மேலும் செய்திகள்
கொலைவெறி பிடித்தவர் யூனுஸ்: ஷேக் ஹசீனா விமர்சனம்
38 minutes ago
ரயில் பயணியர் பாதுகாப்புக்கு மனித வடிவ ரோபோ அறிமுகம்
2 hour(s) ago
திருப்பரங்குன்றம் விவகாரம்: அறநிலையத்துறைக்கு நோட்டீஸ்
3 hour(s) ago | 1
மும்பை: மஹாராஷ்டிரா மாநிலம் தானே நகரில் சிவசேனா தலைவர் மகேஷ் கெய்க்வாட் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய பா.ஜ., எம்.எல்.ஏ., கண்பத் கெய்க்வாட் கைது செய்யப்பட்டார்.மஹா., மாநிலம் தானே மாவட்டம், கல்யாண் தொகுதி பா.ஜ., எம்.எல்.ஏ. கண்பத் கெய்க்வாட். இவருக்கும் சிவசேனா கட்சியின் கல்யாண் தொகுதி பொறுப்பாளர் மகேஷ் கெய்க்வாட்டுக்கும் இடையே நிலத்தகராறு இருந்துள்ளது. இது தொடர்பாக, உல்ஹாஸ் நகர் பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிப்பதற்காக எம்.எல்.ஏ., கண்பத் கெய்க்வாட்டின் மகன் சென்றுள்ளார். தகவல் அறிந்த் எம்.எல்.ஏ., கண்பத் கெய்க்வாட்டும் போலீஸ் ஸ்டேஷன் சென்றார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=y654ua75&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கல்யாண் தொகுதி பொறுப்பாளர் மகேஷ் கெய்க்வாட் தனது ஆதரவாளர் உடன் வந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். அப்போது கைகலப்பு ஏற்பட, எம்.எல்.ஏ. கண்பத் கெய்க்வாட் தனது துப்பாக்கியை எடுத்து சுட்டதில், மகேஷ் கெய்க்வாட் மற்றும் அவரது உதவியாளர் ஆகியோர் காயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய பா.ஜ., எம்.எல்.ஏ., கண்பத் கெய்க்வாட் கைது செய்யப்பட்டார்.
38 minutes ago
2 hour(s) ago
3 hour(s) ago | 1