உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீருக்கு முதல் முறையாக சரக்கு ரயில் சேவை ; பிரதமர் பெருமிதம்

காஷ்மீருக்கு முதல் முறையாக சரக்கு ரயில் சேவை ; பிரதமர் பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பஞ்சாப்பில் இருந்து காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு முதல்முறையாக சரக்கு ரயில் சேவை தொடங்கப்பட்டதற்கு பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். செனாப் நதியின் மீது கட்டப்பட்ட புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி கடந்த ஜூன் மாதம் திறந்து வைத்தார். அதன்பிறகு, முதல்முறையாக, காஷ்மீருக்கு ரயில் சேவை வழங்கப்பட்டது. இந்த நிலையில், பஞ்சாப்பிலிருந்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் புதிதாக தொடங்கப்பட்ட அனந்த்நாக் சரக்கு கிடங்கிற்கு முதல் சரக்கு ரயில் இன்று வந்தடைந்தது.இது குறித்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், 'இந்தியாவின் பிற சரக்கு ரயில் போக்குவரத்துடன் காஷ்மீர் பள்ளத்தாக்கையும் இணைத்ததில் மகிழ்ச்சியளிக்கிறது. மேலும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழும் மக்களின் ரயில் போக்குவரத்துச் செலவை குறைக்கும்,' என்று எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டிருந்தார். அவரது இந்தப் பதிவை பகிர்ந்த பிரதமர் மோடி,' ஜம்மு காஷ்மீரின் வர்த்தகம் மற்றும் தொடர்புக்கும் மிகவும் சிறப்பான நாள். இப்பகுதியின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் மக்களின் வளமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும்,' எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

M Ramachandran
ஆக 09, 2025 21:36

நம் நாட்டில் உள்ள மக்கள் சுதந்திரம் அனுபவிக்க சில சட்டங்கள் வழி வகுக்கிறது. அதை சிலர் ஒரு அயல் நாட்டு அடிமை குடும்பம் அதன் தலைமையில் இயங்கும் ஒரு கட்சி தவறாக நாட்டிற்கு எதிராக தீவிர வாதிகளுடைய கைய்ய கோர்த்து அவர்கள் குரலாக பேசி கொண்டிருக்கு. அதே காரணமாக சில பிராந்திய கட்சிகளுக்கும் ஒட்டு பொறுக்க நாட்டிற்கு விரோதமான தீவிர வாதிக்கும்பளை போஷித்து வருவதால்பல போது மக்கள் உயிர் இழக்றார்கள். மக்களாக பார்த்து இந்த கும்பலைய்ய இனம் கண்டு துரத்தினால் அன்றி நம் சட்டத் தால் அவர்கலிய்ய கட்டு படுத்த முடியாது


சிவம்
ஆக 09, 2025 21:15

மகிழ்ச்சியான விஷயம்தான். ஆனால் பெஹெல்காம் தாக்குதலுக்கு பிறகு மக்களிடையே ஒரு விதமான சோர்வு வந்து விட்டது. இந்தியாவின் மற்ற இடங்களுக்கு சகஜமாக வியாபார நோக்குடன் சென்று வருவது போல காஷ்மீருக்கு செல்ல எப்போது துணிவு வருகிறதோ அப்போதுதான் அந்த மாநிலத்தின் பொருளாதாரம் வலுவடையும்.


Ramesh Sargam
ஆக 09, 2025 20:05

மோடிஜியின் ஆட்சியில் இதுபோன்ற வளர்ச்சிகள் எதிர்கட்சியினருக்கு பிடிப்பதில்லை. அட, விட்டுத்தள்ளுவோம் அவர்களை. தொடர்ந்து ஆதரிப்போம் மோடிஜி அவர்களை.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஆக 09, 2025 21:16

ஆம் இதற்கும் ஏதாவது தொட்ட கதை சொல்வார்கள்.... கஷ்மீரிகள் பாஜகவை ஆதரிக்க வேண்டாம் கொஞ்சமாச்சும் தாய்நாட்டு பற்று இருக்க வேண்டும் இருக்குமானால் அவர்களது வாழ்க்கை மோடிஜியின் ஆட்சியிலே சுபீட்சம் அடையும்.....!!!


SUBBU,MADURAI
ஆக 10, 2025 09:23

அருமையான கருத்து


முக்கிய வீடியோ