பெண் மருத்துவ அதிகாரி சந்தேக மரணம்
மைசூரு : மாண்டியாவின் கவுடகெரே கிராமத்தைச் சேர்ந்தவர் டாக்டர் வித்யாதரே, 42. இவர், செலுவாம்பா மருத்துவமனையில் தலைமை மருத்துவ அதிகாரியாக பணியாற்றினார். இவரது கணவர் டாக்டர் சண்முகம், 47. இவர், கே.ஆர்., மருத்துவமனையில், பிரபல எலும்பு நிபுணராக பணியாற்றுகிறார். இவர்களுக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகின்றன.மைசூரின் ஆர்.டி.ஓ., சதுக்கம் அருகில், லட்சுமிபுரத்தில் உள்ள டென்மார் அபார்ட்மென்டில் வசித்தனர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.தம்பதிக்கிடையே பல ஆண்டுகளாக மனக்கசப்பு இருந்துள்ளது. தன் தாய் வீட்டுக்கு சென்றிருந்த வித்யாதரே, நேற்று முன் தினம் மைசூரு வந்தார். நேற்று காலை சந்தேகத்துக்கு இடமாக இறந்து கிடந்தார். தங்கள் மகளை, மருமகன் சண்முகம் கொலை செய்துள்ளார் என, வித்யாதரே பெற்றோர், போலீசாரிடம் புகார் செய்துள்ளனர்.