உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுல் நடவடிக்கையால் அசவுகரியம்: நடவடிக்கை கோரி ராஜ்யசபா தலைவரிடம் பெண் எம்.பி., புகார்

ராகுல் நடவடிக்கையால் அசவுகரியம்: நடவடிக்கை கோரி ராஜ்யசபா தலைவரிடம் பெண் எம்.பி., புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பார்லிமென்ட் வளாகத்தில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் நடந்து கொண்ட விதம் தனக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தியதாக,பா.ஜ.,வைச் சேர்ந்த ராஜ்யசபா பெண் எம்.பி., ஒருவர் அவைத்தலைவர் ஜக்தீப் தன்கரிடம் புகார் அளித்துள்ளார்.இது தொடர்பாக நாகலாந்தைச் சேர்ந்த எம்.பி., பாங்னோன் கோன்யக், ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கரிடம் அளித்த புகார் மனுவில் கூறியுள்ளதாவது: அம்பேத்கருக்கு எதிராக காங்கிரஸ் செய்த அட்டூழியங்களை கண்டித்து அமைதியான முறையில் போராட்டத்தில் பங்கேற்றேன்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lnt9tfvn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்காக பதாகைகளுடன் பார்லிமென்ட் வளாகத்தில் நின்று கொண்டு இருந்தேன். மற்ற கட்சி எம்.பி.,க்கள் பார்லிமென்டிற்குள் நுழைவதற்கு ஏதுவாக பாதுகாவலர்கள் வழியை ஏற்பாடு செய்திருந்தனர். திடீரென, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலும், அவரது கட்சி எம்.பி.,க்களும் அந்த வழியாக செல்லாமல் என் அருகில் வந்தனர். ராகுல் என் அருகே வந்து சத்தமாக கோஷம் போட்டார்.எனக்கு அருகே அவர் நெருங்கி நின்றது எனக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தியது. இதனால், கனத்த மனதுடன் அங்கிருந்து நகர்ந்துவிட்டேன். எந்த எம்.பி.,யும் இவ்வாறு நடந்து கொள்ளக்கூடாது. பெண் எம்.பி., ஆகிய நான், எஸ்டி சமுதாயத்தை சேர்ந்தவர். ராகுல் நடவடிக்கையால் எனது கண்ணியமும், சுய மரியாதையும் பாதிக்கப்பட்டு உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் பெண் எம்.பி., கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

தாமரை மலர்கிறது
டிச 20, 2024 00:52

ஈவ் டீசிங் கேசில் ராகுலை புக் பண்ணுங்க.


M.Selvam
டிச 19, 2024 20:16

நம்புகிற மாதிரியே இல்ல..யாரோ மண்டபத்தில் எழுதிக் கொடுத்தது போல இருக்கு..உண்மை வெல்லட்டும்...


GMM
டிச 19, 2024 19:39

ராகுல் விளையாட்டு பிள்ளை.


பேசும் தமிழன்
டிச 19, 2024 19:34

பெண் பாராளுமன்ற உறுப்பினரிடம் போய்... பயமுறுத்தும் வகையில் நடந்து கொண்டு இருக்கிறார்


Dharmavaan
டிச 19, 2024 17:13

ரௌடிகள் எல்லாம் காங்கிரஸ் திமுக கூட்டத்தில்


HoneyBee
டிச 19, 2024 16:44

காலாகாலத்தில் நடக்க வேண்டியது நடந்து இருந்தால் புத்தி இப்படி போகாது


என்றும் இந்தியன்
டிச 19, 2024 16:25

காங்கிரஸ் ஆளும் மாநிலமான தெலங்கானாவில் அல்லு அர்ஜுன் ஐதராபாத்தில் சினிமா தியேட்டரில் நடந்த தள்ளுமுள்ளுவில் ஒரு என் இறந்ததாக கைது செய்யப்பட்டார். அவருக்கும் ந்த தள்ளுமுள்ளுவுக்கும் சம்பந்தமேயில்லை என்றபோதிலும். அப்போ பாராளுமன்றத்தில் நடந்த ராகுல் தள்ளிவிட்டதால் அந்த எம்பி இன்னொரு எம்பி மீது விழுந்து அந்த எம்பியின் மண்டையில் காயம். அப்போ ராகுல்யையும் கைது செய்ய வேண்டும். என்ன ரூ 200 உபிஸ் ஏற்கனவே ரெண்டு கருத்து ராகுல்காந்திக்கு டப்பா அடித்து இருக்கின்றது


Suppan
டிச 19, 2024 15:45

அந்த ஆசாமியின் வளர்ப்பு அப்படி. இன்னொரு அங்கத்தினரை கீழே விழவைத்தார். இதெல்லாம் என்ன மாதிரியான மனநிலை ?


p.s.mahadevan
டிச 19, 2024 15:41

சபை நடவடிக்கைகள் மிகவும் அருவருத்தக்கதாக உள்ளது. இவர்களை கேட்பதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை என்பது இவர்களுக்கு பலமாக உள்ளது. மக்கள் நலனில் அக்கறை இல்லாதவர்களை தேர்ந்து எடுத்தவர்கள் தான் வெட்கி தலை குனிய வேண்டும்.


M.Selvam
டிச 19, 2024 20:19

ஆமா மூன்றாவது முறையாக தேர்ந்தெடுத்த மக்கள் மோசம் என்று சொல்லும் நேர்மை உண்மை..


Subramanian N
டிச 19, 2024 15:40

ராகுல் ஒரு மன வளர்ச்சி அடையாத நபர். அவரை ஒரு நல்ல பள்ளி கூடத்தில் சேர்க்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை