உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹரியானவில் மூன்று சுயேட்சைகள் விலகல் : முதல்வர் நயாப் சிங் சைனி அரசுக்கு நெருக்கடி?

ஹரியானவில் மூன்று சுயேட்சைகள் விலகல் : முதல்வர் நயாப் சிங் சைனி அரசுக்கு நெருக்கடி?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: அரியானாவில் மூன்று சுயேட்சைகள் ஆதரவை விலக்கி கொள்ள முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியானதையடுத்து அங்கு பா.ஜ., முதல்வர் நயாப் சைனி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.ஹரியானா மாநிலத்தில் கடந்த 2019ம் ஆண்டு அக்டோபரில் சட்டசபை தேர்தலில் மொத்தம் 90 தொகுதிகளில் பா.ஜ., 40 இடங்களை கைப்பற்றியது. ஆட்சி அமைக்க 46 இடங்கள் தேவை என்பதால், 10 எம்எல்ஏக்களைக் கொண்ட ஜனநாயக ஜனதா கட்சி கூட்டணியை உருவாக்கி பா.ஜ., ஹரியானாவில் ஆட்சி அமைத்தது. பா.ஜ.,வின் மனோகர் லால் கட்டார் முதல்வராக பதவியேற்றார். இவர் கடந்த மார்ச் மாதம் மனோகர் லால் கட்டார் தனது பதவியை ராஜினாமா செய்தையடுத்து ஹரியானா மாநில பா.ஜ., தலைவர் நயாப் சிங் சைனி கடந்த மார்ச் மாதம் முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில் இன்று (07.05.2024) அரியானா அரசியலில் திடீர் திருப்பமாக மூன்று சுயேட்சைகள் பா.ஜ.,வுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்று காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ஹரியானாவில் முதல்வர் நயாப் சிங் சைனி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Anantharaman Srinivasan
மே 08, 2024 00:28

ரூபாய் நோட்டு பரிமாற்றம் நடந்த பிறகு கிடைத்த மிதமிஞ்சிய பணத்தை வைத்துக்கொண்டு ஆடுகின்ற ஆட்டத்திற்கு கூடிய சீக்கிரம் மக்கள் முடிவு கட்டுவார்கள்


கல்யாணராமன்
மே 07, 2024 21:27

ஒன்றும் ஆகாது, காங்கிரஸ் கட்சியின் , உறுப்பினர்கள் ராஜினாமா செய்து விடுவார்கள்


Pats, Kongunadu, Bharat, Hindustan
மே 07, 2024 21:16

எதிர்வரும் நவம்பர் மூன்றாம் தேதியுடன் ஹரியானா சட்டசபை முடிவுக்கு வருகிறது Attamandaதேர்தல் அறிவிப்பு விரைவில் velivarum


ஆரூர் ரங்
மே 07, 2024 20:56

எல்லா சுயேச்சை எம்எல்ஏ க்களும் அமைச்சர் பதவிகளை எதிர்பார்த்து மிரட்டுவது வழக்கம்தான். தேர்தல் நெருங்கும் இன்னும் உக்கிரமாக ஆகும்.


Velan Iyengaar
மே 07, 2024 20:45

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்


Duruvesan
மே 07, 2024 20:11

இது ஆரம்பம், ஜூன் பிஜேபி கூடாரம் காலி ஆகும் மினிஸ்டர் தேர்வு செய்ய உதய அண்ணா தலைமையில் விடியல் குழு அமைப்பார்


தாமரை மலர்கிறது
மே 07, 2024 20:02

சுயேட்சைகள் யார் பணம் கொடுக்கிறார்களோ, அவர்களிடம் ஓடுவார்கள் அமித் ஷா சாட்டையை முறுக்கினால், நாளையே மீண்டும் ஓடிவருவார்கள் சரியான ஓடுகாலிகள் மக்களிடம் எந்த நம்பிக்கையும் அவர்களுக்கு கிடையாது ஜூன் நாலாம் தேதி, தேர்தல் கமிஷனர் அரை மணிநேரத்தில் மோடி நானூற்றி ஐம்பது தொகுதிகளை கைப்பற்றிவிட்டார் என்று தீர்மானமாக சொல்வார் அப்போது இதே சுயேட்சைகள் பிஜேபியிடம் ஓடிவருவார்கள்


Velan Iyengaar
மே 07, 2024 20:47

சாட்டையை முறுக்குவதா ?? அடப்பாவிகளா ?? இதனை அகங்காரமா ?? இத்தணை ஆனவமா ?? ஜூன் நாலாம் தேதி எல்லாம் அடங்கிடும்


Narayanan Muthu
மே 07, 2024 21:06

குஜராத் மாடல் க்கு மார்க் கொடுத்தது போல் க்கு தொகுதிகளிலும் பாஜக வெற்றி என முதுகெலும்பில்லாத தேர்தல் ஆணையர்கள் அறிவிப்பார்கள் சரியான ஜோக்கர் வாசகர் போலெ


Arunkumar J
மே 07, 2024 19:57

சர்வாதிகாரம் ஜனநாயகம்நா என்ன என்று தெரியாத தமிழர்கள் எல்லாம் கருத்து சொல்ல வந்துட்டானுங்க நம்நாட்டில் சர்வாதிகாரமோ ஜனநாயகமோ இருந்ததில்லை ஆனால் அடிமைத்தனம் எப்போதும் இருக்கிறது மன்னனுக்கு, அரசியல்வாதிக்கு, மதத்தலைவருக்கு மக்களுக்கு இதை புரியாமலே வைத்திருப்பதே சர்வாதிகாரிகளின் வெற்றி


Narayanan Muthu
மே 07, 2024 19:54

காங்கிரஸ் உறுப்பினர்களை பாஜகவில் சேர செய்து பாஜகவுக்கு மக்களிடையே ஆதரவு இருப்பதாக காட்டி ஒரு மாயையை உருவாக்க பாஜக முயற்சிக்கிறது ஆனால் சண்டிகரில் நடந்ததுதான் நிதர்சனம் அதிகாரம் பணம் இதையும் தாண்டி இது தானா சேர்ந்த கூட்டம் என்பதை மக்களும் புரிந்துகொண்டுள்ளார்கள்


Syed ghouse basha
மே 07, 2024 19:27

இந்தியா கூட்டணி வெற்றி உறுதியை காட்டுகிறது


SANKAR
மே 07, 2024 19:46

ஏம்பா இந்தியா கூட்டணி தலைவர்கள் எல்லோருமே ஊழல் நிறைந்தவர்கள் என்பது உனக்கும் எனக்கும் தெரியும்ஊருக்கே தெரியும்அப்படி இருந்தும்நீ அவர்களுக்கு சப்போர்ட் செய்தால் என்ன அர்த்தம்??


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ