உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுற்றுச்சூழல் தொடர்பான துறைகளில் அபரிமிதமான முன்னேற்றம்: பிரதமர் மோடி பெருமிதம்

சுற்றுச்சூழல் தொடர்பான துறைகளில் அபரிமிதமான முன்னேற்றம்: பிரதமர் மோடி பெருமிதம்

புதுடில்லி: கடந்த 12 ஆண்டுகளில், சுற்றுச்சூழல் தொடர்பான அனைத்துத் துறைகளிலும் இந்தியா அபரிமிதமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.சுற்றுச்சூழல் வழக்குகளின் நிலை, பசுமை தீர்ப்பாயத்தின் வழக்குப் பட்டியல் உள்ளிட்டவற்றை வக்கீல்கள் மற்றும் மக்கள் எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில் என்ஜிடி (தேசிய பசுமை தீர்ப்பாயம்) மொபைல் செயலியை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இந்தியா ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கிற்குத் தடை விதித்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளில், சுற்றுச்சூழல் தொடர்பான அனைத்துத் துறைகளிலும் இந்தியா அபரிமிதமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

3 ஆயிரம் டூ 25 லட்சம்

புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் மீது நாங்கள் முக்கிய கவனம் செலுத்தியுள்ளோம்; இது சுற்றுச்சூழல் பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளது. பாரிஸில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு முன்னதாகவே நிறைவேற்றிய ஒரே ஜி20 நாடு இந்தியா ஆகும். 2014-க்கு முன்பு, இந்தியாவில் ஆண்டுக்கு 3,000 மின்சார வாகனங்கள் மட்டுமே விற்பனையாகின. கடந்த ஆண்டு, 25 லட்சம் மின்சார வாகனங்கள் விற்பனையாகின; இது நம்பமுடியாத வளர்ச்சியாகும்.

மெட்ரோ ரயில்

இது நமது சுற்றுச்சூழலுக்குப் பயனளிக்கிறது. பாஸ்டேக் முறையால், சுங்கச்சாவடிகளில் காத்திருக்கும் நேரமும் எரிபொருள் செலவும் கணிசமாகக் குறைந்துள்ளன. சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு, பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்புக்கான கூட்டமைப்பு தர நிலைகள் உருவாக்கப்பட்டு உள்ளது.உயிரி எரிபொருள் கூட்டமைப்பு உள்ளிட்டவை சுற்றுச்சூழல் மீதான இந்தியாவின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும். 2014க்கு முன்பு, இந்தியாவில் 5 நகரங்களில் மட்டுமே மெட்ரோ ரயில் சேவைகள் இருந்தன; அவற்றின் மொத்த நீளம் 250 கிலோமீட்டருக்கும் குறைவாகவே இருந்தது.

மின்மயமாக்கல்

இன்று, 20 நகரங்களில் 1,000 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளமுள்ள மெட்ரோ ரயில் சேவை வசதிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. ரயில்வே துறையில் மேற்கொள்ளப்பட்ட மின்மயமாக்கல் நடவடிக்கை, கோடிக்கணக்கான லிட்டர் டீசலைச் சேமிக்க நமக்கு உதவியுள்ளது. இது நமது சுற்றுச்சூழலுக்கும் நன்மை பயத்துள்ளது. எங்கள் வளர்ச்சி வேகமானதாகவும், அதே சமயம் நிலையானதாகவும் உள்ளது. இன்று, நீர் சேமிப்புத் துறையிலும் முன்னெப்போதும் இல்லாத அளவிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் 1.5 கோடி நீர் சேகரிப்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

K.n. Dhasarathan
செப் 19, 2026 17:13

பிரதமர் அவர்களே நீங்கள் சொன்ன நதி நீர் இணைப்பு என்னவாயிற்று ? 15 வருடங்களாச்சு, ஒன்றும் நடக்கவில்லை, அதனால் சுற்று சூழல் மட்டுமல்ல பல ஆயிரம் உயிர்கள் போனதுதான், பொருட்சேதம் பல ஆயிரம் கொடிகள், அதைப்பற்றி உங்களுக்கு அக்கறை உண்டா ? அக்கறை இருந்திருந்தால் இங்கே மழை வெள்ளம் அஸ்ஸாமில் துவம்சம் பண்ணும்போது நீங்கள் ஹாயாக வெளி நாட்டில் டூரில் இருக்கிறீர்கள், சரி அந்த பிறகாவது சென்று பார்த்து ஆறுதல், நிவாரணம் அறிவித்தீர்களா ? ஒன்றும் இல்லை பிறகு எப்படி ???


guna
செப் 19, 2026 23:45

தசரத மாங்காய் மன்னா. நீ இன்னும் அரைவேக்காடு என்று பலமுறை நிரூபிக்கிறார்


பெரிய ராசு
செப் 19, 2026 16:34

சுற்றுசூழலை நீங்க ஒரு பொருட்டே நினைக்கிறது கிடையாது எத்தனியோ நல்லது பண்ணும் பீஜேபி அரசாங்கம் சுற்று சூழல்,ஆராய்ச்சி மற்றும் உயர்கல்வி பூஜ்யம் .. எல்லாம் தனியார் அவர்களுக்கே திட்ட உரிமை மற்றும் ஊழல் ...


Barakat Ali
செப் 19, 2026 12:55

சுற்றுச்சூழல் தொடர்பான துறைகளில் அபரிமிதமான முன்னேற்றம் ?? சுற்றுச்சூழல் ஆடிட்டுக்குத் தயாரா ?? நமது சுற்றுச்சூழல் தரமென்ன என்பது பெட்ரோலியம், பிளாஸ்டிக் போன்ற தொழிற்சாலைகளில் பணிபுரியும் பொறியாளர்களுக்குத் தெரியும் .....


ஜெகதீசன்
செப் 19, 2026 12:21

உண்மை தான், பல விஷயங்களில் பாராட்டத்தக்க முன்னேற்றம். ஆனால், குப்பை மேலாண்மை படு மோசமாகவே இருக்கு. பொறுப்பற்ற மக்கள், பாலிதீன் கேரி பையை ஒழிக்க முடியாத நிலை, உணவு பேக்கிங் கழிவு, குப்பையை ஒட்டு மொத்தமாக எரிப்பது என நிலமை படு மோசமாக உள்ளது.


மேலும் செய்திகள்