பிரதமரே ஆனாலும் பதவி விலகுவார்!
ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் மற்று ம் சபாநாயகர் பதவியில் இருப்பவர்களை நீதிமன்றங்கள் விசாரணைக்கு அழைப்பதை தடுக்கும் வகையில், முன்னாள் பிரதமர் இந்திரா, 39வது சட்டத் திருத்தத்தை கொண்டு வந்தார். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த அரசியல் சட்டத் திருத்தத்தில், பிரதமர் கூட விசாரணைக்கு உட்பட்டவரே என்பதை உறு தி செய்துள்ளார். இதற்காகவே கிரிமினல் குற்றங்களுக்காக கைதாகி தொடர்ந்து 30 நாட்கள் சிறையில் இருக்க நேரிட்டால், பிரதமரே ஆனாலும், பதவி பறிபோகும் வகையில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த திருத்தத்தை கொண்டு வரச் சொன்னதே பிரதமர் தான். அதன்படி பிரதமர் தொடர்ந்து 30 நாட்களுக்கு சிறைக்கு செல்ல நேரிட்டால், நிச்சயம் பதவியை ராஜினாமா செய்வார். - அமித் ஷா மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,