உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தல் பத்திரத்துக்கு தடை: தீர்ப்பை ஆய்வு செய்யும் அரசு

தேர்தல் பத்திரத்துக்கு தடை: தீர்ப்பை ஆய்வு செய்யும் அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தேர்தல் பத்திர விற்பனை திட்டம் செல்லாது என, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மத்திய அரசு ஆய்வு செய்து வருவதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் தேர்தல் பத்திர விற்பனை, அரசியலமைப்புக்கு எதிரானது, மக்களின் தகவல் அறியும் உரிமையை மீறுவதாக கூறி உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.நீதிமன்றம் உத்தரவுப்படி, தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்களின் விபரங்களை வெளியிடுவது, வங்கி சட்டங்களுக்கு எதிரானது என, மத்திய அரசு கருதுவதாக துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும், கறுப்புப் பணத்தை ஒழிக்கும் அரசின் நடவடிக்கையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதும் அரசுக்கு கவலை அளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பை, அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

ஆரூர் ரங்
பிப் 17, 2024 14:53

2014 க்கு இப்போது ஆளும் கூட்டணியின் தலைமைக் கட்சியாக இருந்த காங்கிரஸ்தான் அதிகமாக நன்கொடை பெற்றுக் கொண்டிருந்தது. அதற்குப் பின் ஆட்சிக்கு வந்த பாஜக தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்திருந்தால் அதற்கு நன்கொடை அதிகமாக வர துவங்கியது. அதிக தொண்டர்கள் உறுப்பினர்களை கொண்ட கட்சிக்கு அதிக நன்கொடை சேர்வது இயற்கைதான். ஆனால் தீய சக்தி பத்தாண்டுகள் ஆட்சியிலே இல்லாத போதும் பல கோடி நன்கொடை பெற்றது முன்பு வாங்கிய கருப்பை வெள்ளையாக்கியதால் கிடைத்ததுதான்.


Velan Iyengaar
பிப் 18, 2024 08:21

தீயசக்தி யார்??


ஆரூர் ரங்
பிப் 17, 2024 14:47

வாடிக்கையாளர்கள் கணக்கு, டெபாஸிட் DD விவரங்களையும் மூன்றாம் நபருக்குத் தரமாட்டோம் என்ற வாக்குறுதியை அளித்து விட்டுத்தான் வங்கிக் கணக்கு துவக்கப்படும். தேர்தல் பத்திரம் வாங்கிய அனைவரும் கார்பரேட் கிடையாது. அரசியல் கட்சியின் மீதுள்ள அபிமானத்தால் நன்கொடையாகத் தந்துள்ள சாதாரண வாடிக்கையாளர்களும் உண்டு.???? அவர்கள் யாருக்கு பத்திரம் வாங்கிக் கொடுத்தார்கள் என்பதை வெளியிடுவது வங்கிச் சட்டத்திற்கு எதிரானது. மேலும் நன்கொடையாளர் விவரங்களை வெளியிடுவதால் மாற்றுக்கட்சியினரால் வாடிக்கையாளருக்கு ஆபத்து ஏற்பட்டால் வங்கியே பொறுப்பேற்க வேண்டியிருக்கும். இதையெல்லாம் கோர்ட் மனதில் கொண்டதாகத் தெரியவில்லை. இத்தீர்ப்பால் விரும்பி நன்கொடை கொடுத்த எல்லோரையுமே சாதாரண பொதுமக்கள் திருடர்களாகப் பார்க்கும் மனோநிலை உருவாக்கி விட்டது


Velan Iyengaar
பிப் 18, 2024 08:18

மூன்றாம் நபர் எவரும் உச்சநீதி மன்றத்தை விட உயர்ந்தவர் இல்லை மடியில் எவ்ளோ கணம் இருந்தால் இந்த தகவலை தர மறுக்க இப்படி குட்டிக்கரணம் போடுவீர்?? நாட்டின் நேர்மைக்கு... தேர்தல் நடத்துவதில் நடுநிலைத்தன்மைக்கு..... ஒரு சமனான போட்டியிடும் களம் அமைக்க வழிவகுக்க அரசியல் கட்சி நடத்துவதில் நேர்மை இல்லாதிருக்கும் பட்சத்தில் தனிநபர் உரிமையை தள்ளி வைப்பது குற்றமாகாது


Velan Iyengaar
பிப் 18, 2024 08:19

கோடி கணக்கான ரூபாய் அரசியல் கட்சிக்கு பிரதிபலன் பார்க்காமல் கொடுப்பவன் யோக்கியனாக இருக்க வாய்ப்பு பூஜ்யம் கோடிக்கணக்கான ரூபாயை இதற்க்கு பொதுமக்களுக்கு நேரடியாக தானம் செய்து இருக்கலாம்


Sridhar
பிப் 17, 2024 13:15

முன்புபோல நேரடியா செக் ஆகவோ இல்ல கேஷ் ஆகவோ வாங்கிட்டு போறாங்க. RTI சட்டப்படி யாராரு எதிர்க்கட்சிகளுக்கு நன்கொடை கொடுக்கராங்கங்கற விஷயம் இப்போ வெட்டவெளிச்சமா தெரியப்போகுது. இனிமே ஒரு பய எதிர்க்கட்சிகளுக்கு பணம் கொடுக்கமாட்டார்.


sahayadhas
பிப் 17, 2024 11:39

வெளிநாட்டு திருட்டு பணம் எவ்வளவும் வந்து இந்திய கரன்சி 1 டாலர் 58 ரூ-to88 மீண்டும் 100 ரூ கீழே செல்ல அனுமதிக்கமாட்டோம்


ஜெய்ஹிந்த்புரம்
பிப் 17, 2024 09:32

// தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்களின் விபரங்களை வெளியிடுவது, வங்கி சட்டங்களுக்கு எதிரானது... //


ஜெய்ஹிந்த்புரம்
பிப் 17, 2024 09:30

//கறுப்புப் பணத்தை ஒழிக்கும் அரசின் நடவடிக்கையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதும் அரசுக்கு கவலை ...// கொடுத்தவன் யாருன்னு மறைத்து, எவ்வளவு வேண்டுமானாலும் தரலாம், வெளிநாட்டிலிருந்து பினாமி ஷெல் கம்பெனி மூலம் திருட்டுப் பணம் தரலாம், கம்பெனி நஷ்டமானாலும் கணக்கில்லாமல் பணம் தரலாம், ஆனால் பேரை, ஊரை சொல்லமாட்டோமுன்னு ஒரு திருட்டு சட்டம் போட்டு கொள்ளையடிச்சிட்டு நாடகம்


RAMAKRISHNAN NATESAN
பிப் 17, 2024 08:13

கோர்ட்டு தலையிட முடியாத அளவுக்கு, சட்டம் குறுக்கே வர முடியாத அளவுக்கு என்ன பண்ணலாம் என்று மண்டையைக் குடைந்து ஆலோசனை செஞ்சிக்கிட்டு இருக்கோம் ....... இப்படிக்கு நேர்மையான பாஜக கட்சி ......


GMM
பிப் 17, 2024 08:12

தேர்தல் பத்திர தீர்ப்பை மத்திய அரசு கட்டாயம் ஆய்வு செய்ய வேண்டும். பிஜேபி, காங்கிரஸ்.. போன்ற அரசியல் கட்சிகள் எந்த பாதிப்பும் அடையாது. நிறுவனங்களை பாதிக்காது. இது வெள்ளை பணம். ஆனால், நன்கொடை நிறுவனங்கள் அரசியலில் சிக்கி, நிலை குலையும். இந்தியாவை விட்டு வெளி செல்லும். சட்டங்கள் முன் தேதியில் அமுல்படுத்துவதால் அச்சம் கொள்ளும். மனுதாரர், அரசு வழக்கறிஞர் வாதம் சரியல்ல. நிறுவனங்களை கட்டுக்குள் கொண்டுவர இந்த வழக்கு? தீர்ப்பு திசை மாறி விட்டது.? (வாக்கு பதிவு ரகசியம் காரணம் என்ன? தகவல் உரிமை விதியில் நன்கொடை வராது? ஆளும் கட்சி அதிக நிதி பெறுவது வழக்கம்.) PRA, IT.. போன்றவற்றில் திருத்தம் ஒன்றுடன் ஒன்று தொடர்பில் உள்ளதால் தான். முன்பு காது வலி என்றால் மருத்துவர் காது, மூக்கு, தொண்டையை பரிசோதித்து மருந்து தருவார்.


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ