மேலும் செய்திகள்
தீபாவளி நாளில் 6 தீ விபத்துகள்
02-Nov-2024
பவானா:டில்லி நாற்காலி தொழிற்சாலையில் நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை.டில்லியின் புறநகர் பகுதியான பவானாவின் பி பிளாக்கில் நாற்காலி தொழிற்சாலை உள்ளது. இங்கு நேற்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.தீ விபத்து குறித்து அதிகாலை 5:30 மணியளவில் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து, 22 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன.சம்பவ இடத்திற்கு சென்ற பிறகு, மூன்று மாடி கட்டடத்தில், அலுவலக நாற்காலிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுப்படுத்தப்பட்டது.இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
02-Nov-2024