உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டாக்டரிடம் ரூ.30 கோடி மோசடி: சினிமா தயாரிப்பாளர் விக்ரம் பட், மனைவி மும்பையில் கைது

டாக்டரிடம் ரூ.30 கோடி மோசடி: சினிமா தயாரிப்பாளர் விக்ரம் பட், மனைவி மும்பையில் கைது

மும்பை: டாக்டரிடம் ரூ.30 கோடி மோசடி புகாரில் சினிமா தயாரிப்பாளர் விக்ரம் பட், அவரது மனைவியை ராஜஸ்தான் போலீசார் மும்பையில் கைது செய்தனர்.இந்தி சினிமாவில் தயாரிப்பாளராக உள்ள விக்ரம் பட், அவரது மனைவி ஸ்வேதாம்பரி பட், உள்ளிட்ட 6 பேர் மீது, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரை சேர்ந்த இந்திரா குழும நிறுவனங்களின் நிறுவனர் டாக்டர் அஜய் முர்டியா, ரூ.30 கோடி மோசடி செய்ததாக போலீசில் புகார் அளித்தார்.அந்த புகாரில், பயோபிக் சினிமா உள்ளிட்ட சில திரைப்படங்களில் முதலீடு செய்தால் ரூ.200 கோடி வரை லாபம் சம்பாதிக்கலாம் என்று உறுதி அளித்து ரூ.30 கோடிக்கும் அதிகமாக மோசடி செய்துவிட்டார்கள். உறுதி அளித்தபடி லாபம் கிடைக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தார். இதனை தொடர்ந்து விக்ரம் பட், அவரது மனைவி ஆகியோரை மும்பையில் ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூர் போலீசார் கைது செய்தனர்.இந்த வழக்கு தொடர்பாக இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.விக்ரம் பட் மறுப்பு:இந்த குற்றச்சாட்டுகளை நான் மறுக்கிறேன்.எங்கள் மீது சுமத்தப்பட்ட எப்ஐஆர் ஆதாரமற்றது, தவறானது. டாக்டர் முர்டியாவே திரைப்படத் திட்டத்தை பாதியில் நிறுத்திவிட்டதாகவும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்குப் பணம் கொடுக்கத் தவறிவிட்டார் என்று விக்ரம் பட் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்