உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ.,வில் இணைந்தார் முன்னாள் துாதரக அதிகாரி

பா.ஜ.,வில் இணைந்தார் முன்னாள் துாதரக அதிகாரி

அமெரிக்காவுக்கான இந்திய துாதராக பணியாற்றியவர் தரன்ஜித் சிங் சந்து, 61. கடந்த ஜனவரியில் அந்த பதவியில் இருந்து ஓய்வுபெற்ற இவர், நேற்று பா.ஜ.,வில் இணைந்தார்.புதுடில்லியில் பா.ஜ., தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில், கட்சியின் பொதுச் செயலர்கள் வினோத் தாவ்டே, தருண் சுக் ஆகியோர் முன்னிலையில் தரன்ஜித் சிங் பா.ஜ.,வில் இணைந்தார். வரும் லோக்சபா தேர்தலில் இவர், பஞ்சாபின் அமிர்தசரஸ் தொகுதியில் இருந்து போட்டியிட இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தரன்ஜித் சிங் கூறுகையில், “பிரதமர் மோடி தலைமையிலான அரசு பல துறைகளின் வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது. அது போன்ற வளர்ச்சி என் சொந்த ஊரான அமிர்தசரசையும் அடைய வேண்டும்,” என்றார்.

முன்னாள் துாதரக அதிகாரியும் ஐக்கியம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

venugopal s
மார் 20, 2024 16:50

ஆளுநர் பதவிக்கு பாஜகவில் கடும் போட்டி நிலவுகிறது!


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 20, 2024 12:43

எங்க யாவாரம் நல்லா போயிட்டிருக்கோ அங்கதான் சேருவோம் .....


Arul Narayanan
மார் 20, 2024 09:49

இப்படி திடீர் அரசியல் வாதிகளுக்கே வாய்ப்பு கொடுத்தால் கட்சிக்கு உழைப்பவர்களுக்கு ஊக்குவிப்பு இருக்காதே


jayvee
மார் 20, 2024 10:10

அது கழக அரசியல்..


Ramesh Sargam
மார் 20, 2024 07:58

அருமையான முடிவு. வாழ்த்துக்கள்.


J.V. Iyer
மார் 20, 2024 07:12

நல்லவர்களும், நேர்மையானவர்களும், நியாயமாக நடப்பவர்களும் பாஜகவில் சேர்வதில் வியப்பென்ன?


தாமரை மலர்கிறது
மார் 20, 2024 01:49

நாடு வளர்ச்சியடைந்து வருவதை பார்த்து ஒவ்வொரு அதிகாரியும் மற்றும் நீதிபதிகளும் அரசியலில் ஈடுபட ஆசைப்படுகிறார்கள். தாங்களும் நாட்டின் வளர்ச்சியில் பங்கேற்கவேண்டும் என்று எண்ணுகிறார்கள். அதனால் பிஜேபி கட்சியில் சேர்ந்து மற்ற அதிகாரிகளுக்கும் நீதிபதிகளுக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறார்கள். சபாஷ்.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி