உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மணிப்பூர் தலைமை செயலக அலுவலக வளாகத்தில் தீ விபத்து

மணிப்பூர் தலைமை செயலக அலுவலக வளாகத்தில் தீ விபத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இம்பால்: மணிப்பூரில் தலைமை செயலக அலுவலக வளாகத்தில் இன்று ( 15.06.2024) மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மணிப்பூர் தலைநகர் இம்பாலில் அரசு தலைமை செயலகம் உள்ளது. இவ்வலுவக வளாகத்தில் இன்று ( 15.06.2024) திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதன் அருகே உள்ள முதல்வர் பங்களாவிலும் தீ பற்றி கொண்டது. தீ மேலும் பரவியதால், அங்கு பரபரப்பு காணப்படுகிறது. தகவலறிந்த தீயணைப்பு படையினர் வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைக்க போராடி வருகின்றனர். மணிப்பூரில் கூக்கி, மெய்டி பழங்குடியினரிடையே ஒராண்டுக்கு மேலாக நடைபெற்று வரும் மோதல் வன்முறையாக மாறியுள்ளதால் அங்கு தினம் தினம் கலவரம் தொடர்கதையாகி வரும் நிலையில், இன்று ( 15.06.2024) மணிப்பூர் தலைமை செயலக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்தில் உயிர்சேதம் குறித்த தகவல் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி