உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் குவிந்த விவசாயிகள் ராம் லீலா மைதானத்தில் போராட்டம்

டில்லியில் குவிந்த விவசாயிகள் ராம் லீலா மைதானத்தில் போராட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் உள்ள ராம் லீலா மைதானத்தில் நேற்று குவிந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள், தங்கள் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2020 - 21ல் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாய சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டன. இதை சம்யுக்தா கிசான் மோர்ச்சா என்ற விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு முன்னின்று நடத்தியது. தற்காலிகமாக அந்த போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக கிசான் மஸ்துார் மகாபஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என அந்த சங்கம் அறிவித்திருந்தது. இதன்படி, டில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நேற்று விவசாயிகள் மகாபஞ்சாயத்து கூட்டம் நடந்தது. இதில், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, குஜராத் உட்பட 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர். அப்போது, விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என வலியுறுத்தி, அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். விவசாயிகளின் போராட்டம் காரணமாக நேற்று டில்லியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 'டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் ஆயுதங்களுடன் வந்தால் அனுமதி இல்லை. 5,000 பேருக்கு மேல் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது' உள்ளிட்ட நிபந்தனைகளை போலீசார் விவசாயிகளுக்கு விதித்து, ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடத்த அனுமதி அளித்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

DR Sanaathan Rakshak Sanga Nadar
மார் 15, 2024 21:21

தேர்தல் சில வாரங்கள் இருக்கும் நிலையில் எந்த ஒரு சலுகையையும் கொடுக்க முடியாது மற்றும் எந்த திட்டமும் நிறைவேற்ற பட மாட்டது என்று தெரிந்தும் போராடும் இவர்கள் விவசாயிகள் இல்லை. காலிஸ்தான் ஆதரவாளர்கள்


Chandhra Mouleeswaran MK
மார் 15, 2024 20:27

ஒரு உண்மையான விவசாயி தன் மகளுடைய திருமணத்திற்குப் போவதாக இருந்தாலும் அவன் சட்டையை மாட்டிக் கொண்டு எழுந்து ஓடி விடமுடியாது ஆடு மாடு, கோழி குஞ்சு, செடி கொடி, மரம் மட்டை, நாய் பூனை, என்று அவன் தோட்டத்தை நமபி வாழும் ஆயிரக் கணக்கான உயிர்களுக்கு ஏதாவது உணவும் நீரும் அவன் திரும்ப வரும் வரை "தினமும் தவறாமல்" கிடைக்க அவன் "ஏதாவது ஏற்பாடு" செய்து விட்டுத்தான் வண்டி ஏற முடியும் அதுவும் மூன்று நான்கு நாட்களுக்கு மேல் அவனால் அவனது நிலத்திற்கு வெளியில் இருக்க முடியவே முடியாது அப்படி இருக்க, இந்தப் "பஞ்சாப் விவசாயப் பெருங்குடி மக்கள்" எப்படி ஐயா ஆறு மாதங்களுக்கு வெளியில் இருப்பது? அவனது செலவினங்க்ளை யார் தருகிறார்கள்? பெண்டு பிள்ளைகளுடன் எப்படி அவனால் போராட்டத்திற்காக மைதானங்களில் டேரா அடித்து வாழ முடியும்? ஆறேழு மாத காலம் நிலத்திற்குப் போகாமல் இருந்தால் பக்கத்துக் காட்டுக்காரன் அந்த "ஏழை விவசாயியின்" நிலத்தை வாரி விழுங்கி ஏப்பம் விட்டு விடுவான் காலிஸ்தானிகளை இன்னும் வளரவிடுவது ஆபத்தானது இந்திரா, ராஜீவ் கொலைகளுக்குப் பின் இந்தக் கயவர்களின் கொட்டம் அடங்கி இருக்க வேண்டும்


DVRR
மார் 15, 2024 16:56

"டில்லியில் குவிந்த விவசாயிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள்" 6 மாதம் விவசாய நிலத்துக்கு போகமாட்டர்களாம்???இங்கே உட்கார்ந்து ராத்திரியில் ரெகார்ட் டான்ஸ் பார்ப்பார்களாம். இவர்கள் விவசாயிகள்???இவர்களில் யாரும் ஒருவர் கூட விவசாயிகள் இல்லவே இல்லை. விவசாயிக்கு தெரிந்த ஒன்றே ஒன்று அவன் நிலம் அவன் கண்காணிப்பில் தினம் தினம் இருக்கவேண்டும்.


நரேந்திர பாரதி
மார் 15, 2024 14:52

தேச மற்றும் மாநில தலைநகர எல்லைக்குள் இனி எந்த போராட்டமும் நடத்த அனுமதியில்லை என சட்டம் இயற்ற வேண்டும்...போராட்டங்களால் சாதாரண மக்களுக்கும், அத்தியாவசிய சேவைகளுக்கும்தான் பெரும் இடையூறு


g.s,rajan
மார் 15, 2024 10:58

மத்திய அரசு எதற்கும் பொறுப்பு ஏற்காது.....


visu
மார் 15, 2024 08:52

பெரும்பாலும் இடை தரகர்கள் இவர்களை ஒலித்தால் விவசாயிகள் பயனடைவார்கள்


Sriram V
மார் 15, 2024 08:26

Supreme Court must bsn this organization as they are funded by anti national forces


VENKATASUBRAMANIAN
மார் 15, 2024 08:10

போலி விவசாயிகளை களம் இறக்குவதே காங்கிரஸ் ஆம்ஆத்மி கட்சிகளே.


g.s,rajan
மார் 15, 2024 07:46

இந்தியா ஒரு விவசாய நாடு ....


Ramesh Sargam
மார் 15, 2024 06:33

அங்கு கூடி இருப்பவர்கள் அனைவரும் போலி விவசாயிகள்.


மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை