உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தல் நேரம்: கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்க பரிசீலிக்கலாம்: உச்சநீதிமன்றம்

தேர்தல் நேரம்: கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்க பரிசீலிக்கலாம்: உச்சநீதிமன்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டு டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் எனக்கூறிய உச்சநீதிமன்றம், ஒருவேளை ஜாமின் வழங்கினால் விதிக்கப்பட வேண்டிய நிபந்தனை குறித்து 7ம் தேதி தெரிவிக்க வேண்டும் என அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டது.டில்லி மதுபானக் கொள்கை மோசடி வழக்கில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் முறையிட்டுள்ளார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சீவ் கண்ணா, 'கெஜ்ரிவால் விவகாரத்தில் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. அப்படி பறிமுதல் செய்து இருந்தால், கெஜ்ரிவால் எப்படி இந்த முறைகேட்டில் ஈடுபட்டார் என்பதை விளக்க வேண்டும். தேர்தலுக்கு முன்பு கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்' எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.

பரிசீலனை

இந்த வழக்கு இன்று (மே 3) விசாரணைக்கு வந்தபோது, லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டு டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்தார்.மேலும் அவர் குறிப்பிடுகையில், ''அவருக்கு ஜாமின் வழங்க முடிவு செய்யவில்லை; இந்த விவகாரத்தில் ஒரு கருத்தை முன்வைத்தோம் அவ்வளவுதான்; எவ்வித அனுமானமும் வேண்டாம். ஒருவேளை கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கினால் விதிக்கப்பட வேண்டிய நிபந்தனை குறித்து 7ம் தேதி தெரிவிக்க வேண்டும்'' என அமலாக்கத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

ஒத்திவைப்பு

அப்போது வாதிட்ட அமலாக்கத்துறை தரப்பு, ''கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கினால் அது வழக்கு விசாரணைக்கு பின்னடைவை ஏற்படுத்தும்'' என்றது. இதனையடுத்து, ''கெஜ்ரிவாலுக்கு ஏன் ஜாமின் வழங்கக்கூடாது என்பது குறித்து அமலாக்கத்துறையின் விரிவான வாதத்தை 7ம் தேதி கேட்கிறோம். மேலும் சிறையில் இருந்தபடியே அவர் கோப்புகளில் கையொப்பமிடுவது தொடர்பாகவும் விளக்கமளிக்க வேண்டும்'' எனக்கூறி வழக்கை மே 7க்கு ஒத்திவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 38 )

Narayanan
மே 06, 2024 13:54

உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்க முடிவு எடுத்துவிட்டதாக தெரிகிறது பணம் பதினொன்றும் செய்துவிட்டதா ? எக்காரணம் கொண்டும் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்க கூடாது இதற்கான எல்லா சட்டநுணுக்கங்களையும் ஆராய்ந்து அமலாக்கத்துறை அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் சட்டத்தை சரியாக செயல்பட செய்யுங்கள்


vijay
மே 06, 2024 11:40

மாண்புமிகு மரியாதைக்குரிய நீதிமன்றத்தின் மீது மக்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கு நீதிமன்றம் ஊழல்வாதிகளை தண்டிக்கும் என்ற நம்பிக்கை இருக்கு தயவுசெய்து எங்களுக்கு நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வருமாறு செய்யுங்கள்


vidhu
மே 06, 2024 10:12

தேர்தல் நேரத்தில்தான் முக்கியமா ஜாமீன் தரக்கூடாது என்ன யுவர் ஹானர் சரிதானே


Jai
மே 04, 2024 10:36

செந்தில் பாலாஜியோ கெஜ்ரிவாலோ ஏன் பொன்முடியார் வழியை பின்பற்ற கூடாது?


காஷ்மீர் கவுல் பிராமணன்.
மே 04, 2024 10:34

மோடி ஐயா உங்களுக்கு புண்ணியமாக போகட்டும் அடுத்த முறை பிரதமராக பதவியேற்றவுடன் இந்த மக்கள் விரோத உச்சநீதிமன்றத்தின் சர்வாதிகாரத்தை ஒழிக்கின்ற வழியைபாருங்கள்.


மணியன்
மே 04, 2024 08:44

இந்திய வரலாற்றில் ஒர இலாகா இல்லாத முதல் அமைச்சர். 100க்கும் மேற்பட்ட செல்போன்களை உடைத்து முக்கிய தடயங்களை அழித்துள்ளான். இவனுக்கு பரிந்து பேசும் எப்படி பொதுமக்கள் நம்ப முடியும். அடுத்த மோடி அரசு முதல் வேலையாக நீதித்துறையில் தகுந்த மாற்றம் செய்து மக்களுக்கு நம்பிக்கையை தர வேண்டும்.


karunamoorthi Karuna
மே 04, 2024 08:09

அரசியல் அமைப்பு படி சட்டத்தின் முன் அனைவரும் சமம்


J.V. Iyer
மே 04, 2024 04:26

தேர்தல் நேரத்தில்தான் இவனுக்கு ஜாமீன் அளிக்கக்கூடாது என்று பள்ளிச்சிறுவனுக்கும் தெரியும் ஆனால்


Jayaraman Pichumani
மே 03, 2024 23:01

பல சமயங்களில் உச்ச நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்படுகிறது ஒரு குற்றவாளிக்கு எதற்கு ஆட்சி அதிகாரம்? அமலாக்கத் துறை தனது தரப்பில் உள்ள நியாயத்திற்கு ஆதரவாக தேவையான ஆதாரங்களைக் கொடுத்த பிறகும் "நிதிபதி" இப்படி ஒரு கருத்தை ஏன் சொல்கிறார் என்று தெரியவில்லை


C.SRIRAM
மே 03, 2024 23:00

எங்கே பெரியண்ணன் நீதி மன்றம் இன்னமும் வரவில்லையே ஊழல் வாதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லையே என்று பார்த்துக்கொண்டிருதேன் சரியான நேரத்துக்கு வந்தே விட்டார் இவர் செய்யும் பெரும்பாலான வேலைகள் மக்களுக்கு இத்துறை மீது பெரும் அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது சமீபத்தில் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட தமிழக அரசியல்வாதியின் தண்டனையை குறைத்து மீண்டும் பதவியேற்க வைத்து தனது தேசிய கடமையை நிறைவேற்றீனார்


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ