உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அய்யப்பன் கோவில் தங்கம் மாயமான வழக்கில் மாஜி அதிகாரி கைது

அய்யப்பன் கோவில் தங்கம் மாயமான வழக்கில் மாஜி அதிகாரி கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பத்தனம்திட்டா: கேரளாவின் சபரிமலை அய்யப்பன் கோவிலில் தங்கம் மாயமான வழக்கில், தேவஸ்தான முன்னாள் நிர்வாக அதிகாரி முராரி பாபுவை எஸ்.ஐ.டி., எனப்படும் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்தனர். கேரளாவின் பத்தனம்திட்டாவில் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. கருவறை முன்பாக உள்ள துவாரபாலகர்கள் சிலை மற்றும் கதவுகளில் பதிக்கப்பட்ட தங்கக் கவசங்களை புதுப்பிக்கும் பணி, 2019ல் நடந்தது. விசாரணை பணிகள் முடிந்து, திருப்பி தரப்பட்ட போது, 4.50 கிலோ தங்கம் மாயமானது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக, சபரிமலை அய்யப்பன் கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் உறுப்பினர்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தங்கம் மாயமான விவகாரத்தில் இடைத்தரகர் உன்னிகிருஷ்னன், தேவஸ்தான அதிகாரிகள் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில், உன்னிகிருஷ்ணன் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், தேவஸ்தான முன்னாள் நிர்வாக அதிகாரி முராரி பாபுவை சிறப்பு புலனாய்வு குழுவினர் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். முன்னதாக, செங்கனாசே ரியில் உள்ள அவரது இல்லத்தில், 10 மணி நேரத்துக்கும் மேலாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மனு தாக்கல் இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில், சிறப்பு புலனாய்வு குழு போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். கடந்த 2019ல், தங்கக் கவசங்கள் புதுப்பிக்கும் பணிக்கு கொண்டு செல்லும்போது, முராரி பாபு நிர்வாக அதிகாரியாக இருந்ததாகவும், இவரது பொறுப்பில் தான் கவசங்கள் வெளியே கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. தங்கம் மாயமானதை அடுத்து, தேவஸ்தான துணை கமிஷனராக இருந்த முராரி பாபு, சமீபத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

சிந்தனை
அக் 24, 2025 14:23

கொள்ளையடிக்க வந்த வெள்ளையன் கொள்ளையடிப்பவர்களுக்கு உதவி செய்யும் அடியாட்களை உருவாக்க ஒரு கல்வித் திட்டத்தை ஏற்படுத்தினான் கொள்ளையடிக்க வந்த வெள்ளையன் இன்றுவரை அது தான் நாட்டில் நடப்பில் இருக்கிறது பிறகு அந்தப் பாடத்திட்டத்தை படித்தவர்கள் எப்படித்தான் இருப்பார்களாம் திருடர்களை உருவாக்கும் திருடனின் கல்வித் திட்டம் சீக்கிரம் அழியட்டும்


Kalyan Singapore
அக் 24, 2025 12:13

இந்துக்கோவில்களில் சிலைத்திருட்டு என்று வரும்போது , ஆரியம், திராவிடம், இத்தாலியம் அமெரிக்கம், இங்கிலாந்தியம் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தாம்


duruvasar
அக் 24, 2025 12:05

தமிழ்நாடாக இருந்தால் ஐயப்பன் சிலையையே மாற்றியிருப்பார்கள். இதை ஏதோ மேங்கோ புளித்ததோ வாய் புளித்ததோ என சொல்லவில்லை. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மயில் சிலையை மாற்றிவைத்ததாக வழக்கு ஒன்று நிலுவலயில் இருப்பதாக ஞாபகம்.


M. PALANIAPPAN, KERALA
அக் 24, 2025 11:52

அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் கடவுள் சொத்தை திருடி தின்று யாரும் நன்கு வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை தப்பு செய்தவன் தண்டணை அணுபவித்தே ஆக வேண்டும்


Nalla
அக் 24, 2025 09:34

கடவுள் இல்லை என்பதற்கு இதை விட சாட்சியம் எதுவும் இருந்து விட முடியாது, அதிகாரி இதிலிருந்து மீள லஞ்சம் கொடுத்தால் மட்டும் பொதுமானது, இது திராவிட மாடல் இல்லை காசிமணி இது ஆரிய மாடல்


Matt P
அக் 24, 2025 08:49

சாமி ஏதப்பா பூதம் ஏதப்பா ...என்றால் இப்படி தான்.


Iyer
அக் 24, 2025 06:18

SIMPLE LIVING & HIGH THINKING என்ற பழமொழியின் பிரகாரம் வாழக்கற்றுக்கொள்ளுங்கள். அடுத்தவன் வாழும் LIFESTYLE ஐ நாமும் பின்பற்றி LUXURY வாழ்க்கை வாழ நினைப்பது பேராபத்தில் முடியும். அதுபோன்ற பேராசையும், பொறாமையும் நம்மை எந்தவித குற்றமும் செய்ய தூண்டும். நாம் வணங்கும் கடவுளிடமே திருடத்தயங்காதவன் ஆகிவிட்ட இவர்கள் மனம் திருந்தி உண்மையை ஒப்புக்கொண்டு திருடிய தங்கத்தை திருப்பித்தரவேண்டும். இவர்கள் திருடியது தங்கம் இல்லை. பலகோடி பக்தர்களின் கடவுள் நம்பிக்கை.


Kasimani Baskaran
அக் 24, 2025 04:04

திராவிட சிலை கடத்தும் நிபுணர்களிடம் கேட்டு இருந்தால் புட்டுப்புட்டு வைத்து இருப்பார்களே.. வெறும் 4 கிலோவுக்கு ஐயப்பன் மன்னிக்காமல் போய்விடவா போகிறார்...