உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சத்தீஸ்கரில் என்கவுன்டர்; ரூ.17 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட நக்சலைட்டுகள் 4 பேர் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கரில் என்கவுன்டர்; ரூ.17 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட நக்சலைட்டுகள் 4 பேர் சுட்டுக்கொலை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நக்சலைட்டுகள் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.சத்தீஸ்கர் மாநிலத்தில், நக்சலைட்டுகளை ஒழிக்க பாதுகாப்பு படையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று ( ஜூலை 27) பிஜாப்பூர் மாவட்டத்தில், நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=d3asypw8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில், நக்சலைட்டுகள் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட நக்சல்களில் இரண்டு பெண்களும் அடங்குவர். இவர்கள் குறித்து தகவல், தெரிவிப்பவர்களுக்கு ரூ.17 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டு இருந்தது.சம்பவ இடத்திலிருந்து, வெடி மருந்துகள் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
ஜூலை 27, 2025 21:33

என்கவுண்டர் தொடரவேண்டும். நாட்டில் உள்ள அனைத்து நக்சலைட்டுகளும் வீழ்த்தப்படவேண்டும்.


Nada raja
ஜூலை 27, 2025 16:36

சுட்டுக் கொல்லப்பட்டதில் இரண்டு பேர் பெண்களாக.. அவர்கள் ராஜசிகள்


SUBBU,MADURAI
ஜூலை 27, 2025 16:36

சமீபகாலமாக போலீசாரிடம் சரணடைந்த நக்ஸல்கள் மூலமாக விஷயத்தை கறந்து ஒளிந்து கொண்டிருக்கும் நக்ஸலைட்டுகளை சுலபமாக போட்டுத் தள்ளுகிறார்கள். சமீபத்தில் நக்ஸல்கள் இல்லாத இந்தியாவாக மாற்றுவோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சொன்னது நிறைவேறிக் கொண்டிருக்கிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை