உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வயநாடு மக்களுக்கு அனைவரும் உதவ வேண்டும்: ராகுல், பிரியங்கா வேண்டுகோள்

வயநாடு மக்களுக்கு அனைவரும் உதவ வேண்டும்: ராகுல், பிரியங்கா வேண்டுகோள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வயநாடு: ‛‛ நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைவரும் உதவி செய்ய வேண்டும் '' என எதிர்க்கட்சி தலைவர் ராகுலும் மற்றும் அவரது சகோதரியும் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்காவும் கூறியுள்ளனர்.வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டதுடன், நிவாரண முகாம்களில் தங்கி உள்ள மக்களுக்கு ஆறுதல் தெரிவித்த பிறகு ராகுலும், பிரியங்காவும் நிருபர்களை சந்தித்தனர்.

வேதனை

அப்போது ராகுல் கூறியதாவது:வயநாடு நிலச்சரிவு மிகப்பெரிய பேரிடர். பெரும் துயரத்தை அளித்து உள்ளது. அப்பகுதி மக்களுக்கு அனைவரும் உதவி செய்ய வேண்டும். அனைத்து உதவிகளும் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக மருத்துவ வசதி கிடைப்பது அவசியம். ஏராளமானோர் வீடுகளையும், உறவினர்களையும் இழந்து தவிப்பது வேதனை அளிக்கிறது.

நன்றி

மீட்பு பணியில் அயராது ஈடுபடுவோருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். வயநாடு சம்பவத்தை வைத்து அரசியல் செய்ய விரும்பவில்லை. அரசியல் குறித்து பேச உகந்த இடம் இது அல்ல. எனது தந்தையை இழந்த போது ஏற்பட்ட துயரத்தை, நிலச்சரிவால் பெற்றோரை இழந்துள்ளவர்களிடம் உணர்கிறேன். இவ்வாறு ராகுல் கூறினார்.

துயரம்

பிறகு பிரியங்கா கூறியதாவது: ஒட்டு மொத்த நாடும் வயநாடு மக்களுக்கு உதவ வேண்டும். உதவுபவர்களை பார்க்கும் போது உருக்கமாக உணர்கிறோம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து வகையிலும் உதவி செய்யப்படும். ஒவ்வொருவரும் குடும்பத்தை காப்பற்ற முயன்று தோற்று உயிரிழந்த துயரத்தை உணர்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

தாமரை மலர்கிறது
ஆக 01, 2024 23:01

மத்திய அரசு ராணுவத்தை அனுப்பி அனைத்து உதவிகளையும் செய்துவருகிறது. இவர் சும்மா வந்து வெறுங்கையை ஆட்டி நீட்டி முழக்கி பேசிவிட்டு சென்றால் எல்லா செயலும் தானே செய்தமாதிரி காட்டிக் கொள்கிறார். ராகுல் வயநாட்டிற்கு செல்லாமல் கப்சிப்பென்று இருந்தால், அனைத்து வேலைகளும் ஒழுங்காக நடக்கும். வீண் மீடியா ஜம்பம் செய்தால், மத்திய அரசு வயநாட்டு மக்களை தவிக்கவிட்டு ஓடிவிடும். ராகுலை விரட்டவேண்டிய பொறுப்பு வயநாட்டு மக்களுடையுது.


ராமகிருஷ்ணன்
ஆக 01, 2024 22:23

உமக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்தவர்கள் இந்த தண்டனை அடைந்து உள்ளார்கள். உமது பிரதமர் கனவுக்கு ஓட்டு போட்டால் இந்தியாவுக்கு என்ன தண்டனை கிடைக்குமோ!தெய்வமே காப்பாற்று.


Ramesh Sargam
ஆக 01, 2024 20:32

டெல்லி திரும்பிய பிறகு எதிர்க்கட்சி தலைவனாக நானே வயநாடு சென்று மக்கள் துயர் கேட்டறிந்தேன். ஆனால் பிரதமர் மோடி மற்றும் பாஜக அமைச்சர்கள் யாரும் செல்லவில்லை என்று அரசியல் செய்வார் பாருங்கள்.


kuruvi
ஆக 01, 2024 20:10

ராகுல் காந்தி அவர்களே நீங்கள் கடந்த 5 வருடங்களாக வயநாடு பார்லிமென்ட் உறுப்பினராக இருந்தீர்களே அப்போது, இப்போது பாதிக்கபட்ட இடங்களையெல்லாம் சென்று பார்த்து மக்களிடம் உரையாடி அவர்களின் குறைகள் என்ன என்று கேட்டு அறிந்தீர்களா? வயனாட்டில் இதுதான் முதல் சம்பவமா? ஒவ்வொரு வருடமும் மிக அதிகமாக மழை பொழியும் பொதெல்லாம் மண் சரிவு இருந்ததாக சரித்திரம் கூறுகிறதே. எப்போதாவது ஒருமுறையாவது இது சம்பவமாக சிந்தித்து மாநில அரசிடமோ அல்லது மாவட்ட ஆட்சியரிரிடமோ அல்லது பார்லிமென்டில் இதுபற்றிய தங்களுடைய கவலைகளை பகிர்ந்ததுண்டா? ஒரு நல்ல அரசியல்வாதியின் இலக்கணம் எப்போதும் மக்களைபற்றிய சிந்தனை இருந்துகொண்டே இருக்கவேண்டும். நீங்கள் வயநாடு மக்களுக்கு ஒரு பெரிய அநீதியை இழைத்து விட்டீர்கள். இது உங்களுடைய குற்றமட்டுமல்ல, அரசியல் அமைப்பின் குற்றமும்கூட.. ஒரு தொகுதியின் வாழ்விடம் இல்லாத ஒருவர் அந்த தொகுதியின் எந்தவித அரசியல் அமைப்பின் ஊருப்பினராக போட்டியிட தகுதீல்லாமை வேண்டும். அல்லது ஒருவர் போட்டி இடுவதற்கு முன் குறைந்தபட்சம் 5 வருடங்களாக அந்த தொகுதியில் வாழ்ந்திருக்க வேண்டும். அதுமட்டுமின்றி எலக்சன் மூலமாக தேர்வாகும் நபர்களுக்கும் அட்டெண்டன்ஸ் சிஸ்டம் கொண்டு வர வேண்டும். சட்டமன்றம் அல்லது பார்லிமென்ட் கூடாத நாட்களில் அவர்களின் இருப்பிடம் வரையரூக்கபட்டு சனி,ஞாயிறு தவிர்த்து தொகுதி மக்களுக்கு அட்டவணை வெளியிடவேண்டும்,வேறு காரணமின்றி தவறும் பட்சத்தில் அவர்களின் சம்பளம் பிடித்தம் வேண்டும். அப்போதுதான் அரசியல் அமைப்பின் நன்மைகள் மக்களை முழுமையாக சென்றடையும். இது ஒரு குருவியின் கண்நீர் குரல்.


Sivagiri
ஆக 01, 2024 20:07

என்ன ? சுதி குறைந்து விட்டது ? . . இல்லேனா , ஐயோ மோடி , ஐயோ அமிட்சா - ன்னு கோரஸ் பாடுவாய்ங்க . .


Balasubramanian
ஆக 01, 2024 19:33

அதிமுக கூட ரூ ஒரு கோடி தருகிறார்கள் - அனைத்து மக்களும் உதவ காத்திருக்கிறார்கள் - நீங்கள் என்ன செய்ய போவதாக உத்தேசம்


Duruvesan
ஆக 01, 2024 19:28

கட்டுமரம், போலி காந்தி குடும்ப ஒற்றுமை என்னா னு சொல்லு பாப்போம்? வாங்கி தான் பழக்கம். கொள்ளை அடிப்போம் ஆனால் சல்லி பைசா குடுக்க மாட்டோம், அப்பால ?


RAMAKRISHNAN NATESAN
ஆக 01, 2024 19:26

பிரியங்கா அண்ணி ..... உன் குடும்பம் கொள்ளையடிச்ச சொத்துக்களில் பாதியை அந்த மக்களுக்கு கொடுங்க .....


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஆக 01, 2024 19:10

உதவி செய்யும் முன்னர் அவர்களின் ஜாதி என்ன என்று கேட்டு, எஸ்.சி., எஸ்.டி., பிசி, எம்பிசி, முஸ்லிம், கிரிஸ்டியன் என்று பிரித்து பிரித்து கொடுக்க வேண்டும். ஓகேவா.


ManiK
ஆக 01, 2024 18:57

நீங்க இரண்டு பேரும் வந்தாச்சில்ல மழை இத்தாலி பக்கம் ஓடிடும்!!


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி