வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இந்த ரீல்ஸ் கம்பெனி வந்து அவர்களுக்கு இழப்பீடு கொடுக்குமா ?
ரீல்ஸ் மோகம், பலருக்கு பரலோகம். மக்களின் அலட்சியம் இன்று பல உயிர்கள் இப்படி பரிதாபமாக போவதற்கு முக்கிய காரணம். மக்கள் திருந்தவேண்டும்.
புர்னியா : பீஹாரில், மொபைல் போனில் 'ரீல்ஸ்' எடுக்க முயன்ற நான்கு இளைஞர்கள், அவ்வழியாக சென்ற வந்தே பாரத் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பீஹார் மாநிலம் புர்னியா என்ற பகுதியைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள், அங்கு நடந்த துர்கா பூஜை நிகழ்வில் பங்கேற்ற பின் தங்கள் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது வழியில், ரயில் தண்டவாளத்தில் நின்றபடி ஓடும் ரயில்களை, தங்கள் மொபைல் போன்களில் ரீல்ஸ்களாக எடுத்து, சமூக வலைதளத்தில் பதிவேற்ற முயன்றனர். எதிர்பாராதவிதமாக அவர்கள் மீது, பீஹாரின் ஜோக்பானியில் இருந்து தானாபூர் நோக்கி சென்ற வந்தே பாரத் ரயில் மோதியது. இதில், துாக்கி வீசப்பட்ட நான்கு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மற்றொரு நபர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த ரீல்ஸ் கம்பெனி வந்து அவர்களுக்கு இழப்பீடு கொடுக்குமா ?
ரீல்ஸ் மோகம், பலருக்கு பரலோகம். மக்களின் அலட்சியம் இன்று பல உயிர்கள் இப்படி பரிதாபமாக போவதற்கு முக்கிய காரணம். மக்கள் திருந்தவேண்டும்.