உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஐஸ்கிரீமில் கிடந்த விரல்: யாருடையது என கண்டுபிடிப்பு

ஐஸ்கிரீமில் கிடந்த விரல்: யாருடையது என கண்டுபிடிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மும்பையில் 'ஆன்லைன்' வாயிலாக, 'ஆர்டர்' செய்த ஐஸ்கிரீமில் விரல் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. தற்போது, ஐஸ்கிரீம் ஆலையில் பணிபுரிந்த ஊழியரின் விரல் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மஹாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்தவர் டாக்டர் ஓர்லெம் பிரெண்டன் செராவ், (வயது 26). மும்பையின் மலாட் பகுதியில் வசித்து வருகிறார். இவர் ஆன்லைனில் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்தார். டாக்டர் ஓர்லெம், பாதி ஐஸ்கிரீம் சாப்பிட்டு முடித்தபின் உள்ளே வித்தியாசமான பொருள் தட்டுப்பட்டது. அது நகத்துடன் இருந்ததால், மனித விரல் என்பது தெரியவந்தது. இவர் போலீசில் புகார் அளித்தார். அந்த விரல் தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது அந்த விரல் யாருடையது என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது ஐஸ் கிரீம் ஆலையில் வேலை பார்த்து வந்த ஒருவர் சமீபத்தில் ஆலையில் நடந்த விபத்தில் தனது விரலை இழந்துள்ளார். அந்த நபரின் டி.என்.ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனையில் விரலில் உள்ள டி.என்.ஏ.வும், அந்த நபரின் டி.என்.ஏ.,வும் ஒத்துபோகும் பட்சத்தில் இந்த மர்மத்துக்கு முழுமையான விடை கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

S Sivakumar
ஜூன் 19, 2024 18:03

இந்த செய்தி பதிவு செய்த தினமலர் நிறுவனத்திற்கு நன்றி. இதை ஒரு செய்தியாக மட்டும் பார்க்காமல் ஒரு ஐஸ்கிரீம் தயாரிப்பாளர் எள்ளளவும் சமுதாய பொறுப்பு இல்லாமல் அந்த பேட்ச் மொத்த ஐஸ்கிரீமை ஒதுக்கிவிட்டு நன்றாக அனைத்து உபகரணங்கள் ஸ்டெர்லைட் செய்து பின்னர் புது பேட்ச் செய்யாமல் இருந்தமையால் நிகழ்வுகள். நிர்வாகம் கொடுங்கோலன் ஆக இருக்கும் பட்சத்தில் அந்த ஊழியர் தன் விரல் அறுபட்ட இதை மறைத்து இருக்க வேண்டும். நடவடிக்கை தேவை மிகவும் வருந்துகிறேன்.


Indhuindian
ஜூன் 19, 2024 15:45

விறல் துண்டானதுகூட தெரியாம செய்யற வேளையிலே கண்ணும் கருத்துமா இருந்திருக்காரு அந்த ஐஸ் கிரீம் துண்டான விரலோடு பேக் செஞ்சு ஆன்லைன் ஷாப் கோடௌனுக்கு போயி அது அங்கேந்து யாரோ பண்ண ஆர்டருக்கு டெலிவரி செய்யறவரைக்கும் விறல் துண்டானது தெரியலையா இல்லே ஆறடி விசாரத்துலே ஒரு அரை இஞ்சி போனபோகட்டும் விட்டுட சொன்னார்களா கேவலம்


Ms Mahadevan Mahadevan
ஜூன் 19, 2024 13:48

அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூன் 19, 2024 13:01

துண்டான விரல் எங்கே என்று கண்டுபிடிக்காமல் ஆலை நிர்வாகம் மற்றும் பணிபுரிந்த சக தொழிலாளர்கள் எவ்வளவு அஜாக்கிரதையாக இருந்துள்ளார்கள் என்று பார்க்கவும். நிர்வாகம் மற்றும் தொழிலாளர்களுக்கு பணம் தான் முக்கியமாக போய்விட்டது. ஐஸ்கிரீமுக்குள் இருந்ததால் விரல் கெடாமல் துர்நாற்றம் வீசாமல் இருந்து உள்ளது.


Palanisamy Sekar
ஜூன் 19, 2024 12:51

சுகாதார முறைப்படி விரலை சுத்தப்படுத்தி இனாமாக அனுப்பி வைத்துள்ளனர். இதுதான் நமது தொழிலின் தரம். விரலை இழந்திருந்தால் அதனை எப்படி தேடிப்பார்க்காமல் விட்டுவைத்திருப்பார்கள்? இங்கே மனிதாபினமானமும் காணவில்லையே. இதுபோல பல்லாயிரம் கடைகள் சுகாதாரத்தில் உள்ளன .


மேலும் செய்திகள்













முக்கிய வீடியோ