உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 10 கி.மீ., தொலைவில் கட்டப்படும் கட்டடம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியவருக்கு அபராதம்

10 கி.மீ., தொலைவில் கட்டப்படும் கட்டடம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியவருக்கு அபராதம்

புதுடில்லி:தான் குடியிருக்கும் வீட்டிலிருந்து, 10 கி.மீ., தொலைவில் கட்டப்படும் கட்டடம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொடர்ந்த வழக்கில், வழக்கு தொடர்ந்தவருக்கு, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.டில்லி வசந்த் விஹார் பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர், அங்கிருந்து, 10 கி.மீ., தொலைவில் உள்ள மெஹ்ராலி என்ற இடத்தில் கட்டப்படும் கட்டடம் ஒன்றை சட்ட விரோதமாக அறிவித்து, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்த நபருக்கு, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, அந்த பணத்தை டில்லி உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் நல அறக்கட்டளைக்கு வழங்க உத்தரவிட்டது.முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி மினி புஷ்கர்ணா உத்தரவிட்டதாவது:வழக்கு தொடர்ந்த நபர் சென்று வந்த பாதையில் இருந்த ஐந்து மாடி கட்டடத்தை, ஆறு மாடியாக அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அவர் சென்று வர, இடையூறாக இருந்ததால், அந்த கட்டடத்தை சட்ட விரோதமாக கட்டப்படுவதாக இந்த நபர் வழக்கு தொடர்ந்துள்ளார்.தனிப்பட்ட காரணங்களுக்காக இன்றி, இதில் பொதுநலன் எதுவும் இல்லை. எனவே, இத்தகைய வழக்கு தொடர எவ்வித அடிப்படையும் இந்த நபருக்கு இல்லை. அவர் வசிக்கும் வீட்டிலிருந்து, 10 கி.மீ., தொலைவில் இந்த கட்டடம் உள்ளது. அவர் தொடர்ந்த வழக்கில், தவறான நோக்கம் இருப்பது அம்பலமாகியுள்ளது. எனவே, அவருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ