பைக் மீது லாரி மோதி குடும்பமே உயிரிழப்பு
குருகிராம்: ஹரியானாவின் நுஹ் மாவட்டம் குஸ்புரி கிராமத்தைச் சேர்ந்த தஸ் ரீப்,38, தன் மனைவி சஹ்ருனி, 35, மகன்கள் அஹ்சன்,15, அர்மான், 10, ஆகியோருடன் பைக்கில் சென்றார். பெரோஸ்பூர் ஜிர்காவில் இருந்து பிவானுக்கு சென்ற கனரக லாரி, பைக் மீது மோதியது. துாக்கி வீசப்பட்ட நான்கு பேரையும் பொதுமக்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள், நான்கு பேரும் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பெரோஸ்பூர் ஜிர்கா போலீசார், விபத்து ஏற்பட்டவுடன் தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் தேடுகின்றனர்.