உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உச்சக்கட்ட சந்தர்ப்பவாதம்!

உச்சக்கட்ட சந்தர்ப்பவாதம்!

நிதீஷ் குமாரைப் போன்ற சந்தர்ப்பவாதியை இதற்கு முன் பார்த்ததே இல்லை. இப்போது அவர் சந்தர்ப்பவாதத்தின் உச்சத்தில் உள்ளார். அதிகாரத்துக்காக அவர் என்ன வேண்டுமானாலும் செய்வார். திக்விஜய் சிங், மூத்த தலைவர், காங்.,

சரியான முடிவு!

பீஹார் மாநிலத்தின் வளர்ச்சியை கருத்தில் வைத்து தான், நிதீஷ் குமார் மீண்டும் தே.ஜ., கூட்டணியில் இணைந்துள்ளார். சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்ததற்காக அவரை பாராட்டுகிறேன். ராம்தாஸ் அத்வாலே, மத்திய அமைச்சர், இந்திய குடியரசு கட்சி

கடைசி வாய்ப்பு!

அடுத்த சில மாதங்களில் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், பா.ஜ., மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், அதற்கு பின் நாட்டில் தேர்தலே நடக்காது. ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கு மக்களுக்கு கடைசி வாய்ப்பு தான் இந்த தேர்தல்.மல்லிகார்ஜுன கார்கே, தலைவர், காங்கிரஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ