உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாக்., தலைவர்களின் மொழியைப் பயன்படுத்தும் காங்கிரஸ்; பட்னாவிஸ் குற்றச்சாட்டு

பாக்., தலைவர்களின் மொழியைப் பயன்படுத்தும் காங்கிரஸ்; பட்னாவிஸ் குற்றச்சாட்டு

மும்பை: பாகிஸ்தான் தலைவர்களின் மொழியை, ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் பயன்படுத்துவதாக மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் குற்றம்சாட்டியுள்ளார். நீண்ட அமளிகளுக்குப் பிறகு ஆபரேஷன் சிந்தூர் குறித்து பார்லிமென்டில் விவாதம் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று (ஜுலை 29) லோக் சபாவில் நடந்த விவாதத்த்தில் பங்கேற்று பிரதமர் மோடி பேசினார். பாகிஸ்தானை நம்பி காங்கிரஸ் இருப்பதாகவும், மக்கள் மனங்களில் சந்தேக விதைகளை விதைக்க காங்கிரஸ் முயற்சி செய்வதாக பிரதமர் குற்றம்சாட்டியிருந்தார். இன்று ராஜ்யசபாவில் காங்கிரஸின் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் கொடுத்துள்ளார். இந்த நிலையில், மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ஆபரேஷன் சிந்தூர் குறித்து காங்கிரஸ் கட்சியின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது; பிரதமர் மோடி ஆபரேஷன் சிந்தூர் பற்றி முழு உண்மையை வெளிப்படுத்தி விட்டார். ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு மகாதேவை வெறுப்பது ஒரு வழக்கமாகிவிட்டது. இதற்கு நான் என்ன செய்ய முடியும்?. காங்கிரஸ் தலைவர்கள், பாகிஸ்தான் தலைவர்களின் மொழியையே பயன்படுத்துகிறார்கள், இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
ஜூலை 30, 2025 21:00

Operation Sindoor தாக்குதல் பற்றி பாகிஸ்தான் அரசியல் தலைவர்களே ஒன்றும் கூறவில்லை.ஆனால் இங்குள்ள காங்கிரஸ் போன்ற தேசதுரோக கட்சியினர் அந்த தாக்குதல் பற்றி தேவையில்லாமல் சர்ச்சை செய்து பாராளுமன்ற கூட்டத்தொடரை அமைதியாக நடத்தவிடாமல் ரகளை செய்கின்றனர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை