உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுல் வேண்டுமானால் அணுகுண்டை பார்த்து பயப்படட்டும்: அமித் ஷா

ராகுல் வேண்டுமானால் அணுகுண்டை பார்த்து பயப்படட்டும்: அமித் ஷா

பிரதாப்கார்க்: ‛‛ ராகுல் வேண்டுமானால் அணுகுண்டை பார்த்து பயப்படட்டும். நாங்கள் பயப்பட மாட்டோம்'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.உ.பி., மாநிலம் பிரதாப்கார்க்கில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: காங்கிரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கு, அவர்களின் ஓட்டு வங்கியை நினைத்து பயப்படுகின்றனர். எதையும் நினைத்து பா.ஜ.,விற்கு பயமில்லை. ராமர் கோயிலை கட்டியதுடன், காசி விஸ்வநாதர் காரிடரையும் மோடி கட்டமைத்துள்ளார். இதனை முகாலய பேரரசர் அவுரங்கசீப் அழித்தார். இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால், அவர்களின் பிரதமர் வேட்பாளர் யார்? தங்களின் தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக பிரதமர் பதவி ஏற்பர் என அக்கூட்டணி தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.மணிசங்கர் அய்யரும், பரூக் அப்துல்லாவும், பாகிஸ்தானிடம் அணுகுண்டு உள்ளதால் அந்நாட்டை மதிக்க வேண்டும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை கேட்கக்கூடாது எனக்கூறி வருகின்றனர். அணுகுண்டை பார்த்து ராகுல் வேண்டுமானால் பயப்படட்டும். நாங்கள் பயப்பட மாட்டோம். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தம். அதனை நாங்கள் மீட்டெடுப்போம். இவ்வாறு அமித்ஷா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

R Kay
மே 13, 2024 01:24

அந்நிய தேசத்து கைக்கூலிகள் கூட்டணி புள்ளி கூட்டணி


Syed ghouse basha
மே 12, 2024 22:37

அமீத்ஷா அவர்களே ராகுல் பேசாத ஒன்றை கற்பனையாக நீங்களே சொன்னால் நம்ப மக்கள் என்ன பைத்திய காரர்களா?


ஜீவன்
மே 12, 2024 20:34

உ.பி ல காட்பாடிக்காரன் மைக்கில் ஜூம்லா அமைச்சர் முழக்கம்.


Apposthalan samlin
மே 12, 2024 17:32

அமெரிக்கா மாதிரி தொலைக்காட்சி விவாதம் நடத்த ராகுல் ஒத்து கொண்டார் மோடியிடம் இருந்து இன்னும் பதில் இல்லை ஏன் ?


Krishna
மே 12, 2024 18:12

Rahul PM candidate ah.. illa opposition party leader ah.. just MP avlo bthana


R Kay
மே 12, 2024 18:55

அரைவேக்காடுகளிடம் பேசி நேரத்தை விரயமாக்கும் அளவிற்கு அவரிடம் நேரம் இல்லை அவரென்ன வாரிசுகளைப் போல வேலையில்லா ஓசி பட்டதாரி மங்குனியா?


S.Govindarajan.
மே 13, 2024 05:57

பக்குவமில்லாத சின்னப்பிள்ளை, பப்பு ,மோடி முன்பு நிற்கத் தகுதியற்றவர்


Palanisamy Sekar
மே 12, 2024 16:32

தேர்தல் முடிவுகள் வரும்வரைதான் காங்கிரஸ் உயிரோடு இருக்கும் தேர்தல் முடிவுகள் தெரிந்த பிறகு, மோடிஜி பதவி ஏற்ற பின்னர் அது நிலைமை மோசமாகிவிடும் சோனியாவுக்கு இத்தாலி இருக்கு வத்தேரா விஷயமாக கோர்ட் கோர்ட்டாக பிரியங்கா ஏறி இறங்கிக்கொண்டிருப்பார் இரண்டாம் கட்டத்தலைவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பாஜகவில் இணைந்துவிடுவார்கள் அவ்ளோதான் காங்கிரசின் கதைமுடியப்போகுது விரைவில்


Kaleel MAJEED
மே 12, 2024 17:59

உங்களுக்கு சங்கு ஊதபோகும் நாள்வெகுதூரம் இல்லை


Rajarajan
மே 12, 2024 16:06

அப்படியானால், ஒருவேளை பாகிஸ்தான் அணுகுண்டை காட்டி இந்தியாவை மிரட்டினால், இந்தியாவை அவர்களுக்கு தாரை வார்த்துவிட வேண்டுமா ? என்ன லாஜிக் இது அப்படியானால், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், காலம் முழுவதும் இந்தியாவை பாகிஸ்தானுக்கு அடிமை சாசனம் எழுதிவைத்து விடுமா ??


ஆரூர் ரங்
மே 12, 2024 14:39

இந்திரா 1977 தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்கட்சிக் கட்சிகளுக்கு தலை (பிரதமர் வேட்பாளர்) கிடையாது. அது ஒரு கிச்சடிக் கூட்டணி என்று பிரச்சாரம் செய்ததை மறக்கவே முடியாது. சரித்திரம் திரும்புகிறது.


Senthoora
மே 12, 2024 16:03

ஆனால் உங்களுக்குத்தெரியுமோ, தெரியாதோ, ராகுல் குடும்பத்தினர் துப்பாக்கி குண்டையும், வெடிகுண்டையும் பார்த்தவர்கள் அவர்கள் குடும்பத்தினர், அணுகுடை போட்டாலும் அவங்க நல்லாயிருப்பாங்க ஏன்னா கர்மா அப்படி


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ