னு சொன்னது தப்புன்னா, விடியல் மினிஸ்டர் நாட்டின் பிரதமரை பீஸ் பீஸ் ஆக்கிடுவேன்னு சொன்னது.....மோடியை கொஞ்சறதுக்கு சொன்னதா? இநதியா என் நாடே இல்லை ராமர் சாமியே இல்லை சொன்னது. எங்கே சொன்னாரு?.......சொந்த ஊட்டு. .....க .......ஸ்ல உக்காந்தா சொன்னாரு??? சுடாலின் சொன்னாரே மோடி பொய் சொல்கிறார் .ஓர ரவஞ்சனை செய்தாக....."". தேர்தல் நேரத்துல சொல்றது மட்டும் தப்பு.... விடியல் அறிவாளிகள் எப்பப்ப வேணும்னாலும் நாட்டின் பிரதம மந்திரியை அவமானப்படுத்தி பேசலாம் தப்பில்ல. ?? நல்லாருக்கய்யா உங்க நாயம் ?


abdulrahim
மார் 21, 2024 09:39

யோவ் ஒரு மாநில மக்களையே அவதூறாக பேசி இருக்கிறார் இதற்கும் உங்க ... வக்காலத்து வாங்கணுமா ?


venugopal s
மார் 20, 2024 22:34

தமிழ் தமிழர் நலன் தமிழகம் என்று வாய் கிழியப் பேசும் பிரதமர் மோடி அவர்களும் அண்ணாமலை உட்பட தமிழக பாஜக தலைவர்கள் எவருமே இந்த விஷயத்தில் ஒரு கண்டனம் கூட தெரிவிக்காமல் வாய் மூடி மௌனம் சாதிப்பது ஏன்?


rsudarsan lic
மார் 20, 2024 21:58

Atleast this should put an end to inter state rivalry. It's in the blood of both stares, and many states


rsudarsan lic
மார் 20, 2024 21:56

Before commenting on Shoba, please check you are not violating SC ST harassment Act. Because one MP in Tamilnadu has been spitting venom on Hindus and being shielded under the Act.


rsudarsan lic
மார் 20, 2024 21:55

எந்த மாதிரி நடவடிக்கை என்று தேர்தல் கமிஷன் வரையறுத்தால் நல்லது. பல பேரை தண்டிக்க வசதியாக இருக்கும்


Oru Indiyan
மார் 20, 2024 20:52

ஆனால் நாங்கள் "பிஹாரி உத்தரப்பிரதேச மக்களை பிள்ளை திருடுபவன்" , "பாணி பூரி விற்பவர்" என்று சொல்வோம். ஆமாம் இப்ப தேர்தல் ஆணையம் எடுத்த முடிவு மாறுமா ஒரு வேளை அது உண்மையாக இருந்தால்..


Easwar Kamal
மார் 20, 2024 20:50

நடவடிக்கை மட்டும் பத்தாது வருகின்ற எலெக்ஷனில் நின்றால் தடை செய்ய வேண்டும். ஏற்கனவே இயற்கை பெங்களூர் தண்ணி இல்லாமல் வாட்டி எடுக்கிறது. இயற்கை வேறு வழியில் இந்த கர்நாடகாவை பலி வாங்கும்.


Godfather_Senior
மார் 20, 2024 20:39

இதைவிட மட்டமாகவும் கேவலமாகவும் பேசிய திமுக தலைவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. மேலும் ராகுல் பாபா பேசியதை விட எந்த (திமுக தவிர) ஆசாமியும் பேசினதா தெரியலே. ஆமாம், இப்போ மோடிக்கு நானூறு சீட்டுக்கு மேலே கிடைக்கிறதுக்கு எல்லா கான்ஸ்டிடியூஷனல் பாடியும் எசகு பிசகா வேலை பண்றங்களோன்னு டவுட்டு தனபாலுவுக்கே வந்திருக்கணுமே நமக்கு டவுட்டு வராமலா இருக்கும் கொஞ்சம் மோடி , அமித் ஷா மற்றும் அண்ணாமலை மீதும் நடவடிக்கை எடுங்க, அப்போதான் நானூற்றி ஐம்பதை தாண்டி தாமரை கண்டிப்பா வளரும்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை